ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

பாலின பாகுபாட்டை திறமையால் ஜெயிக்கலாம்!

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

கடந்த அத்தியாயத்தில் ஆண் - பெண் நட்பை அலுவல் சூழலில் எந்த எல்லைக்குள் கையாள வேண்டும் என்று பார்த்தோம். இந்த அத்தியாயத்தில், `ஆணால் இந்த வேலையைப் பார்க்க முடியும், பெண்ணால் முடியாது’ என்ற ஸ்டீரியோடைப்பை உடைத்து, பணியிடத் தில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய சூழல்களைப் பார்ப்போம்.

பெண் என்பதாலேயே பணியில், பணி உயர்வில், சம்பளத்தில் பாகுபாடுகள் காட்டப் படும்போது எப்படி அதை எதிர்க்க வேண்டும் என்பதுடன், எந்தவிதத்திலும் பெண் என்ற பாலினம் உங்கள் பணியில் எதிரொலிக்காத படி எப்படி நம்மை வார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் அவசியம்.

``அலுவலகச் சூழலில் பெண்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்களுடன் ஒப்பிடும்போதும் தாங்கள் பின்தங்கியிருக்கிறோம் என்ற எண்ணத்தை யும், அதனாலேயே சக ஆண் பணியாளர்கள் சொல்வதற்கெல்லாம் ஓகே சொல்லும் ஆட்டிட் போன்றவற்றையும் மாற்றிக் கொள்வது அவசியம்’’ என்கிறார் சென்னை யைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டாளர் யூனிஸ் யாமினி. பாலின பாகுபாடுகளைக் கடந்து அங்கீகாரம் பெற பெண்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார் அவர்.

  யூனிஸ் யாமினி
யூனிஸ் யாமினி

``வெளிப்படையாக இருக்கிறேன் என்ற பெயரில் உங்களின் பர்சனல் விஷயங்களை யாரிடமும் பகிராதீர்கள். அலுவலகத்தில் யாரிடமும், எந்தச் சூழலிலும் பணிசார்ந்து மட்டுமே அணுகுவது நல்லது.

பணியிடத்தில் உங்களின் பலவீனங்களைக் காட்டிக்கொள்ளாதீர்கள். உங்களின் பலவீனம் தெரிந்தால் மற்றவர்கள் அதைப் பயன்படுத்தி உங்களை முந்திச் செல்வார்கள் அல்லது பொது இடத்தில் அவமானப்படுத்துவார்கள்.

நண்பன், தோழன், அண்ணன் என்றெல் லாம் உரிமை எடுத்துக்கொண்டு சிலர் உங்களிடம் ஒருமையில் பேச முனைவதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். மற்றவர்கள் உங்களை எப்படி அழைக்க வேண்டும் என்பதை உங்களின் முதல் சந்திப்பிலேயே தயக்கமின்றி தெரியப்படுத்திவிடுங்கள்.

பணியிடம் வழங்கும் விடுமுறை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது தான். எனவே பெண்கள் விடுமுறை தேவைப்படும்போது பர்சனல் காரணங்களைச் சொல்லத் தேவையில்லை. காரணம் சொல்லி தான் விடுமுறை கேட்க வேண்டும் என்று எந்த நிறுவனமும் விதிமுறைகள் விதிப்பது கிடையாது.

கேஷுவல் லீவா, சிக் லீவா (சி.எல், எஸ். எல்) என்பதை மட்டும் தலைமையிடம் தெரிவியுங்கள். விடுமுறைக்கான காரணம் கேட்கும் தலைமையிடம், ‘பர்சனல்’ என்ற ஒரு வார்த்தையில் முடித்துக்கொள்வது நல்லது.

சிங்கிள் மாம், குடும்ப பிரச்னை, துணை யில்லாத வாழ்க்கை... என நீங்கள் வேலைக்கு வருவதற்கான பர்சனல் காரணங்களைச் சொல்லி அனுதாபம் தேடாதீர்கள். மற்றவர் களின் அனுதாபம் நாளடைவில் உங்களுக்கே எதிராகத் திரும்பலாம். கவனமாக இருங்கள்.

பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை பாலின அடிப்படையில் இல்லாமல், திறமையின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதில் பாகுபாடு காட்டப் பட்டால் உங்கள் உரிமையை கேட்டுப் பெற தயங்காதீர்கள்.

பாலின பாகுபாட்டை 
திறமையால் ஜெயிக்கலாம்!

ஊதியத்தில் பாலின பாகுபாட்டை எதிர்க்கும் நீங்கள் உங்கள் பணியிலும் எப்போதும் சரியாக இருக்க வேண்டும். அலுவலக நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். பணியில் தவறுகள் நிகழ்வது இயற்கை. அது குறித்து உங்களின் தலைமை கண்டிக்கும்போது, உங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருத்திக்கொள்ள வேண்டும். அதைச் சமாளிக்க குடும்ப பிரச்னைகளை காரணங்களாக முன் வைக்கக்கூடாது.

அலுவலக சூழலில் எப்போதும், யாரிடமும் புறம்பேசாதீர்கள். வதந்திகளைப் பரப்பாதீர்கள். உங்களின் நண்பர்கள் மற்றவர்களை பற்றி உங்களிடம் பேச வந்தாலும் ஆர்வம்காட்டாமல் அதைத் தவிர்த்து விடுவது நல்லது.

அலுவலக சூழலில் பணி சார்ந்து சக ஊழியர்களுடனோ, தலைமையுடனோ மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். அதை உடனுக்குடன் தைரியமாக உடைத்துப்பேசி விடுவது உங்களின் ஆளுமையை உயர்த்தும்.

நீங்கள் அப்டேட் ஆகவில்லை, உங்களுக்கு ஒன்றும் தெரியாது என யாராவது மட்டம் தட்டினால் , உங்களைத் தாழ்த்திக்கொள்வதோ, அப்படிப் பேசியவர் பற்றி நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைப்பதோ கூடாது. தெரியாத விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள். உங்கள் பணிசார்ந்த விஷயங் களில் அப்டேட் ஆக தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஒதுக்கி, புதிய கோர்ஸ் படிப்பது, நண்பர்களிடம் பேசுவது என மெனக்கெடுங்கள்.

பாடி ஷேமிங்கையோ, பாலின வன்முறையையோ பொறுத்துக் கொள்ளாதீர்கள். சமூகம் பெண் களுக்கானதும்தான். துணிந்து எதிர்கொள்ளுங்கள். திறமையால் வெல்லுங்கள்.’’

ஆல் தி பெஸ்ட்!