Published:Updated:

கேரளா:`அப்பாவ பீரங்கி எடுத்துட்டு வரச்சொல்லு!'- 4 வயது மகனின் ஆசையை நிறைவேற்றிய ராணுவ வீரர்!

ராணுவ வீரரின் வீடு முன் அமைக்கப்பட்டுள்ள பீரங்கி
News
ராணுவ வீரரின் வீடு முன் அமைக்கப்பட்டுள்ள பீரங்கி

வீட்டின் உரிமையாளரான பிரவின் ராணுவத்தில் பணிபுரிவதால் ஒருவேளை அவர் பீரங்கி கொண்டுவந்து தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருக்கலாம் எனவும் சிலர் நினைத்தது உண்டு.

Published:Updated:

கேரளா:`அப்பாவ பீரங்கி எடுத்துட்டு வரச்சொல்லு!'- 4 வயது மகனின் ஆசையை நிறைவேற்றிய ராணுவ வீரர்!

வீட்டின் உரிமையாளரான பிரவின் ராணுவத்தில் பணிபுரிவதால் ஒருவேளை அவர் பீரங்கி கொண்டுவந்து தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருக்கலாம் எனவும் சிலர் நினைத்தது உண்டு.

ராணுவ வீரரின் வீடு முன் அமைக்கப்பட்டுள்ள பீரங்கி
News
ராணுவ வீரரின் வீடு முன் அமைக்கப்பட்டுள்ள பீரங்கி
கேரள மாநிலம் கொட்டாரக்கரா கரிப்பிறா பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டின் முற்றத்தில் ராணுவ பீரங்கி ஒன்று நிற்பதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். அந்த வீட்டின் உரிமையாளரான பிரவின் ராணுவத்தில் பணிபுரிவதால் ஒருவேளை அவர் பீரங்கி கொண்டுவந்து தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருக்கலாம் எனவும் சிலர் நினைத்தது உண்டு.

ஆனால், அது உண்மையான பீரங்கி இல்லை, தனது வீட்டின் கிணற்றை அவ்வாறு அவர் வடிவமைத்துள்ளது அப்பகுதி மக்களுக்கு தாமதமாகத்தான் புரிந்தது. ராணுவத்தில் பணிபுரிந்துவரும் பிரவின் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் அவரது 4 வயது மகன் ஆதிதேவ் தனக்கு ஒரு ராணுவ பீரங்கி வேண்டும் எனக்கேட்டு அடம்பிடித்து வந்துள்ளார். மகனின் ஆசையை நிறைவேற்ற ஏதாவது செய்யும்படி அவனது தாய் சரண்யாவும் கூறிவந்திருக்கிறார். இதையடுத்து மகனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக தான் புதிதாகக் கட்டும் வீட்டுக்கு காஷ்மீர் என பெயரிட்டதுடன், வீட்டுக்கு முன் வெட்டிய கிணற்றை ராணுவ பீரங்கி வடிவில் அமைத்து அசத்தியிருக்கிறார் பிரவின். சிமென்ட்டில் கட்டப்பட்ட ராணுவ டேங்கர் பீரங்கிக்கு பெயிண்டிங் பணி முடிந்ததும் பார்ப்பதற்கு அசல் பீரங்கி போன்றே காட்சியளிக்கிறது.

பீரங்கி முன் அதை வடிவமைத்த சிலா சந்தோஷ்
பீரங்கி முன் அதை வடிவமைத்த சிலா சந்தோஷ்

சிமென்ட்டில் செய்யப்பட்ட ராணுவ பீரங்கியை பார்த்த சிறுவன் ஆதிதேவ் ஏன் இது நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது எனக்கேட்டுக்கொண்டே இருக்கிறானாம். இதுகுறித்து சிறுவனின் தாய் சரண்யா கூறுகையில், "எனது கணவர் 11 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்துவருகிறார். டி.வி-யில் ராணுவ டேங்கர் பீரங்கியை பார்த்த எனது மகன் ஆதிதேவ் 'நம்ம ஆப்பாவும் மிலிட்டரியில்தானே இருக்கிறார், அவரிடம் ஒரு பீரங்கி கொண்டுவரச்சொல்லுங்கள்' என கேட்டுக்கொண்டே இருந்தான். மகனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அடூரைச் சேர்ந்த சிலா சந்தோஷ் என்பவர் மூலம் எங்கள் வீட்டு முற்றத்தில் ராணுவ பீரங்கி உருவாக்க முடிவு செய்தோம்.

களக்கூட்டம் சைனிக் பள்ளியின் முன் பக்கம் ராணுவத்தில் பயன்படுத்திய பழைய பீரங்கிகள் இரண்டு நிறுத்தப்பட்டுள்ளன. உரிய அனுமதி பெற்று அதை போட்டோ எடுத்து, அதே மாடலில் எங்களுடையது வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார். அடூரைச் சேர்ந்த சிலா சந்தோஷ் புதிய மாடல்களில் கிணறுகள், வீடுகள் வடிவமைத்து அசத்திவருகிறார். பீரங்கி செய்தது குறித்து சிலா சந்தோஷ் கூறுகையில், "ராணுவத்தில் பணிபுரியும் பிரவின் எனது நண்பர். அவர் புதிதாகக் கட்டும் வீட்டுக்கு காஷ்மீர் என பெயரிட்டுளார். வீட்டு முற்றத்தில் உள்ள கிணற்றின் மேல்பகுதியில் ராணுவ பீரங்கி போன்ற வடிவத்தை சிமென்ட் மூலம் உருவாக்கியுள்ளோம்.

பீரங்கி வடிவ கிணறு
பீரங்கி வடிவ கிணறு

பீரங்கியின் முன் பக்கக் குழாய்போன்ற பகுதிகாக ஜி.ஐ பைப் பயன்படுத்தியுள்ளோம். ஏற்கனவே நாங்கள் பல்வேறு மாடல்களில் கிணறுகள் வடிவமைத்துள்ளோம். இது எங்களின் 27-வது மாடல் கிணறு. அனைத்தும் கம்பி, வலை ஆகியவை பயன்படுத்தி சிமென்ட் மூலம் தயாரித்துள்ளோம். பீரங்கியின் பின் பக்கத்தில் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் பகுதி அமைத்துள்ளோம். சைனிக் ஸ்கூலில் உள்ள பீரங்கிகள் பெரிய அளவில் இருந்தன, அதே மாடலில் சிறிய அளவில் நாங்கள் இதைச் செய்துள்ளோம். மிகவும் தரமான பெயிண்ட் இதற்காக பயன்படுத்தியுள்ளோம். எதையும் எஸ்டிமேட் போட்டு நாங்கள் செய்வதில்லை. முழுமையாக பணி முடிந்தபிறகுதான் இதற்காக செலவு குறித்து முழுமையாக கூறமுடியும். நாட்டின் அனைத்து ராணுவ வீரர்களுக்காகவும் எனது இந்தப் பணியை அர்ப்பணிக்கிறேன்" என்றார்.