தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

மாமல்லபுரம் - மரபுச் சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாமல்லபுரம் - மரபுச் சிற்பங்கள்

உலகப்புகழ்பெற்ற பல்லவர் கால சிற்பங்கள், குடவரைக் கோயில்கள், மண்டபங்கள் போலவே, மாமல்லபுரத்தில் உருவாக்கப்படும் சிற்பங்களும் பிரசித்தி பெற்றவை.

குடியாத்தம் - தீப்பெட்டி

சிவகாசிக்கு அடுத்தபடியாக குடியாத்தத்தில்தான் தீப்பெட்டிகள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் இங்கிருந்தே தீப்பெட்டிகள் ஏற்றுமதியாகின்றன.

குடியாத்தம் - தீப்பெட்டி
குடியாத்தம் - தீப்பெட்டி
 பிச்சாண்டி
பிச்சாண்டி

‘‘இயந்திரம் மூலமாக சிறியதாக வெட்டப்படும் மரக்குச்சிகள், பாலீஷ் போடப்பட்டு, மெழுகு பதிந்த மருந்துக் குச்சிகளாக வெளிவரும். பிறகு, சிறிய அட்டையின் இருபக்கமும் சல்ஃபர், குளோரைடு போன்ற மருந்துக் கலவையைப் பதித்தபிறகு, அந்த அட்டைகளின் உள்ளே மருந்து அப்பிய தீக்குச்சிகள் அடுக்கப்படுகின்றன. ஒரு தீப்பெட்டியில் 50 தீக்குச்சிகள். கடைகளில் பத்து பாக்ஸ் தீப்பெட்டி 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாளொன்றுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தீப்பெட்டிகள் தயாரிக்கிறோம்'' என்கிறார் ஸ்ரீ அம்பிகா மேட்ச் ஃபேக்டரி உரிமையாளர் பிச்சாண்டி.

மாமல்லபுரம் - மரபுச் சிற்பங்கள்

லகப்புகழ்பெற்ற பல்லவர் கால சிற்பங்கள், குடவரைக் கோயில்கள், மண்டபங்கள் போலவே, மாமல்லபுரத்தில் உருவாக்கப்படும் சிற்பங்களும் பிரசித்தி பெற்றவை. 60 ஆண்டுகளுக்கு முன்பு, மாமல்லபுரத்தில் சிற்பக் கல்லூரி தொடங்கிய பின்னரே, இங்கு சிற்பத்தொழில் செழிக்கத் தொடங்கியது. 1500-க்கும் மேற்பட்ட சிற்பிகள் நேரடியாகச் சிற்பத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சிலரைத் தவிர்த்து, அனைவரும் மரபுச் சிற்பங்களே செய்கின்றனர்.

மாமல்லபுரம் - மரபுச் சிற்பங்கள்
மாமல்லபுரம் - மரபுச் சிற்பங்கள்

ஆகம விதிகள், கற்களின் தரம், கலைநயம் ஆகிய அம்சங்களால் மட்டுமே சிற்பங்களின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. மரபுச் சிற்பங்கள் தயாரிக்கச் சுற்றுவட்டாரப் பகுதிகளான சங்கராபுரம், பட்டிமலைக்குப்பம், சிறுதாமூர் போன்ற ஊர்களிலிருந்து கற்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்தியா மட்டுமல்ல... அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஸ்வீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இங்கிருந்து சிற்பங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

250 ரூபாயில் தொடங்கி உயரம், வேலைப்பாடுகளுக்கு ஏற்றாற்போல பல லட்ச ரூபாய் வரை சிற்பங்கள் கிடைக்கின்றன. மாமல்லபுரச் சிற்பக்கலைக்கு வலுசேர்க்கும் விதத்தில் கடந்த ஆண்டு, இதற்கான புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

அரியக்குடி - விளக்கு

‘காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள், பிரமாண்ட வீடுகளுக்கும் கோயில்களுக்கும் மட்டுமல்ல... தனித்துவமான அரியக்குடி விளக்குகளுக்கும் பெயர் பெற்றவை. இந்தக் கிராமம் முதலில் ‘ஹரியக்குடி’ என்று அழைக்கப்பட்டு, பிறகு மருவி அரியக்குடியானதாகக் கூறுகிறார்கள் உள்ளூர் மக்கள். காரைக்குடி வழியாகப் பயணிப்பவர்கள் இங்கு வந்து விளக்குகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

அரியக்குடி - விளக்கு
அரியக்குடி - விளக்கு
 மாரிக்கண்ணு
மாரிக்கண்ணு

``இங்கு தயாரிக்கப்படும் பித்தளை விளக்கின் உச்சி கும்ப வடிவிலும், அதனுடைய முகம் நட்சத்திர வடிவிலும், உடல் பகுதி பிடிப்பதற்குத் தோதாக குழல் போலவும் இருப்பதுதான் அரியக்குடி விளக்கின் சிறப்புத்தன்மை. இதன் கைப்பிடியின் உட்பகுதி முழுக்க பித்தளையால் நிரப்பப்படுவதால், விளக்கு நல்ல கனத்துடன் இருக்கும். ஐந்து இன்ச் முதல் ஐந்து அடி வரை ஆர்டரின் பேரில் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு கிலோ விளக்கு 800 ரூபாய்க்கு விற்கிறோம்'' என்கிறார் `சக்திப்பிரியா' நிறுவன உரிமையாளர் மாரிக்கண்ணு.