Published:Updated:

பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏபிவிபி முன்னாள் தலைவர் மருத்துவர் சுப்பையா கைது

மருத்துவர் சுப்பையா
News
மருத்துவர் சுப்பையா

தஞ்சை பள்ளி மாணவி விவகாரத்தில், முதலமைச்சர் வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரைச் சிறையில் சந்தித்ததாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறை தலைவர் பதவியிலிருந்து சுப்பையா ஏற்கெனவே நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ம் ஆண்டு, ஜூலை மாதம் சென்னையில் தனியாக வசித்த பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக, நங்கநல்லூர் ராம் நகரில் வசிக்கும் மருத்துவர் சுப்பையா என்பவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் காவல்துறை வழக்கு பதிவுசெய்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

புகாருக்கு உள்ளான மருத்துவர் சுப்பையா ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் அப்போதைய தலைவராக இருந்தார். இந்த நிலையில், பாதிப்புக்குள்ளான பெண் தரப்பைச் சேர்ந்த சிலர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வீட்டு வாசலில் சிறுநீர் கழிக்கும் காட்சிகள்
வீட்டு வாசலில் சிறுநீர் கழிக்கும் காட்சிகள்

இருதரப்பும் சமாதானமாகப் போய்விடுவது, பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டு, சுப்பையாவும் அப்பெண்ணும் காவல்துறையில் எழுதிக் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. இது தொடர்பாக அப்போது மருத்துவர் சுப்பையா தரப்பிடம் நமது விகடன் குழு பேசியபோது . ``புகார்மீது சமாதானமாகச் செல்வதாக இருதரப்பும் ஒப்புக்கொண்ட நிலையில், மேற்கொண்டு இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசுவதற்கு ஏதுமில்லை” என்றதோடு முடித்துக்கொண்டனர்.

கைது
கைது
சித்திரிப்புப் படம்

இந்த நிலையில் தஞ்சை பள்ளி மாணவி விவகாரத்தில் முதலமைச்சர் வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரைச் சிறையில் சந்தித்ததாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறை தலைவர் பதவியிலிருந்து சுப்பையா ஏற்கெனவே நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதம்பாக்கம் காவல்துறையினர் மருத்துவர் சுப்பையாவை வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாகக் கைதுசெய்துள்ளனர்.