Published:Updated:

``'முதலில் நான் ஒரு விவசாயி; பிறகுதான் அரசியல்வாதி' என்பேன்” - சுப்புலட்சுமி ஜெகதீசன்

சுப்புலட்சுமி ஜெகதீசன்
News
சுப்புலட்சுமி ஜெகதீசன்

``இன்று விவசாயத்தின் அருமையையும், அதன் முக்கியத்துவத்தையும் நம்முடைய அடுத்த தலைமுறைக்குச் சொல்லித்தர மறந்துவிட்டோம். விவசாயம் செய்வதையே கேவலம் என்று நினைக்கிறார்கள்.” - சுப்புலட்சுமி ஜெகதீசன்

Published:Updated:

``'முதலில் நான் ஒரு விவசாயி; பிறகுதான் அரசியல்வாதி' என்பேன்” - சுப்புலட்சுமி ஜெகதீசன்

``இன்று விவசாயத்தின் அருமையையும், அதன் முக்கியத்துவத்தையும் நம்முடைய அடுத்த தலைமுறைக்குச் சொல்லித்தர மறந்துவிட்டோம். விவசாயம் செய்வதையே கேவலம் என்று நினைக்கிறார்கள்.” - சுப்புலட்சுமி ஜெகதீசன்

சுப்புலட்சுமி ஜெகதீசன்
News
சுப்புலட்சுமி ஜெகதீசன்

கீழ்பவானி பாசனத் திட்டத்தின்கீழ் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்றுவருகின்றன. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் இந்தத் தண்ணீர் 200 கி.மீ தூரம் பிரதான வாய்க்காலில் பயணித்து, கடைமடைப்பகுதியான முத்தூர், மங்களப்பட்டியைச் சென்றடைகிறது. லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கீழ்பவானி பாசனத் திட்டத்தை உருவாக்கி, செயல்படுத்தியதில் அப்போதைய ஈரோடு எம்.எல்.ஏ எம்.ஏ.ஈஸ்வரனுக்கு முக்கியப் பங்கு உண்டு. சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் விளங்கிய எம்.ஏ.ஈஸ்வரனின் பிறந்தநாளையொட்டி கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திமுக முன்னாள் மாநில துணைப் பொதுச்செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்றார்.

எம்.ஏ.ஈஸ்வரன்
எம்.ஏ.ஈஸ்வரன்

நிகழ்ச்சியில் பேசிய அவர், ``நான் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட காலத்திலிருந்து தொடர்ந்து விவசாயிகளின் முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும்தான்  குரல் கொடுத்துவந்தேன் என்பது உங்களில் பலருக்கும்  தெரியும்.
சட்டமன்றக் கூட்டத்திலோ அல்லது பொதுக்கூட்டத்திலோ பேசும்போது முதலில் நான் ஒரு விவசாயி. பிறகுதான் அரசியல்வாதி என்று கூறுவேன். அந்த அளவுக்கு விவசாயம் என்பது எனது உடலின் ஒவ்வொரு ரத்த அணுவிலும் கலந்திருக்கிறது. சிறுவயதில் நாம் படித்திருக்கிறோம். வரப்புயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயர குடி உயரும். குடி உயர கோன் உயர்வான். குடி உயர்ந்தால்தான் கோன் உயரும். இங்கு கோன் என்பது அரசனைக் குறிக்கிறது.

இன்று விவசாயத்தின் அருமையையும், அதன் முக்கியத்துவத்தையும் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தர மறந்து விட்டோம். விவசாயம் செய்வதையே கேவலம் என்று நினைக்கிறார்கள். எல்லாரும் ஐடி படிக்கிறார்கள். ஆனால் நான் ஒன்று சொல்கிறேன். கம்ப்யூட்டர் இன்ஜினீயரைவிட விவசாயிகளின் மூளை சிறந்தது. செயல்திறன்மிக்கது. பருவகாலத்துக்கு ஏற்ப,விவசாயத்தை எப்படிச் செய்வது, பருவ மாற்றத்துக்கு ஏற்றவாறு இடுபொருள்களின் தேவையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது விவசாயிக்குத் தெரியும். அப்படிப்பட்ட விவசாயத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த தவறியதன் விளைவே இப்போது விவசாயத்தைக் கேவலமாக எண்ணும் சூழ்நிலை வந்திருக்கிறது.

சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்

விவசாயிகளை உதாசீனம் செய்ததன் காரணமாகவே அடுத்த தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுபடுத்தத் தவறிவிட்டோம்.  
எனவே, பள்ளிப் பருவத்திலேயே விவசாயத்தையும் பாடத்திட்டத்தில் சேர்த்தால்தான் அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தைக் கொண்டு செல்ல முடியும். அதற்கான முயற்சியை அரசு இப்போதுதான் எடுத்திருக்கிறது. எனவே விவசாயத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் அடுத்த தலைமுறையையும் ஈடுபடுத்தினால் மட்டுமே விவசாயத்தைக் காப்பாற்ற முடியும்” என்றார்.