Published:Updated:

புதுக்கோட்டை: தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிறுத்தம்! - போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்

ஜல்லிக்கட்டு
News
ஜல்லிக்கட்டு ( (கோப்புப் படம்) )

ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, வெளியூரிலிருந்து காளைகளைக் கூட்டிக்கொண்டு வந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.

Published:Updated:

புதுக்கோட்டை: தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிறுத்தம்! - போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்

ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, வெளியூரிலிருந்து காளைகளைக் கூட்டிக்கொண்டு வந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.

ஜல்லிக்கட்டு
News
ஜல்லிக்கட்டு ( (கோப்புப் படம்) )

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சியில் ஒவ்வோர் ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் எப்போதும் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டுதான். ஜனவரி முதல் வாரத்தில் ஒவ்வோர் ஆண்டும் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களால், நிறுத்தப்பட்டு வேறு தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு ஜனவரி 6-ம் தேதி நடத்தப்படுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்து ஆணையையும் வெளியிட்டிருந்தது. அரசு அனுமதி கிடைத்த பின்பு, ஜல்லிக்கட்டுக் கமிட்டி சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. குறிப்பாக, மாடுபிடி வீரர்கள், காளைகள் பதிவுகளும் விறுவிறுப்பாக நடந்தன. இதற்கிடையேதான், மீண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, `உச்ச நீதிமன்ற வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஏற்பாடுகள் செய்த பின்னர் வேறு தேதியில் அனுமதி வழங்கப்படும்' என்று கூறி இன்று (06.02.23) நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் ஒத்திவைத்திருக்கிறது. பாதுகாப்பு  நலன் கருதி ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். ஜல்லிக்கட்டு நடக்காததால், விழாக்குழுவினரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் அதிருப்தியடைந்தனர். இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஜல்லிக்கட்டு குறிப்பிட்ட நேரத்தில் நடக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையேதான், ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, வெளியூரிலிருந்து காளைகளைக் கூட்டிக்கொண்டு வந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர். அப்போது, மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்ட காளை ஒன்றை அதன் உரிமையாளர் போட்டிக்காக அவிழ்த்துவிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்துப் பேசிய விழா ஏற்பாட்டாளர்கள், "ஆண்டாண்டு காலமாக தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டாக, தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு நடந்துகொண்டிருக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை எனக் கூறி, 2-ம் தேதியை, 6-ம் தேதியாக மாற்றி அனுமதி கொடுத்தனர். ஆனால், மறுபடியும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றவில்லை என்று கூறி மாற்றிவிட்டனர். அடுத்து எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. அரசு அதிகாரிகள்தான் கண்டிப்பாக, 6-ம் தேதி நடக்கும் என்று கூறினர். மீண்டும் அவர்களே நடத்தக் கூடாது என்று கூறியிருக்கின்றனர். மீண்டும் தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டை முதல் ஜல்லிக்கட்டாக நடத்த அனுமதி கொடுக்காதபட்சத்தில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு என அனைத்தையும் ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம்" என்றனர்.

புதுக்கோட்டை: தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிறுத்தம்! - போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஆன்லைன் முறையில் ஜல்லிக்கட்டுக் காளைகள், மாடுபிடி வீரர்கள் பெயர்கள் பதிவுசெய்வது, ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் எடுத்தல், 50 மீட்டர் தொலைவுக்குள் காளைகள் திரும்பச் செல்வதற்கு வழிவகை செய்தல் என பல்வேறு நிபந்தனைகள் இருக்கின்றன. இவை முறையாக இல்லாததால் தடைசெய்யப்பட்டிருக்கிறது. இவை சரிசெய்யப்பட்டு, விரைவிலேயே ஜல்லிக்கட்டு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்" எனக் கூறினர்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்களிடம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் 8-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைவரும் அங்கிருந்து களைந்து சென்றனர்.