ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ஒருநாள்... ஓராயிரம் அனுபவங்கள்... டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் 24 மணி நேரம்

தமிழிசை சௌந்தர்ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழிசை சௌந்தர்ராஜன்

எனக்குத் தூக்கம் முக்கியமில்லை. தினம் 4 மணி நேரம் தூங்கினாலே அதிகம். ஆனா, நீங்க எல்லாம் போதுமான அளவு தூங்கணும்.

பிரபலங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? பரபரப்பில்லாமல்... பதற்ற மில்லாமல்... பகட்டாக... படு ஆடம்பரமாக... இப்படியெல்லாம் நமக்குள் கற்பனைகள் விரியலாம். விதிவிலக்குகளை விரல்விடாமலே எண்ணிவிடலாம்.

விதிவிலக்கான அப்படியொரு நபருடன் ஒருநாள் முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. அந்தப் பிரபலம் தெலங்கானாவின் ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

விகடன் குழுமத்தின் புதிய வரவான டாக்டர் விகடன் யூடியூப் சேனலின் அறிமுக வீடியோவுக்காக புதுச்சேரியில் ராஜ் நிவாஸில் டாக்டர் தமிழிசையுடன் ஒருநாள் பயணம் செய்தோம். நம் எல்லோருக்கும் ஒருநாளைக்கு 24 மணி நேரம்தான்... அந்த 24 மணி நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதே நம் ஆளுமையைத் தீர்மானிக்கிறது என்பதை அழுத்தமாகப் பதியவைத்தது அந்த ஒருநாள்.

ஒருநாள்... ஓராயிரம் அனுபவங்கள்... டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் 24 மணி நேரம்

பொதுவாக பத்திரிகையாளர்களுக்கு நேரம், காலம் கிடையாது. அகால நேர அவசர வேலைகளுக்கும் தயாராகவே இருக்க வேண்டும். அதன்படி ராஜ் நிவாஸில் டாக்டர் தமிழிசையைச் சந்திக்க நமக்கு ஒதுக்கப்பட்ட நேரம் அதிகாலை 5 மணி. ‘அஞ்சு மணிக் கெல்லாம் அவங்க நம்மளை மீட் பண்ண வாய்ப்பே இல்லை. செலிபிரிட்டின்னா சும்மாவா... மணிக்கணக்கா காக்கவெச்சுதான் மீட் பண்ணுவாங்க’’ என்ற முன்முடிவுடன், 5 மணிக்கு ராஜ் நிவாஸை அடைந்தோம்.

Punctuality is not just about being on time, It is basically about respecting your commitments என்று சொல்வதுண்டு. அதை உண்மை யாக்கினார் டாக்டர் தமிழிசை. குளித்து முடித்து பளிச் தோற்றத்தில், கலர்ஃபுல் சுடிதாரில் 5.01 முதல் நமக்கான நேரத்தை வழங்க ஆரம்பித்தார்.

‘`எனக்குத் தூக்கம் முக்கியமில்லை. தினம் 4 மணி நேரம் தூங்கினாலே அதிகம். ஆனா, நீங்க எல்லாம் போதுமான அளவு தூங்கணும். அது ஆரோக்கியத்தின் அடிப்படை...’’ மருத்துவ அறிவுரையோடு உரையாடலை ஆரம்பித்தார். பூஜை, டிரெட்மில் வொர்க் அவுட் முடித்து, துளசி, எலுமிச்சைப் பழச்சாறு, தேன் சேர்த்து தனக்கான மூலிகைத் தேநீரை, தானே தயாரித்துக் குடித்துவிட்டு, புல்வெளி யில் நடைப்பயிற்சிக்குத் தயாரானார். காகங் களுக்கு உணவு வைத்தார். அங்குள்ள மர மொன்றில் பறவைகள் ஒதுங்க கூடு கட்டிக் கொடுத்த கதையையும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு ராஜ் நிவாஸைச் சுற்றி தோட்டம் அமைத்ததையும் பகிர்ந்தபடி நடந்தார். பிறகு தமிழ், ஆங்கிலம் என அனைத்து செய்தித்தாள்களையும் வாசிக்கத் தொடங்கினார்.

‘`எந்தப் பத்திரிகையையும் மிஸ் பண்ண மாட்டேன். தலையங்கம் தொடங்கி எல்லா செய்திகளையும் ரொம்ப வேகமா வாசிச்சிடுவேன்...’’ என்றவர், உண்மையிலேயே ‘எந்திரன்’ சிட்டி ஸ்டைலில் செம ஸ்பீடாக வாசித்து முடித்தார். ட்விட்டர் பதிவுகள் முடித்துவிட்டு, காலை உணவுக்குத் தயாரா னார். தான் சாப்பிடும் முன் நாம் சாப்பிட் டோமா என்பதை ஒவ்வொரு வேளையும் உறுதிசெய்தார்.

அடுத்த பத்து நிமிடங்களில் சேலைக்கு மாறி, புதுச்சேரியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமுக்குக் கிளம்பினார். சாலைகளில் யாரேனும் மாஸ்க் அணியாமல் செல்வதைக் கண்டால் உடனே காரிலிருந்து இறங்கி, அவர் களுக்கு மாஸ்க் அளித்து அட்வைஸ் செய்யும் போதும், குழந்தைகளுடன் செல்பவர்களைக் கூப்பிட்டு குழந்தைக்கான தடுப்பூசிகள் முறையாகப் போடப்பட்டனவா என விசாரிக்கும்போதும் ஆளுநர், மருத்துவராக மாறுவதைப் பார்க்க முடிந்தது. தடுப்பூசி முகாம் முடிந்ததும் தலைமைச் செயலகம்... அதன்பிறகு ராஜ் நிவாஸில் தன்னைச் சந்திக்கக் காத்திருப்போருடன் உரை யாடல் (அன்றைய தினம் மட்டுமே 75 பேர் காத்திருந்தனர். ஒருவரையும் தவிர்க்காமல் சந்தித்தது குறிப்பிடத் தக்கது). அடுத்து மதிய உணவு... அவருக்குச் சமைக்கப்பட்ட அதே அறுசுவை உணவுதான் அங்குள்ள ஊழியர்களுக்கும், நமக்கும். இடை யிடையே நம் வீடியோ ஷூட்டுக்கான ஒத்துழைப்பு என ஒரு நிமிடம் ஓய்வில்லை டாக்டர் தமிழிசைக்கு. இதற்குள் அவர் நான்கைந்து காஸ்டியூம் மாற்றியது ஹைலைட்.

‘`எனக்கு நல்லா டிரஸ் பண்ண பிடிக்கும். சேலைக்கு மேட்ச்சா டெரகோட்டா ஜுவல்லரி போட்டுக் கிட்டு அஞ்சே நிமிஷத்துல ரெடியா யிடுவேன்...’’ என்று மீண்டும் ஆச்சர்யப் படுத்தினார். சொன்னபடியே வேறொரு சேலை, மேட்ச்சிங் நகைகளுடன், வீடியோ கான்ஃப்ரென்ஸுக்குத் தயாரானார்.

ஒருநாள்... ஓராயிரம் அனுபவங்கள்... டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் 24 மணி நேரம்

அரண்மனை போல பரந்து விரிந்திருக்கும் ராஜ் நிவாஸின் முதல் தளத்தில் டாக்டர் தமிழிசைக்கு சகல வசதிகளுடன் பிரமாண்ட வீடு ஒதுக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் அவர் தங்கியிருப்பதோ, கீழ்த்தளத்தின் ஓர் அறையில்தான்.

‘`என் ஒருத்திக்கு எதுக்கு அவ்வளவு பெரிய இடம்... அதனாலதான் இது போதும்னு சொல்லிட் டேன்...’’ காரணம் சொன்னவரை பற்றி ஊழியர்கள் இன்னொரு தகவலையும் பகிர்ந்துகொண்டார்கள்.

‘`மேடம் இங்கே இருக்கும்போது அவங்க கணவர், பிள்ளைங்கனு யாரும் வந்து தங்க மாட் டாங்க. சொந்தக்காரங்க, வேண்டியவங்கன்னு யாரையும் இங்கே பார்க்க முடியாது...’’

அட...

கிட்டத்தட்ட 12 மணி நேரத்தைக் கடந்திருந்த நிலையில் நமக்கு கண்களும் கால்களும் ஓய்வுக்கு ஏங்க... மீண்டும் உடை மாற்றி, நகை மாற்றி ஃப்ரெஷ்ஷாகி வந்தார் டாக்டர் தமிழிசை.

இரவு சென்னை நோக்கிய பயணமாம்... அடுத்த நாள் தெலங்கானாவாம்....

நமக்குக் கண்கள் கட்டின...

இரட்டைப் பொறுப்புகளை இன்முகத்துடன் சுமக்கும் தமிழிசை, நிச்சயம் எல்லோருக்கும் இனிய இன்ஸ்பிரேஷன்தான்.

ஒருநாள்... ஓராயிரம் அனுபவங்கள்... டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் 24 மணி நேரம்

காலை முதல் இரவு வரை டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுடனான ஒருநாள் பயணத்தில் இன்னும் ஏராளமான சுவாரஸ்யங்கள்... எக்கச்சக்கமான தகவல்கள்... விரிவான பேட்டிக்கும் ஆரோக்கியம் தொடர்பான இன்னும் பல வீடியோக்களுக்கும் அருகில் உள்ள ‘QR Code’ஐ ஸ்கேன் செய்து டாக்டர் விகடன் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யலாம்.