Published:Updated:

கிரானைட் நிறுவனங்கள் ரூ.5 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு!

கிரானைட் நிறுவனங்கள் ரூ.5 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு!
கிரானைட் நிறுவனங்கள் ரூ.5 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு!
கிரானைட் நிறுவனங்கள் ரூ.5 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு!

மதுரை: கிரானைட் மோசடியில் ஈடுபட்ட பி.ஆர்.பி. உள்ளிட்ட மதுரை நிறுவனங்கள் ரூ.5 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை மேலூர் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்ட 94 கிரானைட் குவாரிகள் சீல் வைக்கப்பட்டன. அதிக முறைகேட்டில் ஈடுபட்ட பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அதே சமயம் ஒலிம்பஸ் கிரானைட் இயக்குனரான துரைதயாநிதி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் 40 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கிரானைட் மோசடி தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி ஜான்லூயிஸ் அரசால் நியமிக்கப்பட்டார். இவர் சில வாரங்களாக மேலூர் பகுதிகளில் முகாமிட்டு கிரானைட் குவாரிகளில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பி.ஆர்.பழனிச்சாமியின் பி.ஆர்.பி.கிரானைட் நிறுவனம் மற்றும் துரைதயாநிதியின் ஒலிம்பஸ், சிந்து கிரானைட் நிறுவனங்கள் அதிக அளவில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டியது தெரிய வந்துள்ளது.

பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் விதிமுறைகளை மீறி 10 குவாரிகளில் கிரானைட் கற்களை எடுத்துள்ளது.ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம், அரசு புறம்போக்கு நிலங்களில் அதிக அளவில் கிரானைட் கற்களை எடுத்துள்ளது.இதுபோல சிந்து கிரானைட் நிறுவனமும் விதிமுறைகளை மீறி கிரானைட் கற்களை எடுத்துள்ளது.

##~~##
கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிறுவனங்கள் எடுத்துள்ள கிரானைட் கற்கள் குறித்து அரசுக்கு மிக குறைவாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.பி.ஆர்.பி. நிறுவனம் 1 லட்சத்து 72 ஆயிரம் கிரானைட் யூனிட்டுகளை சட்டவிரோதமாக எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பஸ்,சிந்து உள்ளிட்ட கிரானைட் நிறுவனங்களும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் கிரானைட் யூனிட்டுகளை எடுத்துள்ளனர்.இவை அனைத்தும் சுரங்கத்துறை அனுமதியின்றி கடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வகையில் ரூ.5 ஆயிரம் கோடி வரை வரி ஏய்ப்பு மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.இது சம்பந்தமாக விசாரணை அதிகாரிகள் அரசுக்கு முழுமையான அறிக்கை அனுப்பி உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் வரி ஏய்ப்பு மோசடி தொடர்பாகவும், அன்னிய செலாவணி குறித்து விசாரணை நடத்தவும் மத்திய அமலாக்கப் பிரிவுக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து மோசடி கிரானைட் நிறுவனங்களின் அனைத்து விவரங்களையும் மத்திய அமலாக்கப்பிரிவு தமிழக அரசிடம் இருந்து பெற்றுள்ளது. கிரானைட் நிறுவனங்களின் வரி ஏய்ப்பு மற்றும் அன்னிய செலாவணி தொடர்பாக மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.