Published:Updated:

பிரபல தயாரிப்பளார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

பிரபல தயாரிப்பளார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
பிரபல தயாரிப்பளார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
பிரபல தயாரிப்பளார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

பிரபல ஹிந்தி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் இன்று வருமான வரித் துறையினர் மிகப் பெரிய அளவில் அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர்.

ஏக்தா கபூர், வருமான வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் ஏக்தா கபூரின் வீடு, அவரது தந்தை, சகோதரர் வீடு என‌ அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை செய்து வருகின்றனர்.

##~~##
இந்த சோதனை முடிவில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல தயாரிப்பாளர் வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனை மும்பை திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.