Published:Updated:

சொத்து வரி வாரியம்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

சொத்து வரி வாரியம்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
சொத்து வரி வாரியம்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
சொத்து வரி வாரியம்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு மாநில சொத்து வரி வாரிய சட்ட முன்வடிவை அமைச்சர் கே.பி.முனுசாமி தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு  சட்டப்பேரவையில் தமிழ்நாடு மாநில சொத்து வரி வாரிய சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது:

13 நிதி ஆணைக்குழு உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை மதிப்பீடு செய்வதற்காக ஒளிவு மறைவற்ற நடைமுறையை பின்பற்ற மாநில அளவில் சொத்து வரி வாரியம் அமைக்க பரிந்துரைத்துள்ளது.

மேலும் இந்த ஆணையம் ஆனது மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சொத்துக்களையும் கணக்கெடுப்பது, வரியை மறுஆய்வு செய்வது, சொத்து வரியை விதிப்பது, ஆலோசனை வழங்குவது ஆகியவற்றை செய்ய வாரியத்திற்கு பரிந்துரைத்தது.

##~~##
இதையொட்டி மாநில அளவில் சொத்து வரி வாரியம் ஒன்றை அமைப்பதற்கு ஏற்ப சட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.