Published:Updated:

ரூ.250ல் ஆன் லைனில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யலாம்!

விகடன் விமர்சனக்குழு
ரூ.250ல் ஆன் லைனில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யலாம்!
ரூ.250ல் ஆன் லைனில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யலாம்!
ரூ.250ல் ஆன் லைனில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யலாம்!

சென்னை: வருமான வரி ரிட்டன் கணக்கை ஆன்லைனில் வெளியில் தாக்கல் செய்வதற்கு ஆயிரம், 1,500 ரூபாய் என்று அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், 250 ரூபாய் குறைந்த கட்டணத்தில் ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான சிறப்பு ஏற்பாட்டை சென்னை வருமானவரித்துறை அலுவலகம் செய்துள்ளது.

சுயதொழில் செய்பவர்கள், மாதச்சம்பளக்காரர்கள் இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். புதிய விதிமுறையின்படி, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு உட்பட்டவர்கள் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அவர்கள் விரும்பினால் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தாக்கல் செய்யலாம். அதேநேரத்தில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டிப்பாக ஆன்லைனில்தான் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த புதிய உத்தரவு காரணமாக வருமானவரி அலுவலகங்களுக்கு நேரடியாக வந்து கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வருமானவரித்துறை தலைமை அலுவலகத்தில் இயங்கும் சேவை மையத்தில் தினமும் அதிகபட்சம் ஆயிரம் பேர்தான் வருகிறார்கள். தாம்பரத்தில் உள்ள சேவை மையத்தில் தினமும் சுமார் 100 பேர் வந்து கணக்கு தாக்கல் செய்துவிட்டு செல்கிறார்கள்.

இதன் காரணமாக, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த வழக்கமாக கடைசி 5 நாட்கள் திறக்கப்படும் சிறப்பு கவுண்டர்கள் இந்த ஆண்டு திறக்கப்படுமா? என்பது சந்தேகமாக உள்ளது. சிறப்பு கவுண்டர்கள் திறப்பதற்குப் பதிலாக கூடுதல் பணியாளர்களுடன் சிறப்பு வசதியை செய்யலாமா? என்று வருமானவரித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு 30 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டன. 5 நாட்கள் இயங்கி இந்த சிறப்பு கவுண்டர்கள் மூலம் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் வருமானவரி கணக்கை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், வருமான வரி ரிட்டன் கணக்கு தாக்கல் செய்வோரின் வசதிக்காக ரூ.250 செலவில் ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்ய சென்னை வருமானவரித்துறை தலைமை அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தனியார் உதவியுடன் தொடங்கப்பட்டு உள்ள இந்த சிறப்பு மையம், வருமானவரித்துறையின் தலைமை அலுவலகத்தின் பழைய ஆடிட்டோரிய கட்டிடத்தில் 8 கம்ப்யூட்டர்களுடன் இயங்கி வருகிறது.

##~~##
அங்குள்ள பணியாளர்களிடம் ஆண்டு வருமானம், பான்கார்டு விவரங்களை தெரிவித்தால் போதும். ஒருசில நிமிடங்களில், ஆன்லைனில் அவர்களே விவரங்களை குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்து விடுவார்கள். அதற்கான ஒப்புகைச் சீட்டையும் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.
வருமானவரி கணக்கை ஆன்லைனில் வெளியில் தாக்கல் செய்வதற்கு ஆயிரம் ரூபாய், ரூ.1,500 என்று அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இந்த மையத்தில் வெறும் ரூ.250 மட்டுமே வசூலிக்கிறார்கள். இந்த சிறப்பு மையம் 31ஆம் தேதி வரை செயல்படும். ரிட்டன் பைல் செய்வோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு வருமானவரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.