Published:Updated:

வாகனங்கள், நுகர்வோர் சாதனங்களுக்கு கலால் வரிச்சலுகை நீட்டிப்பு: அருண் ஜெட்லி

வாகனங்கள், நுகர்வோர் சாதனங்களுக்கு கலால் வரிச்சலுகை நீட்டிப்பு: அருண் ஜெட்லி
வாகனங்கள், நுகர்வோர் சாதனங்களுக்கு கலால் வரிச்சலுகை நீட்டிப்பு: அருண் ஜெட்லி
வாகனங்கள், நுகர்வோர் சாதனங்களுக்கு கலால் வரிச்சலுகை நீட்டிப்பு: அருண் ஜெட்லி

புதுடெல்லி: வாகனங்கள், நுகர்வோர் சாதனங்களுக்கு வழங்கப்படும் கலால் வரிச்சலுகை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில், நுகர்வோர் சாதனங்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கான கலால் வரியை குறைத்து அறிவித்தது. தொழில் துறையினரை ஊக்கப்படுத்த இத்தகைய சலுகை அளிக்கப்பட்டது. இந்த சலுகை வருகின்ற ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அச்சமயத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, அந்த சலுகையை வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி வரை, மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். சிறிய ரக கார்கள், ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான கலால் வரி 8 சதவீதமாகவே தொடரும்.

இதற்கு முன் இது 12 சதவீதமாக இருந்தது. எஸ்.யூ.வி. வாகனங்கள் மற்றும் பெரிய ரக கார்களுக்கான கலால் வரி 24 சதவீதமாக இருக்கும். நடுத்தர ரக கார்களுக்கான கலால் வரி 20 சதவீதமாகவே தொடரும். மேலும், இயந்திரங்கள், நுகர்வோர் சாதனங்களுக்கான கலால் வரி 10 சதவீதமாகவே இருக்கும். இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு முன் இது 12 சதவீதமாக இருந்தது.

இவ்வாறு கலால் வரியைக் குறைப்பதன் மூலம், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், இது நீண்ட காலத்துக்கு பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என்று ஜெட்லி தெரிவித்துள்ளார்.