Published:Updated:

வரிச்சலுகைகள், மானியம் வழங்குகிறோம் தமிழக முதலீட்டாளர்களுக்கு குஜராத் அழைப்பு!

வரிச்சலுகைகள், மானியம் வழங்குகிறோம் தமிழக முதலீட்டாளர்களுக்கு குஜராத் அழைப்பு!
வரிச்சலுகைகள், மானியம் வழங்குகிறோம் தமிழக முதலீட்டாளர்களுக்கு குஜராத் அழைப்பு!
வரிச்சலுகைகள், மானியம் வழங்குகிறோம் தமிழக முதலீட்டாளர்களுக்கு குஜராத் அழைப்பு!

சென்னை: குஜராத்தில் தொழில் தொடங்க வரும் தமிழக முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை, மானியம் வழங்கப்படும் என்று குஜராத் அமைச்சர் சாருபாபாய் படேல் கூறினார்.

''துடிப்பான குஜராத்–2015, உலக வர்த்தக மையம்" என்ற தலைப்பிலான தொழில் வளர்ச்சி மாநாடு குஜராத் மாநிலம் காந்திநகரில் வருகின்ற ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. அந்த மாநாடு குறித்த அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் குஜராத் மாநில நிதி மற்றும் எரிசக்தி, பெட்ரோகெமிக்கல் துறை அமைச்சர் சாருபாபாய் படேல் பேசினார்.

அப்போது, ''குஜராத்தில் தொழில்துறைக்கு தேவையான தரமான சாலை, தொழிலாளர்கள், உள்கட்டமைப்பு, துறைமுக வசதி, விமான நிலையம் போன்றவை சிறப்பாக உள்ளன. ஜவுளி உற்பத்தியில் குஜராத் முன்னிலை மாநிலமாக திகழ்கிறது. மின்சாரத்தை பொருத்த வரையில் குஜராத் மாநிலத்துக்கு தினசரி 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

ஆனால், 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மிகை மாநிலமாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு முன்னேற்றங்கள் இருப்பதால், கார் நிறுவனம் மிகப்பெரிய கார் தொழிற்சாலையை தொடங்க உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் மற்றும் டிராக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் வர உள்ளன. இதற்கான புதிய தொழில் கொள்கையையும் விரைவில் கொண்டுவர உள்ளோம்.

மாநாட்டுக்கு சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் வரஉள்ளதால், நாட்டிலேயே தொழில்வளம் சிறந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் இருந்தும் முதலீட்டாளர்கள் வரவேண்டும். அவர்களுக்கு போதிய நிலம், நீர், மின்சாரம், தொழிலாளர்கள், சாலை வசதி, கச்சாப் பொருட்கள், பாதுகாப்பு, வரிசலுகை, மானியம் போன்ற பல்வேறு வசதிகளும் செய்து தரப்படும்" என்றார்.