Published:Updated:

புதிய வருமான வரி விதிமுறைகள்... என்னென்ன வரிச் சலுகைகள்..?

புதிய வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
புதிய வருமான வரி

புதிய வருமான வரிச் சட்டத்தைத் தேர்வு செய்வோருக்கு சில வரிச் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. அவை என்னென்னவென்று பார்ப்போம்.

புதிய வருமான வரி விதிமுறைகள்... என்னென்ன வரிச் சலுகைகள்..?

புதிய வருமான வரிச் சட்டத்தைத் தேர்வு செய்வோருக்கு சில வரிச் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. அவை என்னென்னவென்று பார்ப்போம்.

Published:Updated:
புதிய வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
புதிய வருமான வரி
நிதியாண்டு 2020–21-ல் நடைமுறைக்கு வரும் புதிய வருமான வரி விதிமுறைகளைப் புரிந்துகொள்வது நமக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். பழைய வருமான வரி முறை நமக்கு ஏற்கெனவே தெரியும்.

புதிய வரிச் சட்டத்தின் முக்கிய அம்சங்களைப் புரிந்துகொண்டால், நடப்பு நிதியாண்டில் பழைய வரித் திட்டம் லாபகரமானதா அல்லது புதிய வரிச் சட்டம் பயனுள்ளதா என்பதைத் தெளிவுபடுத்திக்கொண்டு தேர்வு செய்வது எளிது. இது தொடர்பாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன..?

புதிய வருமான வரி விதிமுறைகள்... என்னென்ன வரிச் சலுகைகள்..?

எதில் வரி குறைவு?

பழைய வருமான வரி முறையிலேயே தொடர விரும்புவோர்க்கு வரிச் சலுகைகள் அதிகம். ஆனால், வரிக்குரிய வருமானம் ரூ.5 லட்சம் என்ற வரம்பைத் தாண்டிவிட்டாலே 20% வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். இதற்கும் மேலே வரிக்கான வருமானம் ரூ.10 லட்சத்தைத் தாண்டினால், வருமான வரி 30 சதவிகிதமாக உயர்ந்துவிடும். புதிய வருமான வரிப் பிரிவைத் தேர்வு செய்வோர் செலுத்த வேண்டிய வருமான வரி மிக மிகக் குறைவு (பார்க்க, அட்டவணை).

வருமான வரி
வருமான வரி

என்னென்ன வரிச் சலுகைகள் உண்டு?

மாதச் சம்பளதாரர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த பல சலுகைகள் புதிய வருமான வரிப் பிரிவிலும் தொடர்கிறது. அந்தச் சலுகைகளில் சில...

புதிய வருமான வரிச் சட்டத்தைத் தேர்வு செய்வோருக்கு சில வரிச் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* அலுவலகப் பணி நிமித்தமான போக்குவரத்து படி (Conveyance Allowance) * அலுவலகப் பணி நிமித்தமான பயணம் மற்றும் இடமாறுதல் (Transfer) காரணமான பயணத்துக்கான அலவன்ஸுகள் * பணி செய்யும் இடத்தை விட்டு வெளியே செல்லும் தருணங்களில் தரப்படும் தின படி (உணவுக்கு) * பணிக்கொடை (Gratuity) பிரிவு 10(10): ஓய்வுபெறும் அரசுப் பணியாளர்களுக்குப் பணவரம்பு கிடையாது. மற்றவர்களுக்கு (நிபந்தனைக்கு உட்பட்டு) ரூ.20 லட்சம் வரை * பென்ஷன் கம்யூடேஷன் பிரிவு 10 (10A) (i) (ii) (iii): ஓய்வுபெறும் அரசுப் பணியாளருக்கு பணவரம்பு இன்றிச் சலுகை. மற்றவர்களின் பணிக்கொடையுடன் பென்ஷன் கம்யூடேஷன் பெறுபவர்களுக்கு கம்யூடேஷன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் வரிக்கு உட்படாது * பணிக்கொடை இல்லாமல், பென்ஷன் கம்யூடேஷன் மட்டும் பெறுவோருக்கு கம்யூடேஷன் தொகையில் 50% வரி விலக்கு * ஓய்வுக்கால விடுப்பு ஊதியம் பிரிவு 10(10AA): அரசுப்பணி சார்ந்தோருக்கு பணவரம்பு இன்றி முழு வரி விலக்கு உள்ளிட்ட பல சலுகைகள் ஏற்கெனவே இருந்ததுபோலத் தொடர்கின்றன.

புதிய வருமான வரி
புதிய வருமான வரி

என்னென்ன வரிச்சலுகைகள் இல்லை?

புதிய வருமான வரிச் சட்டத்தைத் தேர்வு செய்வோருக்கு சில வரிச் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. அவை என்னென்னவென்று பார்ப்போம்.

* ரூ.5 லட்சத்துக்கு உட்பட்ட வருமானத்துக்கு அதிகபட்சம் ரூ.12,500 வரித் தள்ளுபடி புதிய வரித் திட்டத்திலும் உண்டு. பங்களிப்பு பென்ஷன் திட்டத்தில் நிறுவனம் செலுத்தும்  தொகைக்கு புதிய வரித் திட்டத்திலும் வரிச் சலுகை உண்டு. இதில் நிறுவனத்தின் பங்களிப்பை வருமானமாகச் சேர்த்து (பிரிவு 80CCD(2) அதன் பிறகுதான் சலுகை பெற வேண்டும்.
* ரூ.5 லட்சத்துக்கு உட்பட்ட வருமானத்துக்கு அதிகபட்சம் ரூ.12,500 வரித் தள்ளுபடி புதிய வரித் திட்டத்திலும் உண்டு. பங்களிப்பு பென்ஷன் திட்டத்தில் நிறுவனம் செலுத்தும் தொகைக்கு புதிய வரித் திட்டத்திலும் வரிச் சலுகை உண்டு. இதில் நிறுவனத்தின் பங்களிப்பை வருமானமாகச் சேர்த்து (பிரிவு 80CCD(2) அதன் பிறகுதான் சலுகை பெற வேண்டும்.

* விடுப்புப் பயணச் சலுகை பிரிவு 10(5) * சம்பளத்துடன் தரப்பட்ட வீட்டு வாடகை படியைவிட, வாடகை வீட்டுக்குத் தரப்பட்ட வாடகை அதிகமாக இருப்பின், அவ்வாறு அதிகமாகத் தரப்பட்ட வீட்டு வாடகைக்கு (நிபந்தனைக்குட்பட்டு) வரிச் சலுகை பிரிவு 10 (13 A) * பிரிவு 10(14)-ன்கீழான குழந்தைகளுக்கான கல்வி படி உள்ளிட்ட பல்வேறு படிகள் (சுமார் 16 இனங்கள்). * வீட்டுக் கடன் வட்டிப் பிரிவு 24 (b) * பிரிவு 57 (iia)–ன்படி குடும்ப பென்ஷனுக்குத் தரப்பட்ட அதிகபட்ச கழிவு ரூ.15,000.

இத்துடன் வருமானப் பிரிவின் அத்தியாயம் VI A –யின் கீழான அனைத்து சலுகைகளையும் குறிப்பிடலாம். அவை... 1. லைஃப் இன்ஷூரன்ஸ் பீரிமியம் 2. ஊழியருக்கான ஆனுயூட்டி தொகை 3. மனைவி, பிள்ளைகளுக்கான ஆனுயூட்டிக்குச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை 4. அனைத்து வகையான பிராவிடன்ட் ஃபண்ட் முதலீடு, 5. சுகன்யா சம்ருதி கணக்கு சந்தா 6. தேசிய சேமிப்புப் பத்திரம் (N.S.C VIII & IX வெளியீடு) முதலீடு 7. தனக்கோ தன் மனைவி பிள்ளைகளுக்கோ யூலிப் (ULIP) 1971-க்கு உரிய பிரீமியம் 8. ஆயுள் காப்பீடு நிறுவனம் எதிலாவது செலுத்தப்படும் ஆனுயூட்டி திட்ட முதலீடு 9. இ.எல்.எஸ்.எஸ் 2005 முதலீடு 10. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பென்ஷன் ஃபண்ட் முதலீடு 11. நேஷனல் ஹவுஸிங் வங்கியின் டெபாசிட் திட்டம் அல்லது பென்ஷன் ஃபண்ட் முதலீடு 12. மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட பொதுத் துறை நிறுவனத்தின் நீண்டகால வீடு கட்டும் திட்டத்தில் செலுத்தப்பட்ட சந்தா (HUDCO) 13. வீட்டுக் கடனுக்குச் செலுத்தப்படும் அசல் தவணை (முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம்) 14. நர்சரி பள்ளி முதல் பல்கலைக்கழக கல்வி வரையான கல்விக் கட்டணம் 15. மத்திய வருமான வரித்துறையில் அங்கீகரிக்கப்பட்ட பொதுத் துறை கம்பெனியின் பங்குகள், கடன் பத்திரங்கள் முதலியவற்றுக்கான முதலீடு 16. வருமான வரி வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் சந்தா (நிபந்தனை உண்டு) 17. வங்கி 5 வருட ஃபிக்ஸட் டெபாசிட் 18. நபார்டு வங்கியின் பாண்ட் முதலீடு 19. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட முதலீடு 20.அஞ்சலக ஐந்தாண்டு டெபாசிட் 21. மத்திய அரசு ஊழியர்கள் என்.பி.எஸ் கணக்கு II-ல் செலுத்தப்பட்டு மூன்று வருடங்கள் திரும்பப் பெறாத தொகை 22. ஆனுயூட்டி ஒப்பந்தமில்லாத இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் (நிபந்தனைக்குட்பட்டு), பிரிவு 80CCC–யின்கீழ் பிடித்தம் செய்யப்படும் பென்ஷன் தொகை, பிரிவு 80CCD(1)-யின்கீழ் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பங்களிப்பு பென்ஷன் தொகை, பிரிவு 80 CCD(1B)-யின்கீழ் கூடுதலாக என்.பி.எஸ் அல்லது சி.பி.எஸ்–ல் செலுத்தப்படும் தொகை.

இவை தவிர, பிரிவு 80 D - மருத்துவக் காப்பீடு பிரீமியம் / மருத்துவச் செலவு, பிரிவு 80 DD - மாற்றுத்திறனாளி பராமரிப்பு, பிரிவு 80U - மாற்றுத்திறனாளி ஊழியருக்கான வரிச் சலுகை, 80DDB - மருத்துவச் செலவு (தீவிர நோய்க்கு), கல்விக் கடன் வட்டி (80E), பிரிவு 16-ன் கீழான நிலைக்கழிவு மற்றும் தொழில் வரி உள்ளிட்ட பல வரிச் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன.

விருப்பம் தெரிவித்தல்

வணிக வருமானம் இல்லாமல் சம்பள வருமானம் மட்டுமே உள்ளவர்கள் ஆண்டுதோறும் வரித் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். அதாவது, சஹாஜ் (ITR-I) படிவத்தில் வரித்தாக்கல் செய்பவர்கள் பழைய முறையிலிருந்து புதிய திட்டத்துக்கும், புதிய திட்டத்திலிருந்து பழைய திட்டத்துக்கும் மாறிக்கொள்ளலாம்.

புதிய வருமான வரி
புதிய வருமான வரி

மற்றவர்கள் அதாவது, சம்பள வருமானம் மற்றும் வணிக வருமானம் உடையவர்கள் (ஐ.டி.ஆர்-4-ல் வரித் தாக்கல் செய்வோர்) ஒரு முறை தேர்வு செய்யும் பழைய அல்லது புதிய வரித் திட்டம் அடுத்து வரும் நிதியாண்டுகளுக்கும் தொடரும்.

பழைய, புதிய வரித் திட்டங்களில் உங்களுக்குக் கிடைக்கும் வரிச் சலுகைகளை நன்கு புரிந்துகொண்டால், எந்த வரித் திட்டத்தைத் தேர்வுசெய்வது என நீங்கள் தெளிவு பெறலாம்.

அதற்குப் பிறகும் உங்களுக்கு எந்த வரித் திட்டம் ஏற்றதாக இருக்கும் என்ற சந்தேகம் எழும்பட்சத்தில், ஒரு நல்ல ஆடிட்டரை அணுகி ஆலோசனை பெற்று, அவருடைய வழிகாட்டலின்படி செயல்படுவது உங்களுக்கு லாபகரமாக அமையக்கூடும்.