Published:Updated:

`6 ஆண்டுகள்; ரூ.4.35 கோடி!' - இந்திராகாந்தி பிறந்தவீட்டுக்கு வரிபாக்கி நோட்டீஸ்

இந்த இல்லத்தை நிர்வகித்துவரும் ஜவஹர்லால் நேரு மெமோரியல் அறக்கட்டளை, வரி விலக்கு பெற்றது என்றும், இந்த இல்லம், சுதந்திரப் போராட்டத்தின் நினைவுச் சின்னமாகவும், நினைவுச்சின்ன அருங்காட்சியகமாகவும் உள்ளது என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி ( vikatan )

உத்தரப்பிரதேசத்தில் பிரக்யக்ராஜ் நகரில் அமைந்துள்ள ஆனந்த் பவன் இல்லம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இங்குதான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தார். தற்போது இந்த இல்லம், ஜவஹர்லால் நேரு மெமோரியல் அறக்கட்டளையின்மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த டிரஸ்ட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைவராக இருக்கிறார். சமீபத்தில், ஆனந்த் பவனுக்கு ரூ.4.35 கோடி வீட்டுவரி கட்டும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனந்த் பவன்
ஆனந்த் பவன்
vikatan

இந்த இல்லத்துக்கு, 'குடியிருப்பாக இல்லாத வீடு'களுக்கான பிரிவின்கீழ் வீட்டுவரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், 2013-ம் ஆண்டு முதல் ரூ.4.35 கோடி அளவுக்கு வரி செலுத்தப்படவில்லை என்றும் பிரக்யக்ராஜ் முனிசிபல் கார்ப்பரேஷனின் தலைமை வரி மதிப்பீட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். எனவே, வரியைச் செலுத்தக்கோரி ஜவஹர்லால் நேரு மெமோரியல் அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அந்த இல்லத்துக்குச் செலுத்தப்பட்ட வீட்டுவரி குறித்து முழுமையாக ஆய்வுசெய்த பின்பே இந்த வரி தீர்மானிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படாததால் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி
vikatan

ஆனால், இந்த இல்லத்தை நிர்வகித்துவரும் ஜவஹர்லால் நேரு மெமோரியல் அறக்கட்டளை, வரி விலக்கு பெற்றது என்றும், இந்த இல்லம், சுதந்திரப் போராட்டத்தின் நினைவுச் சின்னமாகவும் நினைவுச் சின்ன அருங்காட்சியகமாகவும் உள்ளது என்றும் கூறப்படுகிறது. `காங்கிரஸ் இல்லாத இந்தியா', 'நேரு இல்லாத உலகம்' என்ற பா.ஜ.க-வின் திட்டமிடலுக்கேற்ப இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட இந்திரா காந்தி பிறந்த இல்லத்துக்கே இந்தச் சோதனையா என்று காங்கிரஸ் தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.