Published:Updated:

வரிக் கணக்குத் தாக்கல்... கால அவகாசம் அளித்த வருமானவரித் துறை! கடைசி தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள்

T A X F I L I N G

பிரீமியம் ஸ்டோரி

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில் துறையினர் மற்றும் சம்பளதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். இதன் காரணமாக, வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு கால அவகாசத்தை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

அதன்படி, தனிநபர்கள் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்தற்கான கடைசி தேதி 2021 ஜூலை 31 என்பதற்குப் பதில் செப்டம்பர் 30-ம் தேதி என மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது, இரண்டு மாதங்கள் அவகாசம் தரப்பட்டிருக்கிறது. நிறுவனங்கள் வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற் கான கடைசி தேதி நவம்பர் 30-ம் தேதிக்கு நீடிக்கப் பட்டுள்ளது. அதேபோல், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம்-16 அளிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

வரிக் கணக்குத் தாக்கல்... கால அவகாசம் அளித்த வருமானவரித் துறை! கடைசி தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள்

தற்போது மின்னணு முறையில் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ள நிலையில், இதற்குப் பதிலாக www.incometaxgov.in என்ற புதிய இணையதளத்தை வருமானவரித்துறை தொடங்குகிறது. ஜூன் 7-ம் தேதி முதல் இது பயன் பாட்டுக்கு வருகிறது. இது, பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு