Published:Updated:

இனி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி; விரைவில் வருகிறதா அறிவிப்பு?

ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ மற்றும் குதிரை பந்தயங்களுக்கான ஜி. எஸ். டியை 18 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்த மந்திரிகள் அடங்கிய குழு இறுதியான முடிவை எடுத்தது.

இனி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி; விரைவில் வருகிறதா அறிவிப்பு?

ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ மற்றும் குதிரை பந்தயங்களுக்கான ஜி. எஸ். டியை 18 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்த மந்திரிகள் அடங்கிய குழு இறுதியான முடிவை எடுத்தது.

Published:Updated:

ஆன்லைன் விளையாட்டுகள், கேளிக்கை கூடம் (கேசினோ) மற்றும் குதிரை பந்தயங்களுக்கு ஜி. எஸ்.டியை 28 சதவிகிதமாக உயர்த்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரையில் இந்த விளையாட்டுக்களுக்கான ஜி. எஸ்.டியானது 18 சதவிகிதமாக இருந்தது. இந்த விளையாட்டுகளில் கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 8 மாநில மந்திரிகள் அடங்கிய குழு ஒன்றை கடந்த ஆண்டு நியமித்தது. அந்த குழுவின் தலைமை அதிகாரியாக மேகலாயாவின் முதல் மந்திரி கான்ராட் சங்மா தேர்வு செய்யப்பட்டார்.

Online game
Online game

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிலிருந்து இக்குழு இந்த விளையாட்டுக்களுக்கான சேவைகளை தொடர்ந்து மதிப்பீடு செய்தது. அதில் ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ மற்றும் குதிரை பந்தயங்களுக்கான ஜி. எஸ்.டியை 18 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்த மந்திரிகள் அடங்கிய குழு இறுதியான முடிவை எடுத்தது.

இது குறித்த அறிக்கை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஓரிரு நாட்களில் ஒப்படைக்கப்படும், அதோடு கேளிக்கை விளையாட்டுக்களுக்கான வரி உயர்வு குறித்து அடுத்து வரும் ஜி. எஸ்.டி கவுன்சிலில் விவாதிக்கப்படும் என கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism