Published:Updated:

அரிசி, வெண்ணெய், தயிருக்கும் இனி ஜி.எஸ்.டி வரி... வெறுப்பில் ஏழை மக்கள்!

ஜி.எஸ்.டி
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி வரி

அரிசி, வெண்ணெய், தயிருக்கும் இனி ஜி.எஸ்.டி வரி... வெறுப்பில் ஏழை மக்கள்!

ஜி.எஸ்.டி வரி

Published:Updated:
ஜி.எஸ்.டி
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எஸ்.டி

சமீபத்தில் நடத்தப்பட்ட 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி, பிராண்ட் அல்லாத அரிசி, பருப்பு, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருள் களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு ஜூலை 18-ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், இது தொடர்பாக பல்வேறு குழப்பங்களும் கேள்விகளும் எழுந்தன. இதற்கான விளக்கத்தை ஜி.எஸ்.டி கவுன்சில், 25 கிலோவுக்குமேல் பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரி இல்லை. 25 கிலோ மற்றும் அதற்குக் குறைவான எடையில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், தயிர், பனீர் உள்ளிட்ட அனைத்துக்கும் 5% ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் என்றது.

இது குறித்து ஜி.எஸ்.டி வரி நிபுணரான வழக்கறிஞர் வைத்தீஸ்வரனிடம் பேசினோம்.

வைத்தீஸ்வரன்
வைத்தீஸ்வரன்

மாநில அரசுகள் ஒப்புக்கொண்டது ஏன்?

‘‘ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் முன்னிலையில்தான் விவாதிக்கப்பட்டது. புதிய வரி நடைமுறை களையும், வரி விதிப்புகளையும் எந்த மாநில நிர்வாகிகளும் எதிர்க்க வில்லை. அனைவருமே ஒப்புக்கொண்ட பிறகே இந்த வரி விதிப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. ஏனெனில், அரசாங்கத்துக்கு வரி வருவாய் அவசியத் தேவையாக உள்ளது. அதனால் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பேக்கிங் செய்யப்பட்ட, பிராண்டின் பெயரில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கு ஏற்கெனவே வரி வசூலிக்கப் படுகிறது. தற்போது பிராண்ட் அல்லாத பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. 25 கிலோ எடைக்குக் குறைவாக பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு 5% வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு நடைமுறையின்படி, உற்பத்தியாளர் டீலருக்கு விற்பனை செய்தாலும், டீலர் ரீடெய்ல் வியாபாரிக்கு விற்பனை செய்தாலும், ரீடெய்ல் வியாபாரி நுகர்வோருக்கு விற்பனை செய்தாலும் இந்த வரி நடைமுறைக்கு உள்ளாவார்கள். பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டிருப்பதால், அவற்றின் விலை உயரும். விலை உயர்வதால், ஏழை எளிய மக்களுக்கு அது பாதிப்பாக அமையும். இதனால் அவர்கள் பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை வாங்காமல் பேக்கிங் செய்யப்படாத உணவுப் பொருள்களை வாங்கத் தொடங்குவார்கள்’’ என்றார்.

அரிசி, வெண்ணெய், தயிருக்கும்
இனி ஜி.எஸ்.டி வரி... வெறுப்பில் ஏழை மக்கள்!

உலகில் இல்லாத விநோதம்...

இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தவுடனேயே அரிசி விலை ரூ.50 முதல் ரூ.150 வரை உயர்ந்துள்ளது. தயிர், பனீர், லஸ்ஸி உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள் எப்படி பாதிக்கப்படுவார்கள் என வணிகர்கள் பேரவைத் தலைவர் விக்கிரம ராஜாவிடம் கேட்டோம்.

மக்கள் மீது அக்கறை இல்லை...

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் விஷயத்தில் அரசு அக்கறை இல்லாமல் வரியை உயர்த்துவது அதிர்ச்சியாக இருக்கிறது. ஏற்கெனவே பொருள்களின் விலை அனைத்துமே கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கின்றன. இப்போது பேக்கிங் செய்யப்பட்ட பிராண்ட் அல்லாத பொருள்களுக்கும் 5% வரி விதிக்கப் பட்டுள்ளது. பிராண்ட் அல்லாத பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டிருப்பதால், வியாபாரிகள் அனைவருமே ஜி.எஸ்.டி நடைமுறைக்குள் வருவது கட்டாயமாகும். அவர்கள் விற்பனைக் கணக்குகளை நிர்வகிக்க கணினிகளைப் பயன் படுத்த வேண்டும்; கணக்குகளை நிர்வகிக்க குறிப்பிட்ட செலவு செய்ய வேண்டும். இல்லையெனில், வரித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். இதனால் 5% வரி மட்டுமல்லாமல், இந்தச் செலவு களையும் சேர்த்து பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் உண்டாகும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, டோல்கேட் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரி களுக்கு விலையை உயர்த்துவதை விட வேறு வழியில்லை.

இப்போது பேக்கிங் செய்யப் பட்ட, பிராண்ட் அல்லாத பொருள் களுக்கு வரி விதிக்கப்படுகிறது. சரி, பேக்கிங் செய்யாமல் விற்பனை செய்ய முடியுமா எனில், அதற்கும் தடை இருக்கிறது. எனவே, பேக்கிங் செய்து விற்க வேண்டிய நிலைதான் உண்டாகும். மக்களும் உணவுப் பொருள்கள் விஷயத்தில் பாதுகாப் பையும் தரத்தையும் பார்ப்பார்கள். அதனால் பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களைத்தான் வாங்கு வார்கள். விலை உயர்வு சுமையை யும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்றார்.

விக்கிரம ராஜா
விக்கிரம ராஜா

மத்திய நிதி அமைச்சரின் விளக்கம்...

அரிசி, கோதுமை போன்ற பொருள்களுக்கு விதிக்கப்பட்ட புதிய வரி குறித்து பல்வேறு சர்ச்சை கள் எழுந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய விளக்கத்தை அளித்தி ருக்கிறார். அதில், ‘‘பாக்கெட்டில் அடைக் காமல், லேபிள் ஒட்டாமல் சில்லறையாக விற்கப்படும் அரிசி மற்றும் கோதுமைக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது’’ என்று சொல்லி இருக்கிறார்.

உணவுப் பொருள்களை பாக் கெட்டில் போடாமல் விற்கக் கூடாது. அப்படி விற்றால் அது சட்டப்படி குற்றம் என மத்திய அரசாங்கம் ஒரு பக்கம் வற்புறுத்தி வரும் நிலையில், பாக்கெட்டில் அடைக்காமல் எப்படி விற்க முடியும் என்கிற கேள்வி எழவே செய்கிறது. சிறு வியாபாரிகளை ஜி.எஸ்.டி நடைமுறைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் ஜி.எஸ்.டி கவுன்சில் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று சொல்லப் பட்டாலும், இதை வேறு விதமாகச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து பார்த்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, ஏழை மக்களை வதைக்கும் வரி விதித்தது சரியா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கோவிட்டுக்குப் பிறகு பெரும்பாலான மக்களின் வருமானம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. தவிர, பல பொருள்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதனால் சாதாரண மக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், அரிசிக்கும், தயிருக்கும் ஜி.எஸ்.டி கட்டி வாங்க வேண்டும் எனில், அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!

வரதராஜன்
வரதராஜன்

‘‘இனி ஏழைகளால் இட்லி, தோசை சாப்பிட முடியாதா?’’

‘‘கிரைண்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கிரைண்டரின் விலை உயர்ந்து, ஏழை மக்கள் அதை வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது’’ என்றார் செளபாக்கியா வெட் கிரைண்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் வரதராஜன்.

‘‘30 ஆண்டுகளுக்கு முன்புவரை அரிசியை ஊறவைத்து, உரலில் ஆட்டி மாவாக்கித்தான் இட்லி, தோசையைத் தயார் செய்து சாப்பிட்டார்கள். இதற்கு அதிக மனித உழைப்பும், நீண்ட நேரம் செலவழிக்க வேண்டியிருந்ததால், விசேஷ நாள்களில் மட்டுமே இட்லி, தோசை செய்து சாப்பிட்டனர். ஆனால், கிரைண்டர் என்பது பயன்பாட்டுக்கு வந்தபிறகு பலரது வீடுகளிலும் தினமும் இட்லி, தோசை சாப்பிடும் வழக்கம் உருவாகியிருக்கிறது.

இட்லி மாவை கிரைண்டரில் அரைப்பதன் மூலம் வேலை எளிதில் முடிந்துவிடும். அதை முடித்துவிட்டு வேறு வேலை செய்யப்போய்விடலாம் என்பதால்தான், பலரும் வீட்டுக்கு ஒரு கிரைண்டரை அவசியம் வேண்டும் என்று நினைக்கின்றனர். பெண்களுக்கு ஒரு கிரைண்டரைத் தருவதன்மூலமே அவர்களை அடுத்தகட்ட முன்னேற்றத்தைக் கொண்டு செல்ல முடியும் என்று நினைத்துதான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கிரைண்டரை இலவசமாகத் தந்தார். அந்த அளவுக்கு முக்கியமான கிரைண்டருக்கான ஜி.எஸ்.டி வரியை 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறார்கள். பொதுவாக, கிரைண்டர்கள் ரூ.4,000 முதல் ரூ.8,000 வரை விற்பனை ஆகின்றன. இதற்கு 5% ஜி.எஸ்.டி வரியாக மக்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாங்கிச் சென்றனர். இப்போது 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருப்பதால், ஏறக்குறைய 600 ரூபாய் முதல் 1,000 வரை ஜி.எஸ்.டி வரியாகச் செலுத்த வேண்டியிருக்கிறது. பெரும் பணக்காரர்களுக்கும், உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த வரி உயர்வால் ஏற்படும் விலையுயர்வைப் பற்றி கவலை இல்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தினரும், ஏழை மக்களும் இந்த விலையுயர்வால் நிச்சயம் பாதிப்படைவார்கள். விலை உயர்ந்ததை நினைத்து, கிரைண்டர்களை வாங்கும் முடிவை முடிந்தவரை தள்ளிப்போடுவார்கள். இதனால் எங்களுக்குத்தான் பெரும் பாதிப்பு ஏற்படும்.

கோவிட் காலத்தில் பல மாதங்கள் கடைகள் மூடப்பட்டதால், கிரைண்டர் தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிப்படைந்தது. அப்போது ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நாங்கள் இன்னும்கூட முழுமையாக மீண்டுவரவில்லை. இந்த நிலையில், இப்போது ஜி.எஸ்.டி வரி உயர்வால், எங்கள் தொழில் மீண்டும் தொய்வடைந்து, வியாபாரம் பாதியாகக் குறையும் அபாயம் இருக்கிறது. எனவே, கிரைண்டர்களுக்கு 18% வரி விதித்ததை அடுத்து வரும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மறுபரிசீலனை செய்து, அதை 12% சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். நீண்ட காலத்தில் கிரைண்டருக்கான வரியை 5% என்கிற அளவிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இட்லி, தோசை என்பது பணக்காரர்களுக்கான உணவு என்பதை மாற்றியது கிரைண்டர் தொழில் நுட்பம்தான். அந்த கிரண்டர்களை சாதாரண மக்கள் வாங்க முடியாத நிலை ஏற்படும் எனில், அவர்கள் இனி இட்லி, தோசை சாப்பிட முடியாத நிலையே ஏற்படும்’’ என்று பேசி முடித்தார் வரதராஜன்.

- ஆகாஷ்