Published:Updated:

வாடகைக்குக் குடியிருப்பவர் கவனத்துக்கு... டி.டி.எஸ் பிடிப்பது உங்கள் கடமை..!

வரிப் பிடித்தம்
பிரீமியம் ஸ்டோரி
வரிப் பிடித்தம்

வரிப் பிடித்தம்

வாடகைக்குக் குடியிருப்பவர் கவனத்துக்கு... டி.டி.எஸ் பிடிப்பது உங்கள் கடமை..!

வரிப் பிடித்தம்

Published:Updated:
வரிப் பிடித்தம்
பிரீமியம் ஸ்டோரி
வரிப் பிடித்தம்

நீங்கள் வாடகைக்குக் குடியிருப்பவர் அதுவும், மாத வாடகை ரூ.50,000-க்கு மேல் வாடகையாகத் தருபவர் எனில், உங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. அதாவது, மாத வாடகை ரூ.50,000-க்கு மேல் வாடகை செலுத்துபவர்கள் 5% தொகையை மூலத்தில் வரிப் பிடித்தம் (Tax Deducted at Source - TDS) செய்து மத்திய அரசுக்குக் கட்ட வேண்டும். இந்த 5% டிடி.எஸ் பிடித்தம், இந்துக் கூட்டுக் குடும்பத்தினருக்கும் (HUF) பொருந்தும்.

ஆர்.ஜெகதீஷ் 
ஆடிட்டர், தேனி
ஆர்.ஜெகதீஷ் ஆடிட்டர், தேனி

2017 மார்ச் 31-ம் தேதிக்கு முன், தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் மட்டும் தான் அவர்கள் வணிகத் தேவைக்குப் பயன்படுத்தும் கட்டடங்களுக்கான வாடகை யில் 10% டி.டி.எஸ் பிடிக்க வேண்டும் என இருந்தது.

அது, இப்போது அனைவருக்கும் பொருந்தும் எனவும், ரூ.50,000-க்குமேல் மாத வீட்டு வாடகை கொடுக்கும்பட்சத்தில் 5% டி.டி.எஸ் பிடிக்க வேண்டும். ரூ.50,000-க்குக் குறைவாக மாத வாடகை கொடுப்பவர்கள் டி.டி.எஸ் பிடிக்கத் தேவையில்லை.

2020-21 கோவிட் காலத்தில், பொதுமக்கள் இடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க 5 சதவிகிதத்துக்கு பதில் 3.75 சதவிகிதமாக டி.டி.எஸ் பிடிக்க மத்திய அரசு சலுகை அளித்தது.

எப்போது டி.டி.எஸ் பிடிக்க வேண்டும்?

இந்த டிடி.எஸ் வரியை வீட்டில் குடியிருப்ப வர் நிதி ஆண்டின் கடைசி மாத வாடகை கொடுக்கும்போது அல்லது குடியிருப்பவர் வீட்டை இடையில் காலி செய்தால் அப்போது பிடிக்க வேண்டும்.

டி.டி.எஸ் தாமதமாகப் பிடிக்கும்பட்சத்தில் மாதம் ஒன்றுக்கு 1% தனி வட்டி கணக்கில் அபராதம் இருக்கிறது. இதையும் சேர்த்து மத்திய அரசுக்கு கட்ட வேண்டும். டி.டி.எஸ் பிடிக்கப்பட்டதிலிருந்து 30 நாள்களுக்குள் மத்திய அரசு கணக்கில் கட்டிவிட வேண்டும்.

உதாரணமாக, ஒரு வீட்டின் மாத வாடகை ரூ.55,000 என வைத்துக்கொள்வோம். இதன்படி, ஆண்டு வாடகை ரூ.6.60 லட்சம் ஆகும். இதில் 5% அதாவது, 33,000 ரூபாயை மார்ச் மாத வாடகையில் பிடித்துக்கொண்டு மீதியைத்தான் உரிமையாளருக்குக் கொடுக்க வேண்டும். இந்த டி.டி.எஸ்ஸை நிதி ஆண்டு நிறைவு பெற்ற அடுத்த மாதமான ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அரசின் கணக்கில் கட்டிவிட வேண்டும்.

தனிநபர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் அவர்களின் பான் எண்ணைக் குறிப்பிட்டு இந்த டி.டி. எஸ் தொகையை மத்திய அரசுக்கு கட்ட வேண்டும். ஆன்லைனில் 26QC (https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/PopServlet?rKey=-1963340285) செலானை நிரப்பி டி.டி.எஸ் கட்ட வேண்டும். இப்படி செய்யும்போது குடியிருப்போர் மற்றும் வீட்டின் உரிமையாளர் இருவரின் பான் எண்ணைக் குறிப்பிடுவது அவசியம்.

வீட்டின் உரிமையாளர் பான் எண்ணைக் குறிப்பிடவில்லை எனில், 20% டி.டி.எஸ் பிடிக்கப்பட வேண்டும். மேலும், வீட்டின் உரிமை யாளர் மூத்த குடிமகனாக இருந்து, வேறு வருமானம் எதுவும் இல்லை என்கிறபட்சத்தில், வரி வரம்புக்கு ஏற்ப பிடிக்கப்பட்ட டி.டி.எஸ்ஸை ரீஃபண்டாக வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது க்ளெய்ம் செய்யலாம்.

வாடகைக்குக் குடியிருப்பவர் கவனத்துக்கு... டி.டி.எஸ் பிடிப்பது உங்கள் கடமை..!

டி.டி.எஸ் சான்றிதழ்

டி.டிஎஸ் தொகையை அரசுக்கு கட்டிய 15 தினங்களுக்குள் வீட்டின் உரிமையாளருக்கு டி.டி.எஸ் சான்றிதழை (16C) வாடகைக்குக் குடியிருப்பவர் வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை எனில், குடியிருப்பவருக்குத் தாமதமாகும் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் டி.டி.எஸ் தொகையைத் தாண்டாத அளவுக்கு இருக்கும்.

வீட்டின் உரிமையாளர் வெளி நாட்டு வாழ் இந்தியர் (NRI) எனில், டி.டி.எஸ் 30% ஆகும். மேலும், இவர்களுக்கு இந்தியக் குடிமக்களுக்கு இருப்பது போல் மாத வீட்டு வாடகைக்கு எந்த வரம்பும் கிடையாது. சிறிய தொகை என்றாலும் அதற்கும் டி.டி.எஸ் பிடிக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் குறைவான வரி வரம்பில் வந்தால், அவர் அதற்கான சான்றிதழை வரித் துறையினரிடமிருந்து பெற்று வீட்டின் உரிமையாளருக்கு கொடுக்க வேண்டும். அந்தச் சான்றிதழின்படி டி.டி.எஸ் பிடித்து அரசுக்கு கட்ட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism