Published:Updated:

வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரி

வருமான வரி

வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி

Published:Updated:
வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரி

டாக்டர் அபிஷேக் முரளி, ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்

இந்திய வருமான வரித்துறை சில சமயத்தில் சில வரிதாரர்களுக்கு நோட்டீஸ் (Notice) அனுப்பும். இப்படி நோட்டீஸ் வந்த வுடன் பலரும் பயந்துவிடுகிறார்கள். என்ன காரணத்துக்காக நோட்டீஸ் அனுப்பட்டிருக் கிறது எனத் தெரிந்தால் அப்படி எல்லாம் பயப்படத் தேவையில்லை.

டாக்டர் அபிஷேக் முரளி 
ஆடிட்டர் & பிரசிடென்ட், 
அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்
டாக்டர் அபிஷேக் முரளி ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்

வருமானவரி நோட்டீஸ் என்றால் என்ன?

வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யப் பட்டவுடன், அது வரித் துறையால் பரிசீலிக்கப் பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இது பொதுவாக, சிஸ்டம் (System) சார்ந்த செயல் முறையாகும். கம்ப்யூட்டர் அல்காரிதம் அல்லது வருமான வரி அதிகாரி அல்லது கமிஷனர் சில குறிப்பிட்ட வரி சார்ந்த அம்சங் களைப் பற்றி சரிபார்க்க வேண்டும் என்று முடிவு செய்யலாம். இது வரி செலுத்துவோரின் வருமானம் பற்றிய தகவல் ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டதால் இருக்கலாம்.

உதாரணமாக, ஒருவர் நிதி ஆண்டில் ரூ.30 லட்சத்துக்குமேல் சொத்து (வீடு, மனை) ஏதாவது விற்றிருந்து, அதற்கான லாபத்தைக் கணக்கில் காட்டவில்லை எனில், நோட்டீஸ் வர வாய்ப்பு இருக்கிறது. வரிதாரர் சொத்து வாங்கிய விவரம் பத்திரப்பதிவு துறை மூலம் வருமானவரித் துறைக்குச் சென்றிருக்கும். அதன் அடிப்படையில் மூலதன ஆதாய வரிக் கட்ட சொல்லி நோட்டீஸ் வரும்.

இதேபோல், ஏதாவது வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருந்தால், செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தச் சொல்லி வரி தாரருக்கு வருமானவரித் துறையிலிருந்து அறிவிப்பு வரும்.

நோட்டீஸ் பற்றி எப்படித் தெரிந்துகொள்வது?

இதற்குமுன் வரிதாரரின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்குத் தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இப்போது இ-மெயில் மூலம் அனுப்பப்படுகிறது. இது தவிர, வருமான வரித் துறையின் இணையதளத்தில் வரிதாரரின் பான் எண் அடிப்படையில் அவர் இ- ஃபைலிங் செய்யும் பகுதியில் இந்த விவரம் பதிவேற்றம் செய்யப்படும். இவை தவிர, பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். எனவே, ஒருவர் அவரின் செயல்பாட்டிலுள்ள செல்போன் நம்பர், இ-மெயில் ஐ.டி ஆகியவற்றை வரித் துறையில் பதிவு செய்து வைத்திருப்பது அவசியம்.

வருமான வரி நோட்டீஸ் வந்தால்
என்ன செய்ய வேண்டும்?

நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பும் போதே எவ்வளவு நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்கிற கெடுதேதியைக் குறிப்பிட்டுத்தான் அனுப்பும். அனைத்து நோட்டீஸ் களுக்கும் வரிதாரர் பதில் அளிக்க வேண்டியது கட்டாயமாகும்; நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கான காரணம் தவறாக இருந்தாலும் பதில் அளிப்பது அவசியமாகும்.

நோட்டீஸ்க்கு பதில் அளிக்கவில்லை எனில்..?

கெடுதேதிக்குள் பதில் அளிக்க வில்லை எனில், ஏற்கெனவே வந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்த வரித் தொகை அல்லது அபராதத் தொகை அதிகரிக்கப்படலாம். வரி கட்ட வேண்டியிருந்தால், கூடுதல் வட்டி யுடன் வரி செலுத்த வேண்டிவரும். பாக்கி வரித் தொகைக்கு மாதம் தோறும் 1% வட்டி போடப்பட்டு வரும். மேலும், வரி செலுத்துவோர் அவரின் வருமான விவரங்களை வரிக் கணக்குத் தாக்கலில் சரியாகக் குறிப்பிடாததற்கு அபராதம் விதிக்கப் படலாம். நோட்டீஸ்க்கு பதில் அளிக்கவில்லை என்பதற்கு கூடுதல் அபராதம் வருமானவரித் துறையால் விதிக்கப்படலாம்.

பதில் அளிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வருமான வரித்துறை கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கம் அளிப்பது அவசியம். தகவல்களைத் தொகுக்க அல்லது அவற்றைச் சமர்ப்பிக்க கால அவ காசம் தேவைப்பட்டால் கேட்கலாம். பதில் எதுவும் கொடுக்காமல் இருப்பதுதான் தவறாகும்.

கேட்கப்பட்டிருக்கும் விளக்கத்துக்கு மட்டும் பதில் கொடுக்கவும்

தனிப்பட்ட பிரச்னைக்கு அனுதாபத்தைப் பெற முயற்சி செய்து, ‘என்னை மன்னித்து விடுங்கள், மிகவும் கஷ்டத்திலிருக்கிறேன்’ என்று சொல்வதால் எந்தப் பலனும் இல்லை. மேலும், கேட்டிருக்கும் கேள்விகளுக்கு சரியான விளக்கம் தருவது அவசியம்.

பாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால்?

நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு, வரி செலுத்து பவருக்கு எதிராகவோ, பாதகமாகவோ ஆணை இருந்தால், தீர்வு பெற அவர் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம்.

வருமான வரி நோட்டீஸ்கள் பெரும்பாலும் சிக்கலான விஷயங்களில் தொடர்புடையவை மற்றும் வரிதாரரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே, பதிலளிக்கும் போது தொழில்முறை வல்லுநர்களின் வழிகாட்டுதலைப் பெறுவது நல்லதாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism