Published:Updated:

வருமான வரி கணக்குத் தாக்கல்... தேவையான 7 முக்கிய ஆவணங்கள்..!

வரி கணக்குத் தாக்கல்
பிரீமியம் ஸ்டோரி
வரி கணக்குத் தாக்கல்

வரி கணக்குத் தாக்கல்

வருமான வரி கணக்குத் தாக்கல்... தேவையான 7 முக்கிய ஆவணங்கள்..!

வரி கணக்குத் தாக்கல்

Published:Updated:
வரி கணக்குத் தாக்கல்
பிரீமியம் ஸ்டோரி
வரி கணக்குத் தாக்கல்

டாக்டர் அபிஷேக் முரளி, ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்

முடிந்த 2021-22 நிதி ஆண்டுக்கான (2021 ஏப்ரல் 1 முதல் 2022 மார்ச் 31 வரை) வரிக் கணக்குத் தாக்கல் தொடங்கி விட்டது. வரித் துறையும் அதற்கான படிவங் களை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்கள் கீழ்க்கண்ட 7 முக்கியமானஆவணங்களைக் கட்டாயம் தயாராக வைத்திருப்பது நல்லதாகும்.

டாக்டர் அபிஷேக் முரளி 
ஆடிட்டர் & பிரசிடென்ட், 
அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்
டாக்டர் அபிஷேக் முரளி ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்

1. படிவம் - 16

பணியாளருக்கு அவரின் நிறுவனத்தில் மே மாத வாக்கில் படிவம் 16 (Form 16) தருவார்கள். அதில், அவருக்கு முடிந்த நிதி ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த சம்பளத்தின் விவரங் கள் மற்றும் தகுதியுடைய வருமான வரி விலக்குகள், சம்பளத்தில் பிடிக்கப்பட வருமான வரி ஆகியவை தரப்பட்டிருக்கும்.

2. படிவம் 26AS, படிவம் 16A

வரிதாரரின் பான் எண்ணின் அடிப் படையில் 2021-22–ம் நிதி ஆண்டில் அவருக்கு பிடிக்கப்பட்ட டி.டி.எஸ் விவரங்கள் வருமான வரி இணையதளத்திலுள்ள வரிதாரருக்குரிய 26AS படிவத்தில் இடம்பெற்றிருக்கும். இந்தப் படிவத்தில் ஆண்டு வரிக் கணக்கு அறிக்கையின் (Annual information Statement – AIS) விவரமும் இடம்பெற்றிருக்கும். வரிதாரருக்கு நிதி ஆண்டில் வங்கி சேமிப்புக் கணக்குகள், எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டி வருமானத் துக்கு மூலத்தில் பிடிக்கப்பட்ட வரி (TDS) போன்ற விவரங்கள் படிவம் 16A-ல் இடம் பெற்றிருக்கும்.

3. சொத்து மூலமான டி.டி.எஸ்

2021-22-ம் நிதி ஆண்டில் வீட்டு வாடகை மாதம் ரூ.50,000 தந்திருக்கும்பட்சத்தில், அந்தத் தொகைக்கு 5% டி.டி.எஸ் பிடித்து வரிதாரர் மத்திய அரசுக்குக் கட்ட வேண்டும். அதே போல், ரூ.50 லட்சத்துக்கு மேல் சொத்து மைமாறும்போது, சொத்தை வாங்குபவர் 1% தொகையை டி.டி.எஸ்ஸாகப் பிடிக்க வேண்டும்.இந்தத் தொகையை அதற்கென இருக்கும் மத்திய அரசின் கணக்கில் வங்கியின் மூலம் கட்ட வேண்டும். இதில், ஏதாவது உங்களுக்குப் பொருந்தி வந்தால் அதற்கான ஆவணங்களையும் கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வருமான வரி கணக்குத் தாக்கல்...
தேவையான 7 முக்கிய ஆவணங்கள்..!

4. நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் டிவிடெண்ட்

ஒருவர் நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து, அதன்மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும். இந்த வரியானது ஒருவர் எந்த வருமான வரம்பில் வருகிறாரோ (பழைய முறையில் 5%, 20%, 39%), அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, டிவிடெண்ட் வருமான விவரங்களைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

5. வரி சேமிப்பு முதலீடுகள்

வரிதாரர் பழைய வரி முறையைப் பின்பற்றினால், அவர் வருமான வரியை மிச்சப்படுத்த 2021-22-ம் நிதி ஆண்டில் செய்திருக்கும் முதலீடுகளுக்கான ஆதாரங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். உதாரணம், 80C பிரிவின்கீழ் வரும் பொது சேமநல நிதி (பி.பி.எஃப்), ஐந்தாண்டு வங்கி எஃப்.டி, வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் (இ.எல்.எஸ்.எஸ்) போன்றவை.

6. வரி சேமிப்பு செலவுகள்

ஆயுள் காப்பீட்டு பிரீமியம் (பிரிவு 80C), மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் (80D) போன்றவற்றுக்கான ஆதாரங்களைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். தவிர, திரும்பக் கட்டும் வீட்டுக் கடனில் அசல் (80C), வட்டி (24B) மற்றும் கல்விக் கடனுக்கான வட்டி (80E) உள்ளிட்ட வற்றைக் கட்டியிருந்தால் அவற்றுக் கான ஆதாரத்தை வைத்துக் கொள்வது அவசியம்.

7. மூலதன ஆதாயங்கள்

நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், ரியல் எஸ்டேட், கிரிப்டோகரன்சி ஆகியவற்றில் செய்திருக்கும் முதலீடுகள் மூலம் கிடைக்கும் லாபம் மூலதன ஆதாயம் எனப்படும். பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்கி ஓராண்டுக்குள் விற்றால், குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% கட்ட வேண்டும். இதுவே ஓராண்டுக்கு மேல் விற்றால், நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரி கிடையாது. இதற்கு மேற்பட்ட நீண்ட கால லாபத்துக்கு 10% வரி கட்ட வேண்டும். இதுபோன்று ஒவ்வொரு முதலீட்டுக்கும் அதன் முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து வரி கட்ட வேண்டிவரும்.

உங்களுக்கு ஏதாவது குறுகிய கால மற்றும் நீண்ட கால ஆதாயம் இருந்தால் அவற்றுக்கான ஆதாரத்தையும் தயாராக வைத்துக்கொள்ளவும். மேற்கண்ட ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களைத் தயாராக வைத்திருந்தால், வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது மிகவும் சுலபம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism