பிப்ரவரி 1 அன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில், வரும் 2020-21-ம் நிதியாண்டுக்குத் தனிநபர் வரி விகிதத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனால் வருமான வரியைக் கணக்கிடுவதிலும், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதிலும் புதிய சவால்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சவால்களுக்கான தீர்வுகள் என்னென்ன என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், புதிய வரிமுறையில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கின்றன என்பதைப் பார்த்துவிடுவோம்.

புதிய வரி விகித மாற்றங்கள்!

வருமான வரி விகித வரம்பில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைத் தெரிந்துகொள்ள அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையைப் பாருங்கள். இந்த வரி வகித வரம்பு, தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பம் (HUF) 60 வயதுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே. தவிர, 60-லிருந்து 80 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு ரூ.3 லட்சம் வரை வரி இல்லை. 80 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வரி இல்லை.

சர்சார்ஜ் வரியாக, வரி செலுத்தும் வருமானம் ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவிகிதமும், ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவிகிதமும் கணக்கிடப்படுகிறது. அதற்கு மேலும் சில நிபந்தனைகளுடன் 25% மற்றும் 37% என்ற இரண்டு சர்சார்ஜ் வரி வரம்புகள் உள்ளன.

இந்த வரியுடன் சேர்த்து சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரியாக 4% மற்றும் சர்சார்ஜ் வரி விதிக்கப்படும். பிரிவு 87A-ன்கீழ், ரூ.5 லட்சம் வரை வரிச் செலுத்தக்கூடிய வருமானமாக இருந்தால், மொத்த வரியும் அதாவது, 12,500 ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும்.

புதிய வரி முறையில் இல்லாமல் போகும் சலுகைகள்

பட்ஜெட்டில் அறிவிக்கப்படடிருக்கும் புதிய வருமான வரி விதிமுறையை தேர்வு செய்தால், பின்வரும் வரிச் சலுகைகளை நீங்கள் இழக்க வேண்டியிருக்கும்.

1. பிரிவு 80C-ல் என்.எஸ்.சி., பி.பி.எஃப் முதலீடுகள் மற்றும் கல்வி டியூஷன் கட்டணம், திருப்பிச் செலுத்தும் வீட்டுக் கடனின் அசல்.

2. பிரிவு 80 CCD(1)-ல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் தரப்படும் ரூ.50,000 வருமானக் கழிவு.

3. மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம், வருமானம் ஈட்டுபவரைச் சார்ந்தோருக்கான மருத்துவச் செலவுகள், கல்விக் கடன் வட்டி, வங்கிச் சேமிப்பு வட்டி மற்றும் பிரிவு VI A தள்ளுபடிகள் (பிரிவு 80C, 80CC, 80CCD, 80D, 80DD, 80DDB, 80E, 80EE, 80EEA, 80EEB, 80G, 80GG, 80GGA, 80GGC, 80IAB, 80-IAB, 80-IAC, 80-IB, 80-IBA போன்றவை).

4. வீட்டு வாடகைப் படி 10(13A).

5. பயண விடுப்புப் படி (LTA) 10(5).

6. பிரிவு 10 (14) கீழ்வரும் சிறப்புப் படிகளான குழந்தைகள் கல்விப் படி, பயணப் படி மற்றும் இன்னபிற சிறப்புப் படிகள்.

7. பிரிவு 16-ல் உள்ளபடி நிலைக்கழிவு (Standard Deduction ரூ.50,000), தொழில் வரி, பொழுதுபோக்குப் படி.

8. சொத்தின் மீதான வருமானத்திலிருந்து இழப்பு (வீட்டுக் கடன் வட்டி) அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை மற்றும் கூடுதலாக வாங்கக்கூடிய விலையிலான வீடுகளுக்கான வீட்டுக் கடன் வட்டி ரூ.1.5 லட்சம்.

பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வரிச் சலுகைகள்

இந்தப் புதிய வரி முறையில் சில வருமான வரி விலக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றில் குறிப்பிடத் தகுந்த சில பின்வருமாறு...

1. பிரிவு 80CCD(2)-ல் மாதச் சம்பளதாரர்கள் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் தங்களுடைய பங்களிப்பைச் செலுத்தினால், அது அந்தப் பிரிவின்படி அதிகபட்சமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% மற்றும் இதர ஊழியர்களுக்கு 10% அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியை வருமானக்கழிவாக எடுத்துக் கொள்ளலாம்.

2. விவசாய வருமானம்.

3. வாடகை வீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் 30% பராமரிப்புச் செலவுகளுக்கான கழிவு.

4. ஆயுள் காப்பீடு பாலிசி மூலம் கிடைக்கும் வருமானம்.

5. ஆள்குறைப்புக்காகத் தரப்படும் இழப்பீடு ரூ.5 லட்சம் வரை.

6. தானாக முன்வந்து ஓய்வுபெறும் திட்டத்தின்கீழ் கிடைக்கும் பணம் ரூ. 5 லட்சம் வரை.

7. விடுப்புக்கு ஈடான பணம் (Leave Encashment) ரூ.3 லட்சம் வரை அரசு ஊழியர்களுக்கு வரம்பு கிடையாது.

8. தனிநபராக வியாபாரம் செய்பவர்கள் பிரிவு 80JJAA-ன்கீழ் புதிய ஊழியர்களை நிறுவனத்தில் சேர்த்தது தொடர்பாகத் தரப்படும் வருமானக் கழிவை அந்தப் பிரிவின்கீழ் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நிபந்தனைகள் என்னென்ன?

வருமான வரியைத் தாக்கல் செய்வது குறித்து சில நிபந்தனைகளை விதித்துள்ளது வருமான வரித்துறை. அந்த விதிமுறைகள் என்னென்ன?

1. புதிய வரி விகிதத்தைத் தேர்வு செய்பவர்கள் தங்கள் வருமான வரிப் படிவத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, தனிநபர்கள் 31 ஜூலைக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

2. தனிநபர்களின் வருமானத்தில் வியாபார வருமானம் இல்லாமல் இருப்பின், பழைய மற்றும் புதிய வரி விகிதத்தை ஒவ்வோர் ஆண்டும் தங்களுடைய நிதித் திட்டமிடலுக்கு ஏற்ப மாற்றி மாற்றித் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், தனிநபரின் வருமானத்தில் வியாபார வருமானம் இருப்பின், ஒரு முறை புதிய வரி விகிதத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டால், மீண்டும் பழைய வரி விகிதத்துக்கு மாற ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே தரப்படும்.

செலுத்திய வரியை அலுவலகம் திருப்பித் தராது!

3. கடந்த வருடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சொத்தின் வருமானத்தின் மீதான இழப்புத் தொகையை (வரிச் சலுகை கிடைக்காமல் இருந்த வீட்டுக் கடன் வட்டி) இந்த வருட வருமானத்தில் கழித்துக்கொள்ள முடியாது.

வரும் 2020-21-ம் நிதியாண்டின் ஆரம்பத்திலேயே, அதாவது ஏப்ரல், மே மாதங்களில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம், `எந்த வரி விகிதப் பிடிப்பை ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள்...’ என்று கேட்கப் போகின்றனவா என்பது தெரியவில்லை.

எந்தவிதமான சேமிப்பும் முதலீடும் இல்லாதவர் களுக்கு புதிய வரி விகிதம் மிகுந்த பயனைத் தரும்!

ஏனெனில், பழைய வரி விகிதத்தில் வரிப் பிடித்தம் செய்து, நிதியாண்டின் இறுதியில் புதிய வரி விதிப்பு விகிதத்தை ஊழியர் தேர்ந்தெடுத்தால், அப்போது அவர் நிறுவனத்திடமிருந்து அதிகமாக பிடித்த வரித் தொகையை, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துதான் கூடுதலாக செலுத்திய வரியை திருப்பிப் பெற முடியும். அலுவலகத்திடமிருந்து அந்த ஆண்டே திருப்பிப் பெற முடியாது.

4. `வருமான வரி வழக்கு ஏதேனும் நிலுவையில் இருந்து, அந்த வழக்கு வட்டி மற்றும் அபராதத் தொகைக்காக இருந்தால், மார்ச் 31, 2020-க்குள், அதில் 25% தொகையை செலுத்தி வழக்கை முடித்துக்கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கெடுவைத் தாண்டினால் மேலும் 10% செலுத்தி, ஜூன் 30, 2020-க்குள் வழக்கை முடித்துக்கொள்ளலாம்.

பழைய வரியா, புதிய வரியா... எதைத் தேர்வு செய்வது?

இன்றைக்கு எல்லோரும் திரும்பத் திரும்பக் கேட்கும் கேள்வி, `நான் பழைய வரிமுறையைத் தேர்வு செய்து வரி செலுத்துவதா அல்லது புதிய வரிமுறையைத் தேர்வு செய்வதா...’ என்பதுதான். இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் மூன்று வழிமுறைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.

முதலில் வரி தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் புரிந்துகொண்டு நீங்களே கணக்கிடுவது. இது தனிநபர்களால் முடியாது என்று சொல்ல முடியாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு வரி தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் புரிந்துகொண்டு கணக்கீட்டைச் செய்தால் இது சாத்தியமே.

இரண்டாவது, உங்கள் வருமானம் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஒரு ஆடிட்டரிடம் தந்து, நீங்கள் செலுத்த வேண்டிய வரி குறித்த விவரங்களைப் பெறுவது. இந்தச் சேவையை ஆடிட்டரிடமிருந்து பெற கட்டணம் தர வேண்டியிருக்கும்.

மூன்றாவது எளிய வழி, வருமான வரித்துறை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் கால்குலேட்டரைப் பயன்படுத்துவது. இந்த கால்குலேட்டரைப் பயன்படுத்த https://www.incometaxindiaefiling.gov.in/Tax_Calculator/index.html?lang=eng என்ற வலைதள முகவரிக்குச் செல்லவும். இந்த வலைதளப் பக்கத்தில் சென்ற பிறகு முதலில் உங்கள் வயதைத் தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்கான வரிவிலக்கு மற்றும் வருமானக் கழிவுகளுக்கு முன்னாலுள்ள மொத்த வருமானத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து, வரிவிலக்கு மற்றும் வருமானக் கழிவுகளின் மொத்தத் தொகையை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த இரண்டு தொகைகளையும் குறிப்பிட்டால், பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளின்படி நீங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டி யிருக்கும் என்பதை கால்கு லேட்டரே சொல்லிவிடும். அதன் பிறகு உங்களுக்கான வரி விலக்கு பற்றியோ, வருமானக் கழிவு பற்றியோ சந்தேக மிருந்தால் ஆடிட்டரை அணுகுவது நல்லது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், எந்த விதமான சேமிப்பும், முதலீடும் இல்லாதவர்களுக்கு புதிய வரி விகிதம் மிகுந்த பயனைத் தரும்.

ஆனால், இந்த புதிய வரி விகித பயன்களைப் பெறுவதற்காக சேமிப்பையும், முதலீடுகளையும் நிறுத்துவது தனிநபரின் எதிர்காலத்துக்கும், அவரின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல.