Published:Updated:

கொரோனா சூழல்... வரிதாரர்களுக்கான 5 சலுகைகள்..! என்னென்ன தெரியுமா..?

T A X B E N E F I T S

பிரீமியம் ஸ்டோரி

ஆர்.ஜெகதீஷ், ஆடிட்டர், தேனி

கோவிட்-19 ஊரடங்கால் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறது. வேலை இழப்பு, வாய்ப்பு குறைந்து பலரையும் வறுமைக்குத் தள்ளியிருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மீள பலரும் மற்றவர்களிடமிருந்து உதவி பெற்றிருக்கிறார்கள். இந்த உதவித் தொகைக்கு வரி உண்டா என்கிற குழப்பம் நிலவிவந்த நிலையில் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) வரிதாரர்களுக்கு ஐந்து சலுகைகளை அறிவித்திருக்கிறது.

ஆர்.ஜெகதீஷ் 
ஆடிட்டர், தேனி
ஆர்.ஜெகதீஷ் ஆடிட்டர், தேனி

1. கோவிட் சிகிச்சை: உதவித் தொகைக்கு வரிச் சலுகை...

வழக்கமாக, பணியாளருக்கு மருத்துவச் செலவுக்கு நிறுவனம் அளிக்கும் தொகை வரிக்கு உட்பட்டது. ஆனால், கொரோனா வால் பாதிக்கப்பட்ட ஒருவர் அவரின் நிறுவனம் அல்லது அரசிடமிருந்து சிகிச்சைக்காகப் பெறும் தொகைக்கு வரி எதுவும் இல்லை என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த வரிச் சலுகைக்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்பட வில்லை.

பல வரிதாரர்கள், உறவினர்கள், நண்பர், நலம் விரும்பிகள் மற்றும் நிறுவனத்திடமிருந்து நிதி உதவியைப் பெற்றிருப்பார்கள். 2019-20-ம் மற்றும் அடுத்துவரும் ஆண்டுகளில் கோவிட் மருத்துவச் சிகிச்சைக்காக வரிதாரர் பெற்றிருக்கும், பெறும் தொகைக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா சூழல்... வரிதாரர்களுக்கான 5 சலுகைகள்..! என்னென்ன தெரியுமா..?

2.கோவிட் இறப்பு: குடுப்பத்தினர் பெறும் கருணைத் தொகைக்கு வரி விலக்கு...

கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்த பின், குடும்பத்தினர் பெரும் கருணைத் தொகைக்கு வரி கிடையாது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செய்யும் நிதி உதவித் தொகைக்கும் வரி இல்லை. அதிகபட்சம் ரூ.10 லட்சத்துக்கு வரிச் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரிச் சலுகை கொரோனாவால் குடும்பத் தலைவரை இழந்த குடும்பங் களுக்கு நிச்சயம் ஒரு நிவாரணமாக இருக்கும்.

3. மூலதன ஆதாய வரிச் சலுகை

மனை, வீடு விற்றதன் மூலம் கிடைத்துள்ள நீண்டகால மூலதன ஆதாயத்தை முதலீடு செய்வது (கேப்பிட்டல் கெயின் பாண்ட்), வேறு வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது மூலம் வரிச் சலுகை பெற முடியும்.

இதற்கான வருமான வரி பிரிவுகள் 54, 54 இ.சி, 54ஜிபி ஆகியவை உள்ளது. இந்த வரிச் சலுகையைப் பெறுவதற்கான கெடுதேதி ஜூன் 30-ஆக இருந்தது, இப்போது செப்டம்பர் 30-ம் தேதிக்கு நீடிக்கப் பட்டுள்ளது. இந்த மூன்று மாத நீடிப்பின் மூலம் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கட்டுமான வேலை களை நிதானமாக மேற்கொள்ளவும், வீட்டை தேடி வாங்கவும் முடியும்.

4. விவாத் சே விஸ்வாஸ் திட்டம் நீடிப்பு...

வருமான வரி, வட்டி, அபராதம், கட்டணம் போன்ற விவகாரங்களைத் தீர்த்து வைக்க விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தை (Vivad Se Vishwas scheme) மத்திய அரசு கொண்டுவந்தது. கூடுதல் தொகை எதுவும் செலுத்தத் தேவை இல்லை என்றால் ஆகஸ்ட் 31-ம் தேதி வரைக்கும் இதற்கான அறிக்கையை தொடர்புடைய வரிதாரர்கள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என்றால் கெடுதேதி அக்டோபர் 31-ம் தேதிக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

5. பான் - ஆதார் இணைப்பு...

பான் எண் மற்றும் ஆதார் எண் இணைப்புக்கான கெடுதேதி செப்டம்பர் 30-ம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள், அவர்களின் குடும்பத் தினருக்கு இந்தச் சலுகைகள் பயணுள்ளதாக இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு