Published:Updated:

குடும்பத்தினருக்கான வரிச் சலுகைகளைப் பயன்படுத்துங்கள்..! - அதிக வரிச் சேமிப்புக்கு எளிய வழி!

TAX

பிரீமியம் ஸ்டோரி
ராளமான வழிகளில் தாராளமாக வரியைச் சேமிக்க வரிச் சலுகைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் முதன்மையானது, வரிதாரர் (Assesse) ஒருவர் தன் குடும்ப உறுப்பினர் சார்ந்த வரிச் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்வது. இதன்மூலம் வரி கட்டுவதிலிருந்து விடுபடலாம் அல்லது 20 சதவிகிதமாக உள்ள வரியை 5 சதவிகிதத்துக்குள் அடங்கச் செய்யலாம். 30% வரி வரம்புக்குள் உள்ளவர்கள் தனது வருமான வரியை 20 சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்தலாம். இது எப்படி என்று பார்ப்போம்.

குடும்பத்தை இரு பிரிவாக...

மருத்துவக் காப்பீட்டுக்கான பிரிவு 80D-யில் குடும்பம் என்பது இரு பிரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது. வரிதாரர் மற்றும் அவரின் மனைவி, பிள்ளைகள் முதல் பிரிவு. இந்தப் பிரிவுக்கான அதிகபட்ச மருத்துவக் காப்பீட்டுத் தொகை 50,000 ரூபாய். வரிதாரரோ, அவரின் மனைவியோ மூத்தக் குடியினராக இருக்கும்பட்சத்தில் 50,000 ரூபாயை வரிச் சலுகையாகப் பெறலாம். வரிதாரரின் மனைவியோ, வரிதாரரோ 60 வயதுக்கு உட்பட்டவர் என்றால் ரூ.25,000 வரிச் சலுகை பெறலாம்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

80D-யின் மற்றொரு உட்பிரிவின்படி, வரிதாரரின் தாய் தந்தை ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் 60 வயதை எட்டியிருந்தால், அவர்களுக்குத் தனியே மற்றொரு 50,000 ரூபாய் வரிச் சலுகை பெற முடியும். மாறாக, வரிதாரரின் பெற்றோர் இருவருமே 60 வயதுக்கு உட்பட்டவர்கள் எனில், பெற்றோருக்கான மருத்துவக் காப்பீட்டுச் சலுகை 25,000 ரூபாய்க்கு மட்டுமே. இவற்றின் மூலம் அதிகபட்சம் ரூ.1 லட்சம் ரூபாய் சலுகை பெறலாம்.

ரூ.1.5 லட்சம் வரை..!

வரிதாரர் அவரின் மனைவி மக்கள் ஆகியோருக்காக ஆயுள் காப்பீடு பிரீமியம் செலுத்துதல், ஒத்திவைக்கப் பட்ட பென்ஷன் (Deferred Annuity) திட்டத்துக்குச் சந்தா செலுத்துதல், சுகன்யா சம்ருதித் திட்டத்தில் சந்தா செலுத்துதல் போன்றவற்றால் அதிக பட்சமாக ரூ.1.5 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம். பிராவிடன்ட் ஃபண்ட் திட்டம் சார்ந்த ஒருவர் சம்பளப் பிடித்தம் போக ரூ.1.5 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட தொகையில் பிள்ளைகள் பெயரில் பி.பி.எஃப் கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டங்களில் எது உங்களுக்கு ஏற்றதாக இருக்குமோ, அந்தத் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.

80C-யின் உச்ச வரம்பு ரூ.1.5 லட்சம் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. மூத்தக்குடியாக உள்ள பெற்றோர் பெயரில் உள்ள சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டமும் பிரிவு 80C-யைச் சேர்ந்ததுதான். பெற்றோரின் வருமானம் ரூ.3 லட்சத்துக்குக்கீழ் இருப்பின் இந்தத் திட்டத்தில் வரிச் சலுகை பெறலாம்.

வரிச் சேமிப்பு
வரிச் சேமிப்பு

பெற்றோர்களுடன் சகோதர, சகோதரிகள்..!

இனி இரண்டாவது பிரிவைப் பார்ப்போம். இதில், வருமான வரிப் பிரிவு 80DD மற்றும் 80U ஆகியவற்றில் குடும்பம் என்பது வரிதாரர் மற்றும் அவரைச் சார்ந்து வாழும் அனைவரையும் கொண்டது. அதாவது, தாய், தந்தை, சகோதரர், சகோதரி என அனைவரையும் சேர்த்துத்தான் இந்தப் பிரிவுகளின் சிறப்பு அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையின் கீழ் மாற்றுத் திறனாளியாகவும் தன்னைச் சார்ந்து வாழ்பவராகவும் உள்ளவருக்கு அதிகபட்சம் ரூ. 1.25 லட்சம் வரிச் சலுகை பெறலாம். பராமரிப்பு, பயிற்சி, மருத்துவச் செலவு போன்றவை இந்தப் பிரிவில் வரும். இதேபோல, பிரிவு 80DDB-யின் கீழ் தீவிர நோய்களான சிறுநீரக கோளாறு, புற்றுநோய் போன்ற வற்றுக்கு வரிச்சலுகை உண்டு. அதாவது, 60 வயதுக்கு உட்பட்ட ஒருவர் வரிதாரரைச் சார்ந்து வாழ்பவர் எனில், 40,000 ரூபாய் வரையான செலவுத் தொகையும், சார்ந்து வாழ்பவர் மூத்தகுடி எனில், சிகிச்சைச் செலவு ரூ.1 லட்சம் வரையும் வரிச் சலுகை பெறலாம்.

பெற்றோர் மூலம் வாடகைச் சலுகை..!

ஒரு சம்பளதாரர் வாடகை வீட்டில் குடியிருந்தால், அந்த சம்பளதாரர் தனது சம்பள வருமானத்திலிருந்து கொடுக்கும் 7.2 லட்சம் ரூபாய் வரையான வாடகைக்கு வரிச் சலுகை தருகிறது பிரிவு10(13). இந்தப் பிரிவின் கீழும் பெற்றோர் மூலம் வரிச் சலுகை பெறலாம்.

அதாவது, சம்பளதாரர் எந்த ஊரில் பணி செய்கிறாரோ, அந்த ஊரிலேயே அவருக்கு சொந்த வீடு இல்லாதபட்சத்தில், மேற்கண்ட பிரிவின்கீழ் சலுகை பெறலாம். இதன்படி, சம்பளதாரரின் தாய் - தந்தை ஆகிய இருவரில் யார் பெயரில் வீடு பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அவரது வீட்டில் சம்பளதாரர் வாடகைக்குக் குடியிருக்கலாம். கொடுக்கிற வாடகைக்கு அதிகபட்சமாக ரூ.7.2 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம். இந்தச் சலுகைகையைப் பெற சம்பளதாரர் குடியிருக்கும் வீட்டுக்குச் சொந்தக்காரராகப் பதிவு பெற்றுள்ள அவரின் தாய் அல்லது தந்தை, சம்பளதாரரைச் சார்ந்து வாழ்பவராக இருக்கக் கூடாது. மேலும், ஒரு நிதியாண்டு முழுவதும் சம்பளதாரர் கொடுக்கும் வாடகைப் பணம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமானால், அதற்கான வரியை சம்பளதாரர் பிடித்தம் செய்து கொண்டுதான் வாடகையைத் தரவேண்டும். வாடகை ரூ.1 லட்சத்துக்கும் அதிகம் எனில், வீட்டுச் சொந்தக்காரராக உள்ள தாய், தந்தையின் பான் எண், வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங் களைச் சமர்ப்பிக்க வேண்டும். இப்படித் தருகிற வாடகைக்கு, ரசீது கட்டாயம். சம்பளத்தில் 10 சதவிகிதத்துக்கு அதிகமாக வாடகை தந்திருக்க வேண்டும்.

வீட்டு வாடகைக்கு இன்னொரு சலுகை..!

வீட்டு வாடகைக்கு 80GG-யின் மூலம் இன்னொரு சலுகையும் கிடைக்கும். பொதுவாக, சம்பளதாரர் அனைவருக்குமே சம்பளத்துடன் வீட்டு வாடகை அலவன்ஸ் தரப்படுவதில்லை. இந்த வகையைச் சேர்ந்த சம்பளதாரர்கள், சொந்த ஊரில் வாடகை வீட்டில் இருந்தாலும் சரி, வெளியூரில் வேலை பார்த்து அந்த ஊரில் வாடகை வீட்டில் குடியிருந்தாலும், கொடுக்கிற வாடகைக்கு வரிச் சலுகை பெறலாம்.

இந்தச் சலுகை ஒரு நிதியாண்டுக்கு அதிகபட்சம் 60,000 ரூபாய் அதாவது, மாத வாடகை ரூ. 5,000 என்ற கணக்கீட்டில் அல்லது அவரது சம்பள வருமானத்தில் 25% - இவை இரண்டில் எது குறைவோ அந்தத் தொகைக்கு சலுகை பெறலாம் ஓராண்டு சம்பளத்தில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக வாடகை கொடுத்தவர்கள் இந்தச் சலுகை பெறலாம்.

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு வாழ்க்கைக்கு மட்டுமல்ல, வரிச் சலுகை பெறவும்தான் என்பதை மறக்காதீர்கள்!

’கல்விக் கடனுக்கு..!

80E கல்விக் கடன் வட்டிக்கானது. இந்தச் சலுகையை வரிதாரர் தனது கல்விக் கடனுக்குப் பயன்படுத்த முடியாது. ஆனால், வரிதாரரின் மனைவி, பிள்ளைகள் வாங்கிய கல்விக் கடன் வட்டிக்கு சலுகை பெறலாம். குடும்பத்தினருக்கான வரிச் சலுகைகளில் இது மிகப்பெரிது. எட்டு நிதி ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும் கல்விக் கடன் வட்டிச் சலுகைக்கு பண வரம்பே கிடையாது!

பிட்ஸ்

மும்பையில் வீடு விற்பனை மீண்டும் களை கட்டியிருக் கிறது. கடந்த நவம்பரில் மும்பையில் மட்டும் 9,301 வீடுகள் பத்திரப்பதிவு நடந்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் 5,574 வீடுகளே பத்திரப்பதிவு செய்யப் பட்டன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு