நடப்பு
Published:Updated:

பி.எஃப் வட்டிக்கு வரி... இனி ரூ.5 லட்சம் வரை கிடையாது! சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சி!

பி.எஃப் வட்டிக்கு வரி
பிரீமியம் ஸ்டோரி
News
பி.எஃப் வட்டிக்கு வரி

P F I N T E R E S T

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ரூ.2.5 லட்சத்துக்கும் அதிக மாகக் கட்டப்படும் பி.எஃப் பணத்துக்குக் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு சம்பளதாரர்கள் அதிர்ச்சி அடைய, தற்போது இந்த வரம்பை மாற்றி அமைத்திருக்கிறது மத்திய அரசாங்கம். அதாவது, பி.எஃப் கணக்கில் கட்டப்படும் ரூ.5 லட்சம் வரையிலான பணத்துக்குக் கிடைக்கும் வட்டிக்கு வரி இல்லை என்று சொல்லியிருக்கிறது.

பி.எஃப் வட்டிக்கு வரி
பி.எஃப் வட்டிக்கு வரி

இந்த அறிவிப்பு சம்பளதாரர்கள் இடையே மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. காரணம், இன்றைய நிலையில் 8.5% அளவுக்கு வட்டி வருமானம் பி.எஃப்பில் மட்டுமே கிடைக்கிறது. ரிஸ்க் இல்லாமல் வருமானம் ஈட்ட நினைக்கும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பி.எஃப் கணக்கில் சேர்க்கின்றனர். இதைத் தவறாக சிலர் பயன்படுத்து வதைத் தடுக்க மத்திய அரசாங்கம் வரி விதித்தது. இப்போது ரூ.5 லட்சம் வரை பி.எஃப் கணக்கில் போடப்படும் பணத்துக்குக் கிடைக்கும் வட்டிக்கு வரி இல்லை என்பதால், சம்பளதாரர்கள் மாதம் தோறும் ரூ.40,000 வரை இனி பி.எஃப் கணக்கில் கட்டும் நிலை உருவாகியிருப்பது மகிழ்ச்சியே!