Published:Updated:

ஒரு வாரமாக தண்ணீர் சென்றும் நிரம்பாத அதிசய கிணறு; ஆய்வில் இறங்கிய ஐ.ஐ.டி குழு!

அதிசய கிணறு பகுதிக்கு சென்ற ஐ.ஐ.டி குழு
News
அதிசய கிணறு பகுதிக்கு சென்ற ஐ.ஐ.டி குழு

பூமிக்கு அடியில் உள்ள கட்டமைப்பை ஆய்வு செய்து அப்பகுதியில் கூடுதலாக நிலத்தடி நீர் சேமிப்பு அமைப்பை உருவாக்கி தேரிக் காடுகளின் வறட்சியைப் போக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுக்கா முதுமொத்தன்மொழி ஊராட்சிக்கு உட்பட்ட ஆயன்குளம் கிராமத்தில் ஆயன்குளம் படுகை எனப்படும் குளம் உள்ளது. அண்மையில் பெய்த கனமழை காரணமாகக் குளம் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்கிறது.

கிணற்றை பார்வையிட்ட சபாநாயகர் அப்பாவு மற்றும் ஆட்சியர் விஷ்ணு
கிணற்றை பார்வையிட்ட சபாநாயகர் அப்பாவு மற்றும் ஆட்சியர் விஷ்ணு

குளத்தின் அருகில் விவசாயத்துக்காகத் தோண்டப்பட்ட கிணற்றில் வறட்சி காரணமாக தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. அதனால் அந்தக் கிணறு பயன்படுத்தப்படாமல் கிடந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு முதுமொத்தன்மொழி கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் அந்த நிலத்தை வங்கி கிணற்றை ஆழப்படுத்தியிருக்கிறார்.

விவசாயத்துக்கு அந்தக் கிணறு பயன்பட்டு வந்த நிலையில், அந்தப் பகுதியில் அதிகமாக மழை பெய்து உபரி நீர் கிணற்றுக்குள் விடப்பட்டால் அந்த தண்ணீர் முழுவதையும் அதிசய கிணறு உள்வாங்கிக் கொள்கிறது. கிணற்றுக்குள் செல்லும் 10 கன அடி தண்ணீரால் 40 அடி ஆழமுள்ள கிணற்றை நிறைக்க முடியவில்லை.

ஐ.ஐ.டி பேராசிரியர்கள் ஆய்வு
ஐ.ஐ.டி பேராசிரியர்கள் ஆய்வு

அதனால் அப்பகுதி மக்கள் இந்தக் கிணற்றை அதிசயமாகப் பார்த்து வருகிறார்கள். சிலர் கிணற்றுக்கு செல்லும் தண்ணீரில் கலர் பொடியைத் தூவியுள்ளனர். அதைக் கொண்டு எதையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கிணற்றுக்குள் பூ போட்டால் 10 கி.மீ தொலைவில் உள்ள உவரி, குட்டம் உள்ளிட்ட பகுதிகளின் கிணறுகளில் மிதப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

தற்போது குளம் முழுமையாக நிரம்பிவிட்டதால் நம்பியாறு கால்வாய் மூலம் வரும் தண்ணீர் முழுவதும் கிணற்றில் விடப்படுகிறது. அதனால், கிணற்றில் தண்ணீரின் அளவு உயர்ந்திருக்கிறதே தவிர முழுமையாக நிரம்பி வழியவில்லை. கடந்த ஒரு வாரமாக கிணற்றுக்குள் தண்ணீர் விழுந்தபோதிலும் கிணறு நிறையாததால் அதிசய கிணறு பற்றிய தகவல் சுற்றுப் பகுதிகளுக்குப் பரவியதால் பொதுமக்கள் பார்த்துச் செல்கிறார்கள்.

ஆய்வுக் குழுவினர்
ஆய்வுக் குழுவினர்

இந்த நிலையில், சென்னையில் இருந்து ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மூவர் கொண்ட நிபுணர் குழுவினர், தண்ணீரின் தரம் மண்ணின் தன்மை ஆகியவை பற்றி செயற்கைக்கோள் படங்களின் துணையுடன் ஆய்வு செய்கிறார்கள்.