Published:Updated:

``மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்க பாஜக சதி செய்கிறது'' - உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

பொதுக்கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள்
News
பொதுக்கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள்

``தேர்தலில் அவர்களை வீழ்த்துவோம். அமித் ஷாவுக்கு மகாராஷ்டிரா மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.'' - உத்தவ் தாக்கரே

Published:Updated:

``மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்க பாஜக சதி செய்கிறது'' - உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

``தேர்தலில் அவர்களை வீழ்த்துவோம். அமித் ஷாவுக்கு மகாராஷ்டிரா மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.'' - உத்தவ் தாக்கரே

பொதுக்கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள்
News
பொதுக்கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள்

மகாராஷ்டிராவில், மகாவிகாஷ் அகாடி கூட்டணி சார்பாக மாநிலத்தில் ஒவ்வொரு நகரத்திலும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். நேற்று இரவு மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் நடந்த வஜ்ரமுக் பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே, அஜித் பவார், சஞ்சய் ராவத், காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய உத்தவ் தாக்கரே, ``மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்க பா.ஜ.க சதி செய்கிறது. மும்பையைத் துண்டாக்க நினைப்பவர்களை நாங்கள் துண்டாக்குவோம்.

``மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்க பாஜக சதி செய்கிறது'' - உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

மும்பையை மகாராஷ்டிராவிலிருந்து பிரிக்க முடியாது என்பதைத் தெரிந்துகொண்டு மும்பையை பொருளாதாரரீதியாக அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கிறார்கள். மும்பைக்கு அதிக வருவாயைக் கொடுக்கக்கூடிய அலுவலகங்கள், கம்பெனிகள், தொழிற்சாலைகள் நகரத்திலிருந்து பறிக்கப்படுகிறது. மும்பை மாநகராட்சியில் இருக்கும் வைப்புத்தொகையை கருத்தில்கொண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் பா.ஜ.க குறியாக இருக்கிறது. இது ஆரம்பம்தான். தேர்தலில் அவர்களை வீழ்த்துவோம். அமித் ஷாவுக்கு மகாராஷ்டிரா மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பால் தாக்கரேயின் கொள்கைகள் குறித்துப் பேசுகிறார். முதலில் மும்பை மகாராஷ்டிராவோடு இருக்க மண்ணின் மைந்தர்கள் எப்படிப் போராடினார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மும்பைக்கு நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு கண்ணை மூடிக்கொண்டிருக்கக் கூடாது. உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகளை நியமித்து, அவர்களை மந்த்ராலயாவின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

என்னுடைய இந்துத்துவா தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், அவர்களின் இந்துத்துவா பசுவின் கோமியத்தை அடிப்படையாகக் கொண்டது. நாளையே அவர்கள் இந்த இடத்தை பசுவின் கோமியத்தைக்கொண்டு புனிதப்படுத்தலாம். சீனா எல்லையை மாற்றி அமைத்திருக்கிறது. ஆனால், இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் வரலாற்றையே அழித்துவிட்டனர். சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவை அனுப்பி சீனாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். சிவசேனா தொண்டர்கள் இருக்கும் குடிசைப்பகுதிக்குத்தான் அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ அதிகாரிகளை அனுப்புவீர்கள். அதானியின் ஊழல் குறித்து விசாரிக்காதீர்கள். அதானியின் சுயசரிதையை பாடப்புத்தகத்தில் சேருங்கள். எப்படி விரைவில் பணக்காரனாக மாறலாம் என்று தெரிந்துகொள்ளட்டும்'' என்று தெரிவித்தார்.

இதில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், ``மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் மோசமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடந்துகொண்டிருக்கிறது. மாநிலத்தில் நிதி நிலையும் மிகவும் மோசமாக இருக்கிறது. ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்கவே, அரசிடம் பணம் இல்லாமல் இருக்கிறது. ஏமாற்றி ஏக்நாத் ஷிண்டே-பட்னாவிஸ் அரசு பதவியேற்றிருக்கிறது. மகாராஷ்டிராவின் ஒருங்கிணைந்த போராட்டம் மராத்தியர்களுக்கு சுயமரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தது. ஆனால், இங்கு சிலருக்கு சுயமரியாதை பிடிக்காது'' என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இதில் பேசிய முன்னாள் முதல்வர் அசோக்சவான், ``தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இரட்டை இஞ்சின் அரசு மக்களுக்கு சேவையாற்றாது. ஒற்றை இஞ்சின் அரசு விரைவில் பதவிக்கு வரும்'' என்றும் தெரிவித்தார்.

அஜித் பவார் விரைவில் பா.ஜ.க-வில் சேருவார் என்று பரவலாக கருத்து நிலவிவருகிறது. அதோடு கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். ஆனால், கட்சியைவிட்டு விலகுகிறார் என்ற கருத்தைப் பொய்யாக்கும் விதமாக இந்தக் கூட்டத்தில் அஜித் பவார் கலந்துகொண்டிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தன்னால் கலந்துகொள்ள முடியாது என்று முன்கூட்டியே சரத் பவார் தெரிவித்துவிட்டார்.