Published:Updated:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்... விவசாயம் இனி என்னவாகும்?

நாட்டுநடப்பு

பிரீமியம் ஸ்டோரி

காஷ்மீர்… கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாகப் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னையில் தகித்து வரும் மாநிலம். வெள்ளையர்கள் சுதந்திரம் அளித்ததில் இந்தியாவுக்குப் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமை களும் உண்டு. அவற்றில் ஒன்றுதான் காஷ்மீர் பிரச்னை. இந்திய எல்லைக்குள் இருந்தாலும் கிட்டத்தட்டத் தனி நாடாகவே செயல்பட்டு வந்த காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த, சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியிருக்கிறது. இதனால், இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான் நாட்டு ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது, காஷ்மீர்.

தீவிரவாதிகளின் தாக்குதல், குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சத்தம், ராணுவ அணிவகுப்பு என எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் காஷ்மீரில் விவசாயம்தான் முக்கியத்தொழில். கிட்டத்தட்ட 80 சதவிகித மக்கள் விவசாயத்தைச் சார்ந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்... விவசாயம் இனி என்னவாகும்?

‘இனி, காஷ்மீர் என்னவாகும்’ என்பது குறித்துச் சிலரிடம் பேசி னோம்.

காஷ்மீரில் உள்ள அரசு அதிகாரியிடம் பேசினோம். “காஷ்மீர் என்றாலே பனிமலைகளும், பள்ளத்தாக்குகளும், ஆறுகளும்தான் நினைவுக்கு வருகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பள்ளாத்தாக்கு காஷ்மீரில்தான் உள்ளது. ஜஹாங்கீர் என்ற மன்னர் ‘பூலோகத்தின் சொர்க்கம் காஷ்மீர்’ என்று வருணித்திருக்கிறார். அந்தளவுக்கு ஆறுகள் ஓடி ஓடி அந்த மண் வளமாகியுள்ளது. பெரிய அளவில் மாசடையாத அதேசமயம் சீரழியாத நிலங்கள், காஷ்மீரில்தான் உள்ளன. இதனால்தான் காஷ்மீர் ஆப்பிள், குங்குமப்பூ, பாஸ்மதி அரிசி, பாதாம், வால்நட், மலர்கள் ஆகியவற்றுக்கு சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. அதேபோல ஆட்டு ரோமங்களில் தயாரிக்கப்படும் கம்பளியும் சிறப்பு வாய்ந்தது. இப்படிக் காஷ்மீர் மண்ணுக்கே உரித்தான சிறப்புகள் இருந்து வருகின்றன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் இங்கே விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த வளம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றுதான் சுதந்திரத்துக்கு முன் இங்கு நிலம் வாங்கவோ விற்கவோ கூடாது என்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அது சுந்திரத்துக்குப் பிறகும் தொடர்கின்றன. மற்றபடி மத்திய அரசின் வேளாண்மை சார்ந்த திட்டங்களெல்லாம் இங்கேயும் செயல்படுத்தப்பட்டுதான் வருகின்றன. காய்கறிகள், மலர்கள் என்று தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியில் காஷ்மீர் மாநிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதுவரை காஷ்மீரிகளுடைய நிலம் காஷ்மீரிகளின் கையில் மட்டும் இருந்தது. இனி அப்படி இருக்காது. தொழில் நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள் நிறைய உருவாகும். எரிவாயு, கனிமங்கள் என ஏதாவதொன்றை எடுக்க திட்டங்கள் தீட்டப்படும்” என்றார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்... விவசாயம் இனி என்னவாகும்?

எழுத்தாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அ.மார்க்ஸிடம் பேசினோம். “2008-ம் ஆண்டு ஆய்வு ஒன்றுக்காகக் காஷ்மீர் மாநிலத்தில் சில நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டேன். ஒருநாள், பலரையும் சந்தித்துவிட்டு நல்ல பசியோடும் களைப்போடும் ஒரு முஸ்லிம் நண்பரின் வீட்டுக்குள் நுழைந்தோம். தரையில் அழகிய கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. எல்லோரும் உட்கார்ந்தபோது அழகான கண்ணாடி டம்ளர்கள் வைக்கப்பட்டன. நண்பர் ஒருவர் ஒருவிதமான பானத்தை டம்ளர்களில் நிரப்பினார். பால் சேர்க்காமல், குங்குமப்பூ மற்றும் பல நறுமணப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட அந்தக் காஷ்மீர் தேநீர், அவ்வளவு சுவையாகவும் குளிருக்கு இதமாகவும் இருந்தது.

இரண்டு முறை குடித்தப்பிறகு மூன்றாம் முறையும் நிரப்பப்பட்டது. சற்று திகைத்துப் போய் அருகிலிருந்த காஷ்மீர் நண்பரிடம் கேட்டேன். ‘நீங்கள் முழுவதும் குடித்து டம்ளரைக் காலி செய்தால் மீண்டும் ஊற்றுவது எங்கள் மரபு. இப்படிப் பன்னிரண்டு முறை ஊற்றுவது வழக்கம். போதும், அதற்குமேல் குடிக்க முடியாது என்றால் டம்ளரில் கொஞ்சம் மிச்சம் வைக்க வேண்டும்’ என்றார் அவர். காஷ்மீரிகள் அழகானவர்கள் மட்டுமல்ல, அன்பானவர்களும்கூட. இந்த விருந்தோம்பல் பண்பைக் கொண்டே அங்கேயுள்ள வேளாண்மையையும் அறிய முடியும். பண்பட்ட வேளாண்மை தான் நல்ல விருந்தோம்பலைக் கொண்டு வரும். அதை அன்று உணர்ந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காஷ்மீரில் ஆட்டு ரோமங்களால் செய்யப்படும் கம்பளிகள் மிகவும் பிரபலம். அங்கிருந்த முஸ்லிம் ஆட்டிடையர்கள்தான், முதன் முதலில் பனிமலைக் குகையில் லிங்க வடிவில் பனி உறைந்துள்ளதைக் கவனித்து, இந்த விஷயத்தை வெளி உலகுக்குக் கொண்டு வந்தார்கள். அதன்பிறகே எல்லோரும் போய் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படித்தான் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. இப்படி காஷ்மீரில் பல விஷயங்கள் விவசாயத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது.

மார்க்ஸ்
மார்க்ஸ்

இன்று நமது அரசியல் சட்டத்தில் உள்ள 395 பிரிவுகளில், 260 பிரிவுகள் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். மீதமுள்ள 135 பிரிவுகள் ஏற்கெனவே இந்திய அரசியல் சட்டத்தில் பொதுவாக உள்ளன. அப்படியிருந்தும் அந்த மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது.

இப்போது நிறைவேற்றப் பட்டுள்ள இந்த சட்ட மசோதா, குறியீட்டு ரீதியில் ‘எந்த வாக்குறுதியும் காஷ்மீர் மக்களுக்கு இல்லை’ என்பதை உறுதி செய்துள்ளது. இனி எந்தத் தடையுமின்றி இந்திய முதலாளிகள் அனைத்துப் பாதுகாப்புகளுடனும் அங்கே கடை விரிப்பர். நிலங்களை வாங்கிக் குவிப்பர். பெரிய அளவில் பிற மாநிலத்தவரின் குடியேற்றங்கள் நிகழலாம். ஒரு மாநிலத்தவர் பிற மாநிலங்களில் குடியேறுவதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு மாநிலத்தவரின் நிலம், பிற மாநிலத்தவர்களுக்குச் சென்றால் என்ன ஆகும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு