Published:Updated:

அமெரிக்கா Vs சீனா வர்த்தகப் போர்... இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா?

நாணயம் விகடன் டீம்

சீனா மற்றும் ட்ரம்ப் ஆகிய இருதரப்பிற்கும் உள்நாட்டு அழுத்தங்கள் அதிகம் இருப்பதால், தத்தமது நிலையிலிருந்து பின்வாங்குவது தற்போதைக்கு கடினமானதாகவே இருக்கும்

சீனா வர்த்தகம்
சீனா வர்த்தகம்

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வர்த்தக யுத்தம் தற்போது பரபரப்பான உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில், சீனா மற்றும் அமெரிக்காவிற்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியபோது, வர்த்தகப்போர் பதற்றங்கள் சற்றே தணிந்ததுபோலத்தான் தோன்றியது. https://bit.ly/2H24rGQ

ஆனால், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்களின்மீது புதிதாக 10% வரியை ட்ரம்ப் அதிரடியாக அறிவித்ததும் பரபரப்பு மீண்டும் தொற்றிக் கொண்டது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து விவசாயப் பொருள்களின் இறக்குமதியைத் தடை செய்வதாக சீனா அறிவித்தது. அது போதாது என்று, சீனாவின் நாணயமான யுவானின் (அமெரிக்க டாலருக்கு நிகரான) மதிப்பை பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீன மத்திய வங்கி இறக்கியது. இதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா ஒரு 'நாணய மோசடி நாடு' (Currency manipulator) என்று சாடினார். அமெரிக்க அரசும் அதிகாரப்பூர்வமான முறையில், சர்வதேச நிதியத்திடம் சீனா மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா Vs சீனா வர்த்தகப் போர்... இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா?

அமெரிக்கா சீனா இடையேயான இந்தப் புதிய மோதலின் தொடர்ச்சியாக, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. நாணயச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. அதேசமயம், தங்கம் மட்டும் புதிய உச்சத்தைத் தொட்டது.

சீனா மற்றும் ட்ரம்ப் ஆகிய இருதரப்பிற்கும் உள்நாட்டு அழுத்தங்கள் அதிகம் இருப்பதால், தத்தமது நிலையிலிருந்து பின்வாங்குவது தற்போதைக்கு கடினமானதாகவே இருக்கும். இந்தச் சூழ்நிலையில், உலகப் பொருளாதார முன்னேற்றம் தடை பெறவே வாய்ப்புகள் அதிகம். பொருளாதார முன்னேற்றத்திற்கு உள்நாட்டுச் சந்தையையே அதிகம் நம்பியிருந்தாலும்கூட, இந்தியாவும் இந்த வர்த்தக யுத்தத்தினால் ஓரளவுக்குப் பாதிப்புகளை சந்திக்கவே நேரிடும். அதேசமயம், பெட்ரோலியம் மற்றும் கமாடிட்டிச் சந்தைகளின் சரிவு, இறக்குமதியைப் பெருமளவுக்குச் சார்ந்துள்ள இந்தியா போன்றதொரு நாட்டிற்குச் சாதகமாக அமையும்.

அமெரிக்கா Vs சீனா வர்த்தகப் போர்... இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா?

மேலும், இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதார நிலைமையும் தற்போது மந்தமாகவே உள்ளது. ரியல் எஸ்டேட், வாகன விற்பனை ஆகிய துறைகளின் வீழ்ச்சி ஒருபக்கம் இருக்க, சாதாரண மக்கள் பயன்படுத்தும் நுகர்பொருள் விற்பனையில்கூட தளர்ச்சி ஏற்பட்டிருப்பது பலரையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணங்களாக வேலைவாய்ப்பின்மை மற்றும் நுகர்வோரின் நம்பிக்கைக் குறைபாடு ஆகியவை கூறப்படுகின்றன. இவற்றைச் சீர்செய்வது மத்திய அரசின் கடமை.

- ஆர்.மோகனப் பிரபு, CFA

> அமெரிக்கா - சீனா இடையேயான இந்தப் புதிய மோதலின் பின்னணி என்ன, இந்தியச் சந்தைகளுக்கான பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை 'சீன யுவான் மதிப்பு குறைப்பு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?' https://www.vikatan.com/government-and-politics/news/china-yuan-devaluation-what-is-the-impact-on-india எனும் நாணயம் விகடன் சிறப்புக் கட்டுரையில் விரிவாக வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/