இன்றிரவிலிருந்தது (09/12/22) நாளை (10/12/22) காலைக்குள் மாமல்லபுரம் கரையைக் கடக்கவிருக்கிறது 'மேண்டஸ்' (அரபி மொழியில் 'மன்னூ ஸோ') என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் புயல். இந்தப் புயல் பற்றி நவம்பர் மாத இறுதியிலிருந்தே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை பிரிவு கண்காணித்துக் கொண்டு வந்தது. அந்த வகையில், இந்தப் புயலின் பாதை எப்படி இருக்கும் என்று நவம்பர் 6-ம் தேதியன்று ஒரு வரைபடத்தை வெளியிட்டது வானிலை ஆய்வு மையம். கிட்டத்தட்ட அந்தப் பாதையிலேயே பயணித்து, 6-ம் தேதி கணித்தது போலவே, மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க இருக்கிறது புயல்.
நீண்டிருக்கும் ஒரு கோடுதான் புயலின் பாதையைக் காட்டுகிறது. இதில் கறுப்பு நிறமிடப்பட்டிருப்பது, கடந்து வந்த பாதை. சிவப்பு நிறத்திலிருப்பது எதிர்பார்க்கப்பட்டபாதை. இதோ அந்த வரைபடங்கள்....
6-ம் தேதி கணிக்கப்பட்ட பாதை

7-ம் தேதி கணிக்கப்பட்ட பாதை

8-ம் தேதி கணிக்கப்பட்ட பாதை

9-ம் தேதி கணிக்கப்பட்ட பாதை

-பூநி