Published:Updated:

``சாமி எல்லாருக்கும் பொதுவானது!" - பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச்சென்று நெகிழவைத்த ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
News
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

``கோயிலுக்குள்ள வரக்கூடாதுன்னு நேரடியா சொல்ல மாட்டாங்க. ஆனா, நாம போக முயற்சி செஞ்சா, கண்டிப்பா உள்ளே விடமாட்டாங்க. அதனாலயே நாங்க போறதில்லை." - பட்டியலின மக்கள்

Published:Updated:

``சாமி எல்லாருக்கும் பொதுவானது!" - பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச்சென்று நெகிழவைத்த ஆட்சியர்

``கோயிலுக்குள்ள வரக்கூடாதுன்னு நேரடியா சொல்ல மாட்டாங்க. ஆனா, நாம போக முயற்சி செஞ்சா, கண்டிப்பா உள்ளே விடமாட்டாங்க. அதனாலயே நாங்க போறதில்லை." - பட்டியலின மக்கள்

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
News
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் கிராமத்தில், ஆதி திராவிடர் குடியிருப்பில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து, ஊராட்சி மன்றத் தலைவர் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளனூர் போலீஸார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரண நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளும், நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில்தான், இன்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் வேங்கவயல் கிராமத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்ததோடு, மக்களிடம் இது குறித்து விசாரித்தனர்.

ஆய்வு
ஆய்வு

மேலும், கிராமத்தில் மருத்து முகாமையும் ஏற்பாடு செய்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் விசாரித்துக் கொண்டிருந்தபோது வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். உடனே, அந்தப் பகுதி மக்கள், ``இங்குள்ள கோயில்களுக்குள் உள்ளே சென்று எங்களால் சாமி கும்பிட முடியாது. மாற்றுச் சமூகத்தினர் எங்களை அனுமதிக்கமாட்டார்கள். ஆண்டாண்டு காலமாக இதுதான் எங்கள் நிலை" என்று வேதனையுடன் தெரிவித்தனர். உடனே, மாவட்ட ஆட்சியர், அந்தப் பகுதி மக்களை கையோடு கூட்டிக்கொண்டு சம்பந்தப்பட்ட கோயிலுக்குச் சென்றார்.

கோயில் பூட்டிக் கிடந்த நிலையில், பூசாரியை வரவைத்து கோயிலைத் திறந்து மக்களோடு, மக்களாக மாவட்ட ஆட்சியரும் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து அந்தப் பகுதி மக்களை நெகிழ வைத்திருக்கிறார்.

மேலும், கோயில் நிர்வாகத்தினரிடம் தொடர்ந்து, ``இந்தப் பகுதி மக்கள் அனைவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்" என்று ஊர் மக்களிடம் வலியுறுத்தினார். இது குறித்து பட்டியல் சமூக மக்களிடம் பேசினோம். ``ஆண்டாண்டு காலமாக இதுவரையிலும் கோயிலுக்குள்ளே போய் சாமி கும்பிட்டதே இல்லை. கோயிலுக்குள்ள வரக்கூடாதுன்னு நேரடியா சொல்ல மாட்டாங்க. ஆனா, நாம போக முயற்சி செஞ்சா, கண்டிப்பா உள்ளே விடமாட்டாங்க. அதனாலயே நாங்க போறதில்லை.

``சாமி எல்லாருக்கும் பொதுவானது!" - பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச்சென்று நெகிழவைத்த ஆட்சியர்

இன்னைக்கு கருவறை வரைக்கும் பக்கத்துல போய் சாமி கும்பிட்டது, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இது என்னைக்கும் தொடரணும்" என்றனர் நெகிழ்ச்சியுடன்.

"சாமி என்பது எல்லாருக்கும் பொதுவானது, வழிபாட்டு உரிமை என்பதும் எல்லாருக்கும் ஒன்றுதான். எந்த பாகுபாடுமின்றி எல்லா மக்களும் இந்தக் கோயிலில் சாமி கும்பிடலாம்" என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கையோடு, அறிவுரையும் கூறிவிட்டுச் சென்றார்.