Published:Updated:

``The spirit of Ukraine" - 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த நபர் ஜெலன்ஸ்கி; டைம் பத்திரிகை தேர்வு!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
News
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ( Twitter )

உலகின் மிகப் பிரபல பத்திரிகையான `டைம் பத்திரிகை' 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த நபராக `The spirit of Ukraine' என ஜெலன்ஸ்கியை தேர்வு செய்திருக்கிறது.

Published:Updated:

``The spirit of Ukraine" - 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த நபர் ஜெலன்ஸ்கி; டைம் பத்திரிகை தேர்வு!

உலகின் மிகப் பிரபல பத்திரிகையான `டைம் பத்திரிகை' 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த நபராக `The spirit of Ukraine' என ஜெலன்ஸ்கியை தேர்வு செய்திருக்கிறது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
News
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ( Twitter )

உக்ரைன் நேட்டோவில் சேர்வதற்கு கடுமையான எச்சரிப்புகளை விடுத்துவந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் போர்தொடுத்தது. பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள், ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கெதிராக தீர்மானம், ரஷ்யா மீது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடை என பல நிகழ்ந்தும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முற்றுப்பெறவில்லை.

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா

கடந்த வாரம்கூட, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உயர்மட்ட ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக், ``ரஷ்யா - உக்ரைன் மோதலின்போது உக்ரேனிய படைவீரர்கள் 10,000 முதல் 13,000 பேர் வரை கொல்லப்பட்டனர்" என்று அதிர்ச்சிகர தகவலை வெளிப்படுத்தியிருந்தார். அதிபர் ஜெலென்ஸ்கியும் கிட்டத்தட்ட 10 மாதங்களாக ரஷ்யாவுக்கெதிராக போராடிவருகிறார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

இந்த நிலையில், உலகின் மிகப் பிரபல பத்திரிகையான `டைம் பத்திரிகை' 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த நபராக `The spirit of Ukraine' என ஜெலன்ஸ்கியை தேர்வு செய்திருக்கிறது. இது குறித்து டைம் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் எட்வர்ட் ஃபெல்செந்தல், ``இந்த ஆண்டு எடுத்த முடிவு நினைவில் மிகவும் தெளிவானது. உக்ரைனுக்கான போர் ஒருவரில் நம்பிக்கையை நிரப்பினாலும் அல்லது அச்சத்தை நிரப்பினாலும் சரி, ஜெலென்ஸ்கி பல தசாப்தங்களாக நாம் கண்டிராத வகையில் உலகை உற்சாகப்படுத்தினார்" என்று கூறியிருக்கிறார். கடந்த ஆண்டுக்கான சிறந்த நபராக எலான் மஸ்க்கை, டைம்ஸ் பத்திரிகை தேர்வு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.