Published:Updated:

பொங்கல்: மதம், நாடுகளைக் கடந்த உலகத் திருவிழா... எப்படித் தெரியுமா? | இன்று, ஒன்று, நன்று - 14

பொங்கல்
News
பொங்கல்

வரலாற்றிலேயே மனிதர்கள் ஒரு உயிரினத்துக்கு நன்றி செலுத்துவதற்காக ஒரு திருவிழா நடத்துறாங்கன்னா, அந்த உயிரினம் எவ்வளவு முக்கியமானதா இருக்கணும்..!?

Published:Updated:

பொங்கல்: மதம், நாடுகளைக் கடந்த உலகத் திருவிழா... எப்படித் தெரியுமா? | இன்று, ஒன்று, நன்று - 14

வரலாற்றிலேயே மனிதர்கள் ஒரு உயிரினத்துக்கு நன்றி செலுத்துவதற்காக ஒரு திருவிழா நடத்துறாங்கன்னா, அந்த உயிரினம் எவ்வளவு முக்கியமானதா இருக்கணும்..!?

பொங்கல்
News
பொங்கல்
அனைவருக்கும் தைத்திருநாள், அறுவடைப் பெருநாள், பொங்கல் நல்வாழ்த்துகள். எப்படி கீழடில கிடைச்ச எந்த பொருLகள்லையும் மதம் சார்ந்த அடையாளம் இல்லாம இருந்துச்சோ... அதேமாதிரிதான் பொங்கலுக்கும் எந்த மத அடையாளமும் இல்ல. எந்த மதத்தைச் சேர்ந்தவரா இருந்தாலும், பொங்கல் கொண்டாடலாம். ஏன்னா பொங்கல் தமிழர் பண்டிகை.

தமிழர்கள் மட்டுமில்லாம ஜப்பானியர்கள் இதே தைமாசம் 1 ஆம் தேதியை ’Tori no Ichi’-ன்ற நிற பெயர்ல அறுவடை திருநாளா கொண்டாடுறாங்க. ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பியர்கள்னு பலரும் தை மாத அறுவடைத் திருநாளை விழாவா கொண்டாடிட்டு இருக்காங்க. பொங்கல் என்பது மதங்களைக் கடந்த, ஏன், நாடுகளைக்கடந்த உலகத் திருவிழானே சொல்லலாம்.

நெல் அறுவடை
நெல் அறுவடை

பொங்கல் விழாவுல ஏறு தழுவுதல், ஏர் பூட்டுதல், ரேக்ளா ரேஸ்னு மாடுகள் சம்பந்தப்பட்ட பல்வேறு விளையாட்டுகள், வழிபாட்டு முறைகள் இருக்கு. ஏன் மாடுகள் இவ்வளவு சிறப்பு பெறுது? அறுவடைத் திருநாளா கொண்டாடப்படுற ஒரு விழாவுல, மாடுகளுக்கு ஏன் இவ்வளவு கவுரவம் கொடுக்கப்படுதுனு என்னைக்காவது யோசிச்சிருக்கோமா? இன்னைக்கு ஏன்னு யோசிச்சுப்பாத்தா.. பிரமிப்பா இருக்கு.

மாடுகளும், பிற கால்நடைகளும் இல்லாம மனித இனத்துக்கு பரிணாம வளர்ச்சியே இல்ல. மனிதர்களுக்கும் மாட்டினங்களுக்கும் உள்ள உறவுங்கிறது, ஆதி காலத்துல தொடங்குனது. மாடு எவ்வளவு பெரிய செல்வம்னு சொல்லுறக்கு ஒரு ஆச்சர்யமான வரலாற்றுச் சான்று இருக்கு. அதுதான் - ஆநிறை கவர்தல். ஒரு நாட்டின்மீது போர் தொடுத்து ஜெயிக்கிறதும் ஒண்ணுதான், அந்த நாட்டுல இருக்க ஆநிறைகளை அதாவது பசுமாடுகளை கவர்ந்து வருவதும் ஒண்ணுதான்னு சங்ககாலப் போர் விதிகள் சொல்லுது. ஒரு நாட்டோட செல்வமே ஆநிரைகள்தான். தமிழ்ல மாடு-ன்ற சொல்லின் அர்த்தமே செல்வம்தான். ஆனா, அந்தச் சொல்லாடல் இந்த நவீன காலத்துக்குப் பொருந்துமா?

மாடு
மாடு

நிச்சயமா பொருந்தும்னு சொல்லுறாரு பொருளாதார அறிஞர் ஜே.சி.குமரப்பா. மாடுகளுக்கும் இந்தியா பொருளாதாரத்துக்கும் உள்ள தொடர்பு பத்தி “The cow economy"னு ஒரு புத்தகமே எழுதியிருக்காரு குமரப்பா. ஜே.சி.குமரப்பா மாடுகளோட முக்கியத்துவத்தை நாடாளுமன்றத்துல விளக்குன மிக சுவாரஸ்யமான சம்பவம் ஒண்ணு இருக்கு. விவசாய நிலங்களை உழுவதற்கு மாடுகளுக்கு பதிலா ட்ராக்டர் கொண்டு வரணும்னும், ட்ராக்டர் வாங்குறக்கு விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கனும்னு நாடாளுமன்றத்துல தீர்மானம் நிறைவேற்றுவதற்கான கூட்டம் நடந்துச்சு. அதுல கடைசி வரைக்கும் அமைதியா இருந்தாரு ஜே.சி. குமரப்பா.

இந்தியாவின் மிகச்சிறந்த பொருளாதார அறிஞர் அவர். அவர்கிட்ட கேக்காம முடிவு பண்ண முடியுமா? அவர் இந்த நவீனத்தை வரவேற்பாருன்னுதான் எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, அவர் ட்ராக்டர் வேண்டாம்னு சொன்னாரு. இதுவே பெரிய அதிர்ச்சினா, அவர் கேட்ட கேள்வி இன்னும் அதிர்ச்சியா இருந்துச்சு.. “ட்ராக்டர் சாணி போடுமா?” ங்குற கேள்விதான் அது. இன்னைக்கு அந்த கேள்வி எவ்வளவு முக்கியமானதுனு உலகமே வியந்து பாத்துட்டிருக்கு. அவ்வளவு ஏங்க..! வரலாற்றிலேயே மனிதர்கள் ஒரு உயிரினத்துக்கு நன்றி செலுத்துவதற்காக ஒரு திருவிழா நடத்துறாங்கன்னா, அந்த உயிரினம் எவ்வளவு முக்கியமானதா இருக்கணும்..!?

அந்த விழா வேற ஒண்ணும் இல்லைங்க, நம்ம பொங்கல்தான்.

பொங்கல்
பொங்கல்

எத்தனையோ பிரச்னைகள் இருந்தாலும் தமிழர்கள் தனி தனியாதான் போராடியிருக்காங்க. எந்த வேறுபாடும் பாக்காம ஒட்டுமொத்த தமிழகமும், ஒண்ணா போராட்டத்துல முதல்ல இறங்குனது தங்களோட மொழியைக் காப்பதற்காக, இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்காக. தங்களோட மொழிக்கு அடுத்ததா, தமிழர்கள் ஒண்ணா போராட்டத்துல இறங்குனதுனா - அது ஜல்லிக்கட்டுக்காகத்தான். அதை ஜல்லிக்கட்டுனு சொல்லக்கூடாது. அது ஏறு தழுவுதல். ஏன் ஜல்லிக்கட்டுன்னு பேர் வந்தது தெரியுமா? நாயக்கர் ஆட்சி காலத்துல, ஏறு தழுவுதலின்போது காளைகளோட கொம்புகள்ல சல்லிக்காசுகளை கட்டி விட்டிடுவாங்க. மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி, கட்டியிருக்கும் அந்த சல்லிக்காசுகளை பரிசா எடுத்துக்குவாங்க. ‘சல்லிக்காசு கட்டுக்காக’ன்றதுதான் மருவி சல்லிக்கட்டுனு ஆச்சு. இன்னைக்கு ஜல்லிக்கட்டுனு அழைக்கப்படுது. மாடுகள் எவ்வளவு பெரிய செல்வம்னும், இன்றைய சமூகத்தில் அதன் தேவை குறித்தும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துல பேசாத இளைஞரை பார்க்கமுடியாது. அது இயல்பாவே நமக்கு புரிஞ்சிருக்குன்னா... அது நம்ம மரபோட கலந்திருக்குன்னு அர்த்தம்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

தமிழகத்துல இருந்த மாடுகளோட இனங்களைச் சொல்லனும்னா, இன்னைக்கு ஃபுல்லா சொல்லிட்டே போலாம்!

1. அத்தக்கருப்பன், 2. அழுக்குமறையன், 3. அணறிகாலன்,

4. ஆளைவெறிச்சான், 5. ஆனைச்சொறியன், 6. கட்டைக்காளை,

7. கருமறையான், 8. கட்டைக்காரி, 9. கட்டுக்கொம்பன்,

10. கட்டைவால் கூளை, 11. கருமறைக்காளை,

12. கண்ணன் மயிலை, 13. கத்திக்கொம்பன், 14. கள்ளக்காடன்,

15. கள்ளக்காளை, 16. கட்டைக்கொம்பன், 17. கருங்கூழை,

18. கழற்வாய்வெறியன், 19. கழற்சிக்கண்ணன், 20. கருப்பன், காரிக்காளை, காற்சிலம்பன், காராம்பசுனு 90க்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கு. சமுத்திரகனி மாறி நாமும் சொல்லிட்டே போகலாம்.

மாடுகள்
மாடுகள்

ஒவ்வொரு நிலத்துக்கும் ஏற்ற மாட்டினங்களை வெச்சிருந்தாங்க தமிழர்கள். உதாரணத்துக்கு, தஞ்சை பகுதிகள்ல இருக்குற நிலங்கள் ஆற்றுப்பாசனத்துக்கு உகந்தவை. அந்த பகுதிகள்ல சேற்று உழவுதான் சரிப்படும். சேற்று உழவுக்கு கால்குளம்புகள் தடிமனாக உள்ள காளைகள்தான் சரியா இருக்கும். அதுவும் உம்பளச்சேரி வகை மாடுகள் இந்த சேற்று உழவுக்குனே சிறப்பு பெற்றவை. இன்னைக்கு வரைக்கும் உம்பளச்சேரி மாடுகள்னா, அதுக்கு ஒரு தனி அடையாளமும் மதிப்பும் இருக்கு.

அதே மாதிரி கொங்கு நாட்டு எருதுகளின் கால் குளம்புகள் அகலம் அதிகமாகவும், உயரம் குறைவாகவும் இருக்கும். அவை வண்டி பாதைகளுக்கு ஏற்றவை. இன்னைக்கு வரைக்கும் ரேக்ளா ரேஸ்ல இந்த எருதுகள்தான் முதன்மை இடம் வகிக்கும். இந்த மாதிரி நிலத்தின் தன்மைக்கு ஏற்பவும், மாடுகளின் குணத்துக்கு ஏற்பவும் அவற்றை மரபோடு பாதுகாத்து வந்த பேரறிவு தமிழர்களுடையது.

மாட்டுப் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
இன்னையவரைக்கும் ஊர்கள்ல மாடுகளை அண்ணனாவும், தம்பியாவும் வளர்க்குறது நம்ம கலாசாரம். அதுக்கு மிகமுக்கியமான காரணம், தன்னோட இனம் தழைத்தோங்க மனித இனத்துக்கு விவசாயம் தேவைப்பட்டது. விவசாயத்துக்கு மாடு தேவைப்பட்டது. மாடு இல்லாம விவசாயம் இல்ல. விவசாயம் இல்லாம மனித இனத்துக்கு பரிணாம வளர்ச்சியே இல்ல!