Published:Updated:

2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்! #DoubtOfCommonMan

சேதமடைந்த சாலை
News
சேதமடைந்த சாலை

சில மாதங்களாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளால் ஏராளமான குடிநீர் வீணாகுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Published:Updated:

2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்! #DoubtOfCommonMan

சில மாதங்களாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளால் ஏராளமான குடிநீர் வீணாகுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

சேதமடைந்த சாலை
News
சேதமடைந்த சாலை

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். 2011-ம் ஆண்டுமுதல் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தின் பராமரிப்புப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்மூலம், ஐ.வி.ஆர்.சி.எல்., எல்.என்.டி., என்.சி.சி ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம்செய்து பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

சேதமடைந்த சாலை
சேதமடைந்த சாலை

இச்சூழலில், சில மாதங்களாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளால் ஏராளமான குடிநீர் வீணாவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் ஓ.முருகன் என்ற வாசகர், "கடந்த ஒருமாதமாக, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி எல்லைக்குள் நெடுஞ்சாலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய் உடைந்துள்ளது. அதனால் சாலையில் ஓர் அடிக்குப் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், இதைச் சரிசெய்ய யாரை அணுகவேண்டும்?" என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
சரிசெய்யப்பட்ட குடிநீர்க் குழாய்
சரிசெய்யப்பட்ட குடிநீர்க் குழாய்
வ.யஷ்வந்த்

தேன்கனிக்கோட்டைக்குப் பயணித்தோம். நகருக்குள் நான்கு இடங்களில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய்கள் உடைந்து நெடுஞ்சாலை முழுவதும் தண்ணீர் தேங்கிக்கிடந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தநிலை தொடர்வதாக மக்கள் தெரிவித்தார்கள். இதனால் தேன்கனிக்கோட்டையிலிருந்து ஓசூர், கெலமங்கலம், ராயக்கோட்டை, தர்மபுரி செல்லும் சாலைகள் தண்ணீர் தேங்கி குண்டும்குழியுமாக மாறியுள்ளன. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்தார்கள்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் பைப் லைனைக் கண்காணிக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஓசூர் பகுதிச் செயற்பொறியாளர் ராஜசேகரிடம் இதுகுறித்துப் பேசினோம். "கோடைக்காலம் என்பதால், தண்ணீரை நிறுத்த முடியவில்லை. ஒருநாள் முழுவதும் தண்ணீரை நிறுத்திவைத்துத்தான் உடைந்த பைப் லைனைச் சரிசெய்ய முடியும். அப்படிச் செய்தால் ஓசூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்குத் தண்ணீர் போகாது. இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளோம். இன்னும் இரண்டு நாள்களில் உடைந்த பைப் லைனைச் சரிசெய்யும்படி என்.சி.சி நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்" என்றார் அவர்.

சரிசெய்யப்பட்ட சாலை
சரிசெய்யப்பட்ட சாலை
வ.யஷ்வந்த்

தற்போது பிரதான சாலைகளில் குடிநீர்க் குழாய் உடைப்புகள் சரி செய்யப்பட்டுவிட்டன. ஆங்காங்கே சேதமடைந்து கிடக்கும் சாலைகளையும் சரி செய்யவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதுபோன்ற கேள்விகள் உங்களிடமும் இருக்கின்றனவா? இங்கே கேளுங்கள்...

#DoubtOfCommonMan
#DoubtOfCommonMan