Published:Updated:

வேலூர்: ``அப்பட்டமாக போதைப்பொருள்களை விற்கிறார்கள்’’ - கொந்தளிக்கும் பாமக

பா.ம.க-வினர்
News
பா.ம.க-வினர்

வேலூர் மாவட்டத்தில், இளைய தலைமுறையைச் சீரழிக்கும் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், எஸ்.பி அலுவலகத்திலும் பா.ம.க-வினர் மனு கொடுத்தனர்.

Published:Updated:

வேலூர்: ``அப்பட்டமாக போதைப்பொருள்களை விற்கிறார்கள்’’ - கொந்தளிக்கும் பாமக

வேலூர் மாவட்டத்தில், இளைய தலைமுறையைச் சீரழிக்கும் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், எஸ்.பி அலுவலகத்திலும் பா.ம.க-வினர் மனு கொடுத்தனர்.

பா.ம.க-வினர்
News
பா.ம.க-வினர்

அண்மைக்காலமாக தமிழ்நாடு, போதைப்பொருள்களின் புகலிடமாக மாறித் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. போதை மாத்திரை விற்பனைத் தகராறில், சென்னையில் கடந்த மே 19-ம் தேதி 19 வயது இளைஞர் கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்ட வீடியோவும் வெளியாகி தமிழ்நாட்டையே பதைபதைக்கவைத்தது. காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தாலும், தமிழ்நாட்டிலிருந்து போதைப்பொருள் புழக்கத்தை மொத்தமாகத் துடைத்தெறிய முடியவில்லை. சென்னை போன்ற பெருநகரங்களைக் கடந்து வேலூர், ராணிப்பேட்டை போன்ற சிறுநகரங்களிலும் போதையில் இளைய சமூகம் சீரழிந்துவருவதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், `இளைய தலைமுறையைச் சீரழிக்கும் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், எஸ்.பி அலுவலகத்திலும் பா.ம.க-வினர் மனு கொடுத்திருக்கிறார்கள்.

பா.ம.க-வினர்
பா.ம.க-வினர்

பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான கே.எல்.இளவழகன் தலைமையில் கொடுக்கப்பட்ட மனுவில், ``வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அப்பட்டமாக போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அது பற்றி பல்வேறு காலகட்டங்களில் அந்தந்தக் காவல் நிலையங்களில் புகார் அளித்தும்கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், போதைப்பொருள் விற்பனை அதிகரித்திருக்கிறது. நகர்ப் பகுதிகள், கிராமப் பகுதிகள் என மாவட்டம் முழுவதும் 90 சதவிகிதப் பெட்டிக்கடைகளில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, போதைப் புகையிலை போன்றவை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மதுக்கடைகள் ஆகியவற்றுக்கு அருகிலேயே கஞ்சா பொட்டலங்கள் தடையின்றி கிடைக்கின்றன.

மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபின், ஹெராயின், கேட்டமைன் போன்ற உயர் ரக போதை பவுடர்களும் சில இடங்களில் புழங்குகின்றன. போதை மருந்து விற்பனையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் அவ்வப்போது சோதனைகளை நடத்துகிறார்கள். காவல்துறையின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனாலும், சாதாரணப் பிரிவுகளில் கைதுசெய்யப்படும் போதை மருந்து வணிகர்கள் அடுத்த சில நாள்களிலேயே பிணையில் வெளிவந்துவிடுகிறார்கள். அவர்கள் கைதான அடுத்த நாளே அவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் மூலம் போதை மருந்துகளை விற்கத் தொடங்குகின்றனர்.

போதை
போதை

இதனால், காவல்துறை நடவடிக்கை பயனற்றுப்போகிறது. ‘போதை மருந்து வணிகத்தில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்’ என்று காவல்துறை தலைமை இயக்குநர் கடந்த ஜூன் மாதம், 23-ம் தேதி ஆணையிட்டிருந்தாலும், அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இது போதை மருந்து வணிகர்களுக்குச் சாதகமாக அமைகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இளைஞர் சக்திதான் நம் முதலீடு. அவர்கள் போதைக்கு அடிமையாவதை அனுமதிக்கக் கூடாது. எனவே, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போதை மருந்து விற்பனையில் ஈடுபடுவோரைக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டும். கண்காணிப்பை வலுப்படுத்தி, போதைப்பொருள்கள் விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்கள்.