ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

தீபாவளி ஷாப்பிங்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபாவளி ஷாப்பிங்

தீபாவளி தவிர்த்து மற்ற நாள்களில் கிராண்டான ஆடைகளை அதிகம் அணிவதில்லை என்பவர்கள், அதிக விலை கொடுத்து கிராண்டான ஆடை களைத் தேர்வு செய்யாதீர்கள்.

கையில் போனஸ், கடைகளில் தள்ளுபடி என்று தீபாவளி நெருங்க நெருங்க நமக்கெல்லாம் ஷாப்பிங் மனநிலை வந்துவிடும். ‘ரொம்ப நாள் வாங்கணும்னு ஆசைப்பட்ட ஆன்டிக் ஆரத்தை இந்த வருஷம் வாங்கிடலாமா’, ‘இந்த வருஷ தீபாவளிக்கு ஜூட் சில்க் புடவை எடுத்தே ஆகணும்’, ‘இருந்த லேப்டாப்பை பொண்ணு எடுத்துக்கிட்டா. புதுசு வாங்கணும்’, ‘ஆபீஸ்ல இருந்து வீட்டுக்குப் போனவுடனே சின்க் நிறைய பாத்திரம் காத்துக்கிட்டிருக்கு. டிஷ் வாஷர் வாங்கிடலாமா’, ‘எலெக்ட்ரிக் டூவீலர் வாங்கலாமா’, ‘புது வீட்டுக்குத் தேவையான அத்தனை சாமான்களையும் இந்த தீபாவளி ஆஃபர்ல வாங் கிடணும்’... இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஷாப்பிங் தேவை இருக்கும். ஆனால், செலவழிக்கிற பணத்துக்குத் தரமான பொருள்களை வாங்க வேண்டுமே... அதைக் கண்டறிவதற்கான டிப்ஸை இங்கே வழங்கு கிறார்கள் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள்.

நந்திதா
நந்திதா

ஆடைகள் ஷாப்பிங்... அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த டிசைனர் நந்திதா

ஷாப்பிங் கிளம்பும்போது எந்த நிறத்தில் ஆடை எடுக்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடாதீர்கள். அப்படியொரு பிளானுடன் ஷாப்பிங் செய்தால் குறிப்பிட்ட நிறத்தைத் தவிர மற்றவை தனித்துவமாக இருந்தாலும்கூட அந்த நிறங்களில் உங்களுக்கு ஈர்ப்பு ஏற்படாது. அதனால் எந்த நிறம் வேண்டும் என்று யோசிக்காமல் எந்த நிறத்தில் வாங்க வேண்டாம் என்பதை மட்டும் தீர்மானித்து ஷாப்பிங் செல்லுங்கள்.

லாங் கவுன், சிங்கிள் டிரஸ் போன்றவை இப்போது டிரெண்டில் இருக்கின்றன. டிரெண்டுக்கு ஏற்றாற்போல் நம்மை அப்டேட் செய்ய வேண்டும் என்பது அவசியம் தான். அதற்காக உங்கள் உடல் அமைப்பிற்கு பொருத்தமில்லாத ஆடைகளைத் தேர்வு செய்யாதீர்கள். டிரெண்டுக்கு ஏற்ற ஆடைகளை வாங்குவதுதான் உங்கள் விருப்பம் எனில் `இக்கட்', `அஜ்ரக்' போன்று தற்போது டிரெண்டில் இருக்கும் பேட்டர்ன்களை தேர்வு செய்து வாங்கி, டெய்லர் அல்லது டிசைனர்களிடம் கொடுத்து உங்கள் உடலமைப்புக்கேற்றபடி டிசைன் செய்துகொள்ளலாம்.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

டிரெண்டுக்கேற்ப ஆடைகளைத் தேர்வு செய்கிறீர்கள் என்றால், அந்த டிரெண்ட் முடிந்த பிறகு அந்த ஆடையை வெளியிடங்களுக்கு அணிந்து செல்ல முடியாது. ஆயிரங்களை கொட்டிக் கொடுத்து வாங்கிய அந்த ஆடைகளை வாட்ரோபுக்குள்தான் முடக்க வேண் டும். எனவே யோசித்து வாங்குங்கள்.

உங்களுடைய சாய்ஸ் சல்வார் எனில் காட்டன், சில்க், ரா சில்க் போன்ற மெட்டீரியல்களை தேர்வு செய்யலாம். லாங் கவுன் எனில் சிந்தெட்டிக், சாட்டின், நெட்டடு போன்ற மெட்டீரியல்கள் பொருத்தமாக இருக்கும். ஷார்ட் டிரஸ் எனில் மெட்டீரியலைவிட, அதில் இருக்கும் பேட்டர்ன்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஸ்கர்ட் அண்டு டாப் என்றால் டிரெடிஷனல் பிரியைகள் புரோகேட், சில்க், பாரம்பர்யமான கைத்தறி துணிகளைத் தேர்வு செய்யலாம். டிரெண்டியான ஸ்கர்ட் அண்டு டாப் அணிய வேண்டும் எனில் மிக்ஸ் மேட்ச் செய்வதில் கவனம் செலுத்துங்கள். புடவை பிரியைகள் எனில் காட்டன் லினன், காதி, காப்பர் ஜரி புடவைகள் தற்போது டிரெண்டில் இருக் கின்றன. புடவைகளுக்கு பிளவுஸ்களை மிக்ஸ் மேட்ச் செய்வதில் வித்தியாசம் காட்டுங்கள்.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

தீபாவளி தவிர்த்து மற்ற நாள்களில் கிராண்டான ஆடைகளை அதிகம் அணிவதில்லை என்பவர்கள், அதிக விலை கொடுத்து கிராண்டான ஆடை களைத் தேர்வு செய்யாதீர்கள். அதற்கு பதிலாக உங்களின் ரெகுலர் பயன் பாட்டுக்கு ஏற்றாற்போல் தேர்வு செய்து, தனித்துவமான அக்ஸஸரீஸ், துப்பட்டாக்களுடன் மேட்ச் செய்தால் தீபாவளி அன்று கிராண்டான லுக்கிலும், அதே ஆடைகளை மற்ற நாள்களில் கேஷுவல் பயன்பாட்டுக்கும் அணியலாம்.

ஷாப்பிங் கிளம்பும்போதே என்னென்ன ஆடைகள் வாங்க வேண்டும், எவ்வளவு பட்ஜெட், எங்கு ஷாப்பிங் செல்ல வேண்டும் என்பதைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இதனால் தேவையில்லாதவற்றை வாங்கிக் குவிக்காமல் இருப்பதுடன் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

சில கடைகளில் ஆஃபர் கொடுப்பார்கள். தரமாக இருக்கும்பட்சத்தில் ஆடைகளை ஆஃபரில் தாராளமாக வாங்கலாம். பழைய டிரெண்டாக இருக்கிறதா என்பதை மட்டும் செக் செய்து கொள்ளுங்கள்.

கடைகளுக்கு நேரில் சென்று ஷாப்பிங் செய்கிறீர்கள் எனில் ஒருமுறைக்கு இருமுறை கூட ட்ரையல் பார்த்து ஆடையைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் வாங்கும் ஆடைகளுக்கு ஏற்ப அக்ஸஸரீஸ், பேன்ட், துப்பட்டா, பிளவுஸ் என எல்லாவற்றையும் உடனே தேர்வுசெய்து விடுவது நல்லது.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து நீங்களே ஷாப்பிங் செய்கிறீர்கள் எனில், அவர்களுக்கு என்ன கலர் வேண்டும், என்ன மெட்டீரியல் வேண்டும் என்பதை முன்பே கேட்டுத் தெரிந்துகொண்டு தேர்வு செய்தால், குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது நிறம் மற்றும் அளவுகள் மாறி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடைசி நேரத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்து, அதை ரிட்டர்ன் செய்ய வேண்டியிருந்தால் பண்டிகை யின்போது சரியான ஆடையில்லாமல் டென்ஷன் ஏற்படும். அதனால் ஆன்லைன் ஷாப்பிங் செய் பவர்கள் பண்டிகைகளுக்கு சில வாரங்கள் இருக்கும் முன்பே ஷாப்பிங்கை முடித்து விடுவது நல்லது.

அடிக்கடி ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்கள், மனதுக்குப் பிடித்த டாப்ஸ் அல்லது துப்பட்டா போன்றவற்றை வாங்கி வைத்திருப்பீர்கள். ஆனால் அதற்கெல்லாம் மிக்ஸ் மேட்ச் செய்யும் ஆடைகளை நேரில் சென்று வாங்கலாம் என்று நீண்ட நாள்களாகத் திட்டமிட்டு முடியாமல் போயிருக்கும். தீபாவளி ஷாப்பிங் செய்யும்போது, முதலில் மிக்ஸ் மேட்ச் செய்ய வேண்டிய ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். அதன் மூலம் நிறைய புது ஆடைகள் உங்களுக்குச் சேர்ந்துவிடும். அதன்பின், தேவை இருப்பின் புது ஆடைகளை வாங்கலாம்.

டெய்லர்களும், டிசைனர்களும் தீபாவளி நேரத்தில் பிஸியாகவே இருப்பார்கள். கடைசி நேரத்தில் அளவு கொடுத்து, அதன் பின் சரியாகத் தைக்கவில்லை, ஃபிட்டிங் சரியில்லை எனப் புலம்புவதைக் காட்டிலும், சில வாரங்கள் முன்பே ஆடைகளைத் தைக்கக் கொடுத்து விடுவது நல்லது.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

தங்கம் வாங்கப் போறீங்களா?

தகவல்களை வழங்குகிறார் சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி

தங்கம் வாங்குவது என்பது பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான சேமிப்பு முறை. தங்கம் வாங்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டியவை...

தங்கம் வாங்கும்போது சேமிப்புக்காக வாங்குகிறீர்களா அல்லது ஆபரண பயன்பாட்டுக்காக வாங்குகிறீர்களா என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். சேமிப்புக்காக வாங்குகிறீர்கள் என்றால் ஆபரணங்கள் தவிர்த்து, தங்க நாணயங்கள் அல்லது கோல்டு பாண்டுகளாக வாங்குவது சிறந்தது. சலுகைகள் தருகிறோம், ஆஃபர் தருகிறோம் என்ற விளம்பரங்களுக்காக மட்டும் ஒரு கடையைத் தேர்வு செய்யாதீர்கள்.

நீங்கள் வாங்கும் நகையில் ஐந்து வகையான முத்திரைகள் இருக்க வேண்டும். பி.ஐ.எஸ் ஹால்மார்க் முத்திரை, 916 முத்திரை, விற்பனை செய்யும் கடையின் முத்திரை, தங்க நகையின் காரட் முத்திரை, தங்கத்தின் தரத்தை அளவிட்ட சென்டரின் முத்திரை ஆகியவை அவசியம் இருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு முத்திரை இல்லையென்றாலும் அந்த நகைக்கடையில் நகைகளை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

சில கடைகளில் எடையில் ஏமாற்றம் செய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே நீங்கள் எந்த நகை வாங்கினாலும், அந்தப் பொருளின் எடையை உங்களின் கண் முன் சோதனை செய்யச் சொல்லி அதற்கு விலை கணக்கிடச் சொல்லுங்கள்.

ரசீது இல்லாமல் நகை வாங்கினால் நகையின் விலையைக் குறைத்துத் தருவதாக சில கடைகளில் சொல்ல வாய்ப்பிருக்கிறது. தங்கம் வாங்கும்போது விலைக்கான ரசீதுடன்தான் வாங்க வேண்டும். நீங்கள் வாங்கிய தங்கத்தின் தரத்தில் குறைபாடு இருக்கிறது என்பது பிற்காலத்தில் உங்களுக்குத் தெரிந்தாலும்கூட, நகைக்கடையின் மீது நடவடிக்கை எடுக்க, விலை ரசீது மிக மிக அவசியம். அதே போன்று பொருளின் எடையும், ரசீதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நகையின் எடையும் சரியாக இருக்கிறதா என்பதையும் செக் செய்துகொள்ளுங்கள்.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

சில நகைக்கடைகளில் ஆபரணங்களில் பதிக்கப்பட்டு இருக்கும் கற்களின் எடையையும் தங்கத்தின் எடையோடு கணக்கிடுவார்கள். இதனால் சாதாரண கற்களுக்குத் தங்கத்தின் விலை கொடுப்பதுபோல் ஆகிவிடும். எனவே வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கத்துக்குத் தனி எடையும், அதில் பதிக்கப்பட்டு இருக்கும் கற்களுக்குத் தனி எடையும் கணக்கிடுகிறார்களா என்பதைக் கவனியுங்கள்.

நகைச்சீட்டு கட்டி அதன் மூலம் நகைகள் வாங்கப்போகிறீர்கள் என்றால், சீட்டுத் திட்டத்தில் சேரும்போது கொடுக்கப்படும் பரிசுப்பொருள்களைக் கவனிப்பதோடு, முதலில் திட்டம் தொடர்பான தகவல்களையும், நிபந்தனை களையும் சரியாகப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். நகைச்சீட்டு தொடர முடியாமல் போனால், கட்டிய பணத்துக்கு நகை எடுத்துக்கொள்ள முடியுமா அல்லது பணத்தைத் திருப்பித் தருவார்களா என்பதையெல்லாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் வாங்குவது 24 காரட் நகையா, 22 காரட் நகையா அல்லது 18 காரட் நகையா என்பதைக் கவனிக்க வேண்டும். காரட் என்பது நீங்கள் வாங்கும் தங்கத்தில் எத்தனை சதவிகிதம் தங்கமும், மற்ற உலோகங்களும் கலந்திருக் கின்றன என்பதற்கான குறியீடாகும். தங்கக்கட்டிகள் 24 காரட்டில் கிடைக்கும். நீங்கள் வாங்கும் ஆபரணத்தங்கம் 22 காரட் அல்லது 18 காரட்டில்தான் கிடைக்கும். காரட்டுக்கு தகுந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அதை செக் செய்து வாங்குவதன் மூலம் ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.

தங்கத்தின் விலை எல்லாக் கடைகளிலும் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால், செய்கூலி, சேதாரத்தில்தான் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நீங்கள் வாங்கும் டிசைன், ஃபினிஷிங் போன்றவற்றைப் பொறுத்து செய்கூலி, சேதாரம் வசூலிக்கப்படுகிறது. எனவே கடைக்குக்கடை நகையின் விலை மாறுபடுகிறதே என்று குழப்பிக் கொள்ளாமல் தரத்தில் கவனம் செலுத் துங்கள்.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

வீட்டில் இருக்கும் பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு, அவற்றுக்கு மாற்றாக புது நகைகள் வாங்கப் போகிறீர்கள் என்றால், பழைய நகைகளுக்கு எவ்வளவு கழிவு செய்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். குறிப்பிட்ட சதவிகிதத்துக்கு மேல் கழிவு அல்லது தள்ளுபடி செய்கிறார்கள் என்றால் அதை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது.

பாரம்பர்யம், தலைமுறை தலைமுறையாக வாங்கும் கடை, ராசி என்பதை யெல்லாம் முக்கியமாக நினைக்காமல், தங்கத்தின் தரம், டிசைனில் கவனம் செலுத்துங்கள்.

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு நகைக்கும் சேதாரம், செய்கூலி வசூலிக்கப்படும், அதேபோன்று பழைய நகைகளுக்குக் கழிவுகளும் செய்யப்படும் என்பதால் நகைகளை அடிக்கடி மாற்றுவதைத் தவிர்த்து, வாங்கும்போதே உங்கள் மனதுக்குத் திருப்தியான டிசைனை தேர்வு செய்துவிடுங்கள்.

டூவீலர், கார்... ஷாப்பிங் கைடு!

தகவல்கள் வழங்குகிறார் பிரவீன் பாரி, மாருதி கார் ஷோரூம் மேனேஜர்

டூவீலர்... எது உங்கள் சாய்ஸ்?

ரொக்கமாகக் கொடுத்து வாங்கப்போகிறீர்களா அல்லது இ.எம்.ஐ-யில் வாங்கப்போகிறீர்களா என்பதை முதலில் யோசித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் பட்ஜெட்டுக்கேற்ற வண்டி குறித்த ஐடியா கிடைக்கும்.

டூவீலர் வாங்குவதற்கான உங்களுடைய பட்ஜெட் என்ன; அந்த பட்ஜெட்டுக்குள் எந்தெந்த பிராண்டு மற்றும் எந்தெந்த மாடல் வண்டிகள் எல்லாம் வருகின்றன என்பதை ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்க ளுக்கேற்ற டூவீலர் வாங்குவதில் கவனமாக இருப்பீர்கள். இல்லையென்றால் விரும்பியது ஒன்று; வாங்கியது ஒன்று என்றாகிவிடும்.

உங்களுடைய வண்டி மைலேஜ் அதிகம் தர வேண்டுமா; நீடித்து உழைக்க வேண்டுமா; அழகாக இருக்க வேண்டுமா என்பனவற்றையெல்லாம் முதலி லேயே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஷோரூம் சென்றபிறகு அந்த வண்டியா, இந்த வண்டியா எனக் குழம்பாதீர்கள்.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

உங்களுடைய தினசரி பயண தூரத்துக்கு ஏற்ற மைலேஜ் தருகிற டூவீலரை தேர்ந்தெடுத்தால் மட்டுமே பெட்ரோல் செலவு கையைக் கடிக்காது. வீட்டி லிருந்து அலுவலகம், அலுவலகத்திலிருந்து வீடு என்று இருப்பவர்கள், வண்டியின் மைலேஜைவிட தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். ஆனால், விற்பனை பிரதிநிதி போன்று தினமும் அதிக தூரம் பயணம் செய்பவர்கள் மைலேஜ் அதிகம் தரும் வண்டியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆண்களோ, பெண்களோ தங்கள் உடல் எடை மற்றும் தங்கள் பலத்துக்குத் தகுந்த, சுலபமாகக் கையாளக்கூடிய டூவீலரை தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போதுதான், பெட்ரோல் தீர்ந்து விட்டாலோ, வண்டி பஞ்சராகிவிட்டாலோ வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்ல முடியும்.

தெருவில் வாகனம் ஓட்டும்போது சௌகர்யமாக இருக்கிறதா; முதுகுவலி வராமல் இருக்கிறதா; நம் ஊர் தெருக்களுக்கு ஏற்ற ஷாக் அப்சார்பர் இருக்கிறதா; போட்டவுடன் பிரேக் பிடிக்கிறதா; ஹேண்ட் பார் திருப்புவதற்குச் சுலபமாக இருக்கிறதா என்பனவற்றை டெஸ்ட் டிரைவ் மூலம் தெரிந்து கொண்ட பிறகுதான் வண்டியை புக் செய்ய வேண்டும்.

எல்லாவற்றையும்விட முக்கியமாக, நீங்கள் எந்த வண்டியை வாங்க இருக்கிறீர்களோ அந்த வண்டியை ஏற்கெனவே பயன்படுத்திக் கொண்டிருப்ப வர்களிடம் அது குறித்த விமர்சனத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

கார் வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

முதல்முறையாக கார் வாங்குபவர்கள் ஒரு குடும்பம் பயணிப்பதற்கு ஏற்ற நடுத்தர அளவிலான கார் வாங்கலாம்.

முதல்முறையாக கார் வாங்க வருபவர்களில் பெரும்பாலானோர், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் 10 லட்சத்துக்குக் கீழ் என்ற ஐடியாவில்தான் வருவார்கள். அதுதான் சரியும்கூட.

முதல்முறையாக கார் வாங்குபவர்கள், மைலேஜ் விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருப்பார்கள். அது இயல்பும்கூட. அதனால் எந்த கார் அதிக மைலேஜ் தருகிறது என்பதைத் தெரிந்துகொண்டு ஷோரூம் செல்லலாம் அல்லது அங்கு சென்ற பிறகு உங்களுடைய தேவையைக் குறிப்பிட்டு அதற்கேற்ற காரை வாங்கலாம்.

உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை இருக் கைகள் கொண்ட காரை தேர்ந்தெடுத்தால் ஷாப்பிங் முதல் நீண்ட தூரப் பயணங்கள் வரை குடும்பமாகச் செல்லலாம். அலுவலகம் செல்வதற்கு ஒருவர் மட்டுமே பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் அதற்கேற்ற சிறிய ரக கார்களே போதும். பணமும் மிச்சமாகும்.

உங்களுடைய கார் மாடல் உங்களுடைய உயரத்துக்கு ஏற்றபடி இல்லை யென்றால், நீண்ட தூரப் பயணங்களின்போது கால்களை நீட்டி உட்கார முடியாது. கால் மூட்டுகள் வலிக்க ஆரம்பிக்கும். நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ உயரமாக இருப்பீர்கள் என்றால் லெக்ரூம் ஸ்பேஸ் (Legroom Space) அதிகமுள்ள கார் வேண்டும் என்று கேட்டு வாங்குங்கள்.

டச் ஸ்கிரீன் மியூசிக் சிஸ்டம், ஸ்டீயரிங்கிலேயே மியூசிக் கன்ட்ரோல் செய்யும் சிஸ்டம், கார் கண்ணாடி கதவுகளை இயக்கும் பட்டன் சிஸ்டம், வெளியில் இருக்கிற டெம்பரேச்சருக்கு ஏற்றபடி தானாகவே ஏ.சி-யை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் சிஸ்டம், செல்போன் சார்ஜ் என்று இன்றைய கார்களில் எக்கச்சக்க வசதிகள் இருக்கின்றன. 8 முதல் 10 லட்சத்திலேயே இப்படிப்பட்ட வசதிகளுடன் ஒரு காரை வாங்க முடியும். என்றாலும் உங்களுக்குத் தேவையான வசதிகள் கொண்ட காரை வாங்கினால் பணம் மிச்சமாகும்.

மைலேஜ் தேவை என்பவர்கள் லிட்டருக்கு 20 கிலோமீட்டர் செல்லும் கார்களை தேர்ந்தெடுக்கலாம். காரின் தோற்றம்தான் முக்கியம், ராயல் லுக் வேண்டும் என்பவர்கள் அதற்கேற்றாற்போல விலையுயர்ந்த மற்றும் லிட்டருக்கு 10 கிலோமீட்டர் செல்லும் கார்களை தேர்ந்தெடுக்கலாம்.

ஒரு கார் வாங்கும்போது அதில் இருக்கிற வசதிகள் அனைத்தையும் நீங்கள் உபயோகிப்பீர்கள் என்றால், அதற்கான விலையைத் தாராளமாகக் கொடுக்கலாம்.

வாங்க விரும்புகிற காருக்கு எத்தனை சதவிகிதம் தள்ளுபடி, இன்ஷூரன்ஸ் எவ்வளவு செலுத்த வேண்டி வரும் என்பதையும் கேட்டுத் தெரிந்துகொண்டு வாங்குங்கள்.

அடிக்கடி காரை மாற்றுவீர்கள் என்றால், அதை நீங்கள் விற்கும்போது என்ன விலைக்குப் போகும் என்பதையும் யோசிக்க வேண்டும்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கலாமா?

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

எலெக்ட்ரிக் டூவீலர்

‘தினமும் 60 அல்லது 70 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அலுவலகம் சென்று வருகிறேன். பெட்ரோல் செலவு கட்டுப்படியாகவில்லை’ என்பவர்களுக்கு எலெக்ட்ரிக் டூவீலர் மிக மிகப் பொருத்தமானது. குழந்தைகளைப் பள்ளிக் கூடத்தில் விடுவது, கடைத்தெருவுக்குச் செல்வது போன்ற சிறு தொலைவு களுக்கும் எலெக்ட்ரிக் டூவீலர் நல்ல தேர்வு. அதிவேகத்தில் செல்லாது. 25 கி.மீட்டர் வேகத்துக்குள் செல்கிற எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு லைசென்ஸ், ஆர்.சி, இன்ஷூரன்ஸ் தேவையில்லை. சார்ஜ் மட்டும்தான் போட வேண்டும். பராமரிப்பு செலவும் பெரியளவில் கிடையாது. ஒருநாள் சார்ஜ் போட்டால் 250 கி.மீட்டர் தூரம் பயணிக்கலாம். வண்டி சிக்னலில் நிற்பது, போக்குவரத்து நெரிசலில் ஊர்வது ஆகியவற்றைச் சேர்த்தாலும், ஒருநாள் சார்ஜ் போட்டால் இரண்டு நாள்கள் ஓட்டலாம். ‘இரவு முழுக்க சார்ஜ் போட வேண்டியிருக்கு; வண்டி வெடிச்சிடுமோன்னு பயமா இருக்கு’ என்பவர்கள், இரட்டை பேட்டரி கொண்ட எலெக்ட்ரிக் டூவீலர்களை வாங்கலாம். ஒரு பேட்டரியை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு, சார்ஜ் போட்ட பேட்டரியில் அலுவலகம் செல்லலாம். பகலில் சார்ஜ் போடுவதால், சார்ஜ் ஆனவுடனே கவனமாக நிறுத்தியும் விடலாம்.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

எலெக்ட்ரிக் கார்

பெட்ரோல் கார், 8 லட்சம் ரூபாயிலேயே நல்ல மைலேஜுடன் கிடைக்கும். எலெக்ட்ரிக் கார்களின் ஆரம்ப விலையே 15 லட்சம். பட்ஜெட் போட்டு முதல் முறையாக கார் வாங்குபவர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் இது. தவிர, மாதத்துக்கு 500 அல்லது 600 கி.மீட்டர் தூரம் ஓட்டுவீர்கள் என்றால், பெட்ரோல் காரே போதுமானது. மீதமிருக்கிற 7 லட்சத்தில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பெட்ரோல் போட முடியும்.

அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செல்பவர்களுக்கும், சொந்த ஊருக்குக் குடும்பத்துடன் காரில் செல்ல வேண்டும் என்று விரும்புவர்களுக்கும் எலெக்ட்ரிக் கார் சரி வராது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீட்டர் வரை செல்லும் என்றாலும், போக்குவரத்து நெரிசல், ஏ.சி, பாட்டு இதற்கெல்லாம் எடுத்துக்கொள்ளப்படும் பவரை கழித்தால் 200 கி.மீட்டர் மைலேஜ்தான் தரும்.

நீங்கள் கார் பிரியர்கள் என்றால், சந்தைக்குப் புதிதாக வருகிற கார்களை உடனடியாகப் பயன்படுத்திப் பார்க்க விரும்புபவர்கள் என்றால், எலெக்ட்ரிக் கார்களை தாராளமாக வாங்கலாம்.

சோஃபா, கட்டில், பீரோ, டைனிங் டேபிள்... பார்த்து வாங்குவது எப்படி?

தகவல்களை வழங்குகிறார் ஸ்டீபன், நிவாஸ் ஹோம் இன்டீரியர்

மரத்தால் செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்களை மட்டுமே வாங்க விரும்புகிறீர்களென்றால், தேக்கு, வேங்கை போல எந்த மரங்கள் நீண்ட காலம் உழைக்கும் என்பதை ஒரு கார்ப்பென்டரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு ஷாப்பிங் செல்லுங்கள்.

கட்டில், பீரோ, சோஃபா, டைனிங் டேபிள் போன்ற அளவில் பெரிதான பொருள்களை, அவற்றை வைக்கப்போகும் அறையின் நீள, அகலம், தேவைப் பட்டால் உயரம் ஆகியவற்றுக்கேற்ப தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே கார்னர் டீப்பாய், காபி டேபிள் ஆகியவற்றை உங்கள் விருப்பத்துக்கேற்றபடி வாங்கிக்கொள்ளலாம்.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

பிரமாண்டமான ஹாலுக்கு மூன்று சோஃபாக்கள், நடுவில் டீப்பாய் என்று வாங்கவிருக்கிறீர்கள் என்றால், எந்த சோஃபா எந்தப் பக்கம் வருகிறதோ அந்தப் பக்கச் சுவரின் அளவுக்கேற்றபடி வாங்குங்கள். இல்லையென்றால், சோஃபா செட் சுவரைத் தாண்டி கதவை மறைத்துக்கொள்ளும்.

மரமோ, இரும்போ எதில் செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கி னாலும் அவை கனமாக இருக்கட்டும். கனம் குறைவாக இருக்கிற சோஃபாக் களின் உட்காரும் பகுதி சில வருடங்களிலேயே வளைந்து விடும். கனம் குறைவான கட்டில் என்றால் காலப்போக்கில் விரிசல் விட்டுவிடும்.

சோஃபா, கட்டில் இரண்டிலும், அதைப் பயன்படுத்தப் போகிறவர்கள் உட்கார்ந்து பார்த்து, அவர்களுடைய எடையைத் தாங்குகிற அளவுக்கு இருக்கிறதா என்று பரிசோதித்த பிறகே வாங்க வேண்டும்.

கலையுணர்வுடன் வாங்க நினைப்பவர்கள், வீட்டுச் சுவருக்குப் பொருத்தமான நிறத்திலோ அல்லது அதற்கு மாறுபட்ட நிறத்திலோ சோஃபா செட் வாங்க லாம்.

மரத்தாலான வீட்டு உபயோகப் பொருள்களின் முனைகள் சரியாக இழைக்கப் பட்டுள்ளனவா என கவனியுங்கள். ஃபினிஷிங் சரியில்லாத பொருள்களை வாங்க வேண்டாம்.

ரிச் லுக் விரும்பிகள் சோஃபா, டைனிங் டேபிள், அலமாரி, ஊஞ்சல் என எல்லாவற்றையும் அக்ரிலிக்கில் வாங்கலாம். இது ஃபைபரைவிட வலிமை யானதும்கூட.

குழந்தைகள் இருக்கிறார்கள்; பொருள்களை ரஃப் யூஸ் செய்வார்கள் என்றால், மேட் ஃபினிஷ் லேமினேட் செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கலாம்.

WPC (Wood Plastic Composite) பார்ப்பதற்கு மரம்போல லேமினேட் செய்யப் பட்டிருக்கும் என்றாலும், இது பிளாஸ்டிக்தான். கறையான் அரிக்காது. அதிகப்படியான சூடு, குளிர்ச்சி இரண்டையும் தாங்கும். ஒரேயொரு மைனஸ், உடைந்துவிட்டால் மரத்தால் செய்யப்பட்ட பொருள்களைப்போலச் சரி செய்ய முடியாது.

பால்கனியிலும் மரத்தாலான ஊஞ்சல் பொருத்தலாம். வெயில், மழையில் மரத்தின் நிறம் மாறினால் பாலிஷ் செய்துவிடலாம்.

கேட்ஜெட்ஸ் ஷாப்பிங்... கவனிக்க வேண்டியவை

தகவல்கள் வழங்கியோர்: சத்யா ஏஜென்சிஸ்

நண்பர், உடன் பணியாற்றுபவர் வாங்கிவிட்டார் என அதே பொருளை அப்படியே வாங்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. ஒரு கேட்ஜெட்டை வாங்கும்போது அதைப் பயன்படுத்துபவருக்கு என்ன தேவை இருக்கிறதோ அதற்குப் பயன்படும் வகையிலான வசதிகள் இருப்பதைப் பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

நேரடியாக கடைகளில் கேட்ஜெட்டுகளை வாங்கச் செல்லும்போது அதுபற்றி இணையதளத்தில் ரெவ்யூ படித்துவிட்டுச் செல்வது நல்லது. அப்போது அதிலிருக்கும் சந்தேகங்களை விற்பனையாளர்களிடம் கேட்டுத் தெளிவுபெற முடியும்.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

கேட்ஜெட்டை ஆன்லனில் வாங்கும்போது அதுபற்றிய ரெவ்யூவை இணைய தளத்தில் படித்துவிட்டு, அந்தப் பொருளுக்கு எத்தனை சதவிகிதம் கேஷ்பேக் கொடுக்கப்படுகிறது என்பதை மட்டும்தான் பார்த்து வாங்க முடியும். ஆனால் நேரடியாக வாங்கும்போது Touch & Feel செய்தும், டெமோ பார்த்தும் வாங்க முடியும்.

மேலும் அதிலிருக்கும் வசதிகளைப் பற்றி தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும்.

ப்ளூடூத் ஹெட்போன், ஸ்மார்ட் வாட்ச், ஸ்பீக்கர், செல்போன், ஹோம் தியேட்டர், ப்ளே ஸ்டேஷன், லேப்டாப், டேப்லெட் போன்ற கேட்ஜெட்டுகளை வாங்கும்போது அந்தப் பொருள் சரியாக சீல் செய்யப்பட்டு பேக்கிங் செய்யப் பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். சீல் பிரிக்கப்பட்ட பொருள்களை ஒரு போதும் வாங்கக்கூடாது. பொருள்களை நேரில் வாங்க நேர்ந்தால் நம்பகமான கடையில் வாங்குவது நல்லது.

ஒரு கேட்ஜெட்டை இன்டர்நெட்டுடன் இணைக்கும்போது அதை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது என்பதால், அதை வாங்கும்போதே பாதுகாப்பு அம்சங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆன்லைனில் வாங்கினால் அதுபற்றிய ஆன்லைன் ரெவ்யூ, கடைகளில் வாங்கும்போது விற்பனையாளர் களிடம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

ஒரு பிராண்டு புதிய வகை செல்போனை அறிமுகப்படுத்தும்போது சிலர் ஆர்வமிகுதியால் அதை உடனே வாங்கிவிடுவார்கள். சில நேரங்களில் முதல் தலைமுறை (First generation) மாடல்களில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் இருக்கலாம். அந்தப் பிரச்னைகளை அப்டேட் செய்து அதே பிராண்டு மீண்டும் புதிய மாடல்களை வெளியிடும். அதிக பணம் கொடுத்து வாங்கும் போது இந்த விஷயத்தையும் யோசித்து முடிவெடுக்கலாம்.

தரமான செல்போன் என்றால் குறைந்தபட்சம் கேமரா 50 - 64 மெகா பிக்ஸல், 6 - 8 GB RAM உள்ளிட்ட வசதிகளுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

செல்போனை வாங்கி சுமார் ஒரு மாத காலம் பயன்படுத்திவிட்டு அதில் ஏதேனும் பிரச்னை இருக்கிறது என்பதால் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அப்படிப்பட்ட செல்போனை அந்த உற்பத்தி நிறுவனம் திருப்பி வாங்கி அதையே புதுப்பித்து மீண்டும் விற்பனைக்கு வெளியிடும். அது ஆன்லைனில் Refurbished என்ற பெயரில் விற்பனை செய்யப்படும். இதுபோன்ற செல்போன்கள் புதிய செல்போனை காட்டிலும் சில ஆயிரங்கள் விலை குறைவாக இருக்கலாம். ஆனால் அவற்றின் தரம் கேள்விக்குறிதான். எனவே, ஆன்லைனில் புதிய செல்போன் வாங்குபவர்கள் Refurbished பொருள் களைத் தவிர்த்துவிடுவது நல்லது.

லேப்டாப் வாங்கும்போது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்றால் பெரிய திரையுள்ள லேப்டாப்பை தேர்ந்தெடுக்கலாம். சிறிய திரை என்றால் எழுத்துகளைப் பெரிதாக்கிப் பார்ப்பது அவர்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும். குழந்தைகள், இளைஞர்கள் என்றால் சிறிய திரை கொண்ட லேப்டாப்பை பயன்படுத்தலாம். பள்ளி, கல்லூரி, வேலைக்கு பைகளில் வைத்துக்கொண்டு செல்வதற்கும் வசதியாக இருக்கும். லேப்டாப்பில் அதிக மெமரி இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும். பெரும்பாலானவர்கள் கூடுதல் மெமரி (Extension Memory) இருப்பதையே விரும்புகின்றனர்.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

டேப்லெட் வாங்கும்போது அடிப்படையில் ஒரு சிம் கார்டு போட்டு செல்போன் அழைப்புகளைப் பேசவும், இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்தும் வகை யிலும் வசதிகள் இருக்க வேண்டும். லேப்டாப்பில் பவர்பாயின்ட் பிரசென் டேஷன், எக்சல் போன்றவற்றைப் பயன்படுத்தும் வகையிலான மாடலை பார்த்து வாங்க வேண்டும். குழந்தைகள் பயன்பாட்டுக்கு என்றால் தேவை யில்லாத இணையதளங்கள், ஃபைல்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் பேரன்டல் மோடு வசதி இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.

பேஜரில் தகவல் அனுப்பிய காலம்போய், எஸ்எம்எஸ், எம்எம்எஸ் ஆக மாறி தற்போது ஸ்மார்ட்போனில் தகவல் பரிமாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், ஒன் டச்சில் பல்வேறு விஷயங்களைச் செய்வதற்கு தற்போது ஸ்மார்ட் வாட்ச் பயன்படுகிறது. மெசேஜ் தொடங்கி இதயத்துடிப்பு, ஸ்ட்ரெஸ் லெவல், ரத்த அழுத்தம் என அனைத்தையும் கண்காணிக்கும் ஒரே பொருளாக ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தலாம்.

பல முன்னணி பிராண்டு தவிர, சில லோக்கல பிராண்டு ஸ்மார்ட் வாட்சுகள் சந்தையில் உள்ளன. அவை குறைந்த விலையில் பல்வேறு வசதிகள், அம்சங்கள் உடையவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் ஸ்ட்ராப், டிஸ்ப்ளே உள்ளிட்ட தரம் முற்றிலும் முன்னணி பிராண்டைவிட மாறுபடும்.

ஒரு கேட்ஜெட்டை வாங்கும்போது அது யாருக்கு, எவ்வளவு காலம் பயன்படும் என்ற அடிப்படையில் முன்னணி பிராண்டை வாங்குவதா அல்லது லோக்கல் பிராண்டை வாங்குவதா என்று முடிவுசெய்ய வேண்டும். குழந்தைகள் பயன் படுத்துகிறார்கள், குறைந்த காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தப் போகிறார்கள் என்றால் லோக்கல் பிராண்டைத் தேர்ந்தெடுக்கலாம். நீண்டநாள் பயன் பாட்டுக்குத் தேவை என்றால் முன்னணி பிராண்டில் அதிக விலை கொடுத்து பொருள்களை வாங்கலாம்.

கேட்ஜெட்டை வாங்கும்போது அதற்குத் தேவையான பிற பொருள்கள் (Accessories) அனைத்தையும் அப்போதே வாங்கிவிடுவது நல்லது. கேட் ஜெட்டை வாங்கிவிட்டு பிற பொருள்களைப் பின்னர் வாங்கலாம் என்று தீர்மானித்தால், சில நேரங்களில் அவை கிடைக்காமல் போகும். அசலான பொருள் கிடைக்காமல் தரமில்லாதவற்றை வாங்க நேரிடலாம்.

பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் காம்போ ஆஃபரை பயன்படுத்தி கேட்ஜெட் வாங்கும்போதே அக்ஸஸரீஸையும் வாங்கிவிட்டால் கணிசமான தொகையை மிச்சம் செய்ய முடியும். தரமான பொருளையும் வாங்க முடியும். இஎம்ஐயில் பொருள் வாங்கும்போது 0% வட்டியில் வாங்குவது நல்லது.

வீட்டு உபயோகப் பொருள்கள்... இதையெல்லாம் கவனிக்கத் தவறாதீர்கள்!

மிக்ஸி, கிரைண்டர், டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உப யோகப் பொருள்களின் பயன்பாடு இல்லாத வீடே இல்லை. சிலர் இந்தப் பொருள்களை அவற்றின் ஆயுட்காலம் முடியும் வரை பயன்படுத்த விரும்பு வார்கள். ஆனால் சிலர் குறிப்பிட்ட இடைவெளியில் இவற்றை மாற்றி புதிதாக வாங்கிவிடுவார்கள். வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குபவர்களுக்கான டிப்ஸ்...

வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குவதற்கு முன்பு நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்களிடம் அவர்கள் பயன்படுத்தும் பிராண்டு பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். பயன்படுத்துபவர்களின் நேரடி அனுபவம் சில பயனுள்ள தகவல்களைத் தரக்கூடும்.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

வீட்டு உபயோகப் பொருள்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் நீண்ட நாள் பயன்பாட்டுக்குத்தான் வாங்குவார்கள் என்பதால் அதை ஆன்லைனில் வாங்குவதைவிட நேரடியாகச் சென்று பார்த்து வாங்குவது நல்லது. அதற்கு முன்பு ஆன்லைன் ரெவ்யூக்களை படித்துவிட்டுச் சென்றால் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற உதவியாக இருக்கும்.

சிலர் விளம்பரங்களைப் பார்த்து ஆசைப்பட்டு அதிக விலையைக் கொடுத்து அதிக எண்ணிக்கையில் ஜார்கள் இருக்கும் மிக்ஸர் கிரைண்டரை வாங்குவார்கள். ஆனால், அது வாங்கிய நாளில் இருந்து பயன்படுத்தப்படாமலேயே இருக்கும். எனவே, நம் அன்றாடப் பயன் பாட்டுக்கு உதவுமா என்று ஆலோசித்து, தேவைப்பட்டால் அதை வாங்க லாம். இல்லையென்றால் குறைவான ஜார்கள் இருக்கும் மாடலையே தேர்ந்தெடுக்கலாம்.

கடைகளில் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கும்போது அவற்றை இன்ஸ்டால் செய்வதற்கு அந்த குறிப்பிட்ட பிராண்டுகளின் பிரதிநிதி அல்லது வாங்கும் கடைகளில் இருக்கும் ஊழியர்களை வைத்தே செய்து கொள்வது நல்லது. அவர்கள் இந்தப் பொருள்களை இன்ஸ்டால் செய்வது பற்றிய பயிற்சியுடன் இருப்பார்கள். இன்ஸ்டால் செய்யும்போது ஏதேனும் குறைபாடு இருந்தாலோ, இன்ஸ்டால் செய்யும்போது ஏதாவது உடைந்துவிட்டாலோ அதை உடனடியாக மாற்றி புதிய பொருள் கொடுக்க முடியும். தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் அல்லது வீட்டுக்கு அருகிலிருப்போரை அழைத்து இன்ஸ்டால் செய்யும்போது அதில் ஏதேனும் தவறு நடந்துவிட்டால் அதற்கு அந்நிறுவனம் பொறுப்பேற்காது.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

கடைகளில் பொருள்களை வாங்கச் செல்லும்போது நமக்கு என்ன பொருள், என்ன பிராண்டு தேவை, அதில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவுடன் செல்வது நல்லது. காரணம், கடைகளில் ஒவ்வொரு நிறுவனத்தின் பிரதிநிதிகளும் தங்களுடைய பிராண்டை உயர்த்திச் சொல்லி, நம்மைக் குழப்ப வாய்ப்புள்ளது.

நாம் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப அந்தப் பொருளின் தரம் உள்ளதா, சேதம் அடைய, துருப்பிடிக்க வாய்ப்புள்ளதா, வாரன்டி, மின்சார பயன்பாடு குறைவாக இருக்குமா உள்ளிட்டவற்றையும் செக் செய்வது நல்லது.

நமது வீட்டில் உள்ள இடத்தில் அந்த பொருள்கள் பொருந்துமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, பொருள்களை வாங்கச் செல்வதற்கு முன்பு அந்த இடத்தை அளந்து பார்த்துவிட்டுச் செல்வது நல்லது. இடத்தைவிட பொருளின் அளவு பெரிதாகவோ, சிறிதாகவோ இருந்து விட்டால் அந்த இடத்தில் பொருத்துவதில் பிரச்னை ஏற்படும்.

பண்டிகைக் காலங்களில் வீட்டு உபயோகப் பொருள்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும். எனவே, அந்த நேரத்தில் பழைய பொருள் களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய பொருள்களை வாங்குவது நல்லது.

ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ்... தீபாவளி ஷாப்பிங்... தரமான டிப்ஸ்...

பொருள்களின் வாரன்டியை செக் செய்வது முக்கியமானது. சில பொருள் களுக்கு உற்பத்தி நிறுவனம் கொடுப்பதைவிட கூடுதல் வாரன்டி (Extended warranty) கொடுக்கப்படும். அதுபோன்ற பொருள்களைப் பார்த்து வாங்குவதும் நல்லது.

வாரன்டி கார்டு தொலைந்துவிட்டால், பொருளை வாங்கிய கடையில் சென்று செல்போன் எண்ணைக் கொடுத்தாலே அதை மீண்டும் வாங்கி விட முடியும். எனவே, பொருள்களை வாங்கும்போது சரியான செல்போன் எண்ணைக் கொடுப்பதை உறுதிசெய்ய வேண்டும்.