லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

நலத் தேர் இழுப்போம்! - மருத்துவர் வி.விக்ரம்குமார்

சிறுவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுவர்கள்

அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்

துள்ளித் திரிந்து வெவ்வேறு தெருக்களுக்குப் பயணித்து, பலருடன் கூடி, குழு விளையாட்டுகளை மகிழ்ந்து அனுபவித்து, வியர்க்க விறுவிறுக்க வீடு திரும்பும் இன்றைய தலைமுறை சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இல்லை என்றே சொல்லலாம். எனவே, அந்த வகையில் பெற்றோர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. ஆனால், செல்போன்களே கதி என்று கிடக்கும் அவர்களின் நிலை கொரோனா சூழலில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, நம் பாரம்பர்ய விளையாட்டுகளைக் குழந்தைகளுக்குப் பழக்குவதற்கு இதுதான் நேரம்.

நலத் தேர் இழுப்போம்! -  மருத்துவர் வி.விக்ரம்குமார்

அது மட்டுமல்ல... கொரோனாவின் பெயரைப் பயன்படுத்தி கீரைகள், காய்கள், பழச்சாறுகள், ஆரோக்கிய உணவுகளை உங்கள் பிள்ளைகளிடம் வலியுறுத்துங்கள். `கீரை, காய் சாப்பிடலைன்னா பூச்சாண்டி வந்துடுவான்...’ - அனைத்து அம்மாக்களும் இந்தப் பதத்தைத் தங்கள் வாண்டுகளுக்குச் சோறூட்ட ஆரம்பித்த காலத்தில் கையாண்டிருப்பார்கள். இப்போது குழந்தைகளிடம், ‘கீரை, காய் சாப்பிடலைன்னா நம்ம உடம்புக்குள்ள கொரோனா பூச்சாண்டி வந்துடுவான்...’ என்று சொல்லி உணவியலைக் கற்றுக்கொடுங்கள். அதிக உப்பும் சுவையூட்டிகளும் நிறைந்த பாக்கெட் நொறுவை களைத் தவிர்ப்பதற்கான நல்ல வாய்ப்பும் இப்போது அமைந்திருக்கிறது.

`இயற்கையே வலிமையானது’ என்பதைக் குழந்தைகள் மனத்தில் ஆழமாகப் பதிய வையுங்கள். வெளியில் சென்றுவந்தால் கைகால் கழுவி குளிக்கச் சொன்னது எதற்கு? எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்னது எதனால்? மிளகு ரசத்தையும் கொள்ளு ரசத்தையும் பருகச்சொன்னது ஏன்? படிப்பு படிப்பு என்றில்லாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கச் சொன்னது எதற்கு? இதுபோன்ற விஷயங்களின் ஆழத்தை இப்போது கொரோனாவை இயற்கையின் சாட்சியாக வைத்து எடுத்துச் சொல்லுங்கள்.

சிறுவர்கள்
சிறுவர்கள்

அற்புதமான வாய்ப்பு இப்போது பெற் றோர்களே... செல்போன்களை அதிகம் பயன்படுத்தாமல், நாம் வாழ்ந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவியல் முறையை மீண்டும் நம் வீடுகளுக்குள் புழக்கத்தில் கொண்டு வர நாம் முன்வர வேண்டும். இப்போது நாம் கொடுக்கும் மரத்தைப் பயன்படுத்தி, அடுத்த தலைமுறை ‘நலத் தேரை’ நிச்சயம் இழுப்பார்கள்!