லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

விடுமுறை... குழந்தைகள்... என்ன செய்யலாம்?

குழந்தைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகள்

அம்மாவுக்கும் அப்பாவுக்கும்

கொரோனா, ஊரடங்கு, பாதியில் நிறுத்தப்பட்ட பள்ளிக்காலம் எனக் குழந்தைகள் குதூகலமாக, அம்மாக்கள் தெறித்து ஓடுகிறார்கள். எந்த வேலை கொடுத்தாலும் உடனடியாக செய்துமுடித்து, `அடுத்தது என்னம்மா' என்று வந்து நிற்கும் குழந்தைகளை எப்படியெல்லாம் என்கேஜ்டாக வைத்துக்கொள்ளலாம் என்பதைப் பேசுகிறார்கள் நிபுணர்கள்.

தேவி தனம் (ஆசிரியர் / பொம்மலாட்டப் பயிற்சியாளர் )

விடுமுறை... குழந்தைகள்... என்ன செய்யலாம்?

‘‘குழந்தைகள் தொல்லை செய்யாமலிருந்தால் போதும் என்பதற்காக, முழுநேரமும் தொலைக்காட்சி பார்க்கவோ, செல்போனில் விளையாடவோ அனுமதிக்காதீர்கள். அதற்காக... கையில் க்ரேயான் ஸைக் கொடுத்து எந்த நேரமும் படம் வரையச் சொல்லாதீர்கள். பேப்பர் கொலாஜ், பிளாஸ்டிக் க்ளே|களிமண் உருவங்கள், சாக்பீஸ்|வேஸ்ட் ஆர்ட், கிளாஸ் பெயின்டிங், பொம்மலாட்டம் என வித்தியாசமான கலைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். இதையெல்லாம் யூடியூப் மூலமாக நீங்கள் அறிந்துகொண்டு பிறகு அவர்களுக்கு வீட்டில் இருக்கும் பொருளை வைத்து சொல்லிக்கொடுக்கும்போது குழந்தைகளின் கற்பனைத்திறன் அதிகரிக்கும். இயற்கை சார்ந்த நான்கு படங்களைக் கொடுத்து, அவற்றைத் தொடர்புபடுத்திக் குழந்தைகளையே கதை சொல்லச் சொல்லுங்கள். இவையெல்லாம் கற்பனை மற்றும் சிந்திக்கும் திறனையும் மொழிப் புலமையையும் அதிகரிக்கும்.

விடுமுறை... குழந்தைகள்... என்ன செய்யலாம்?
விடுமுறை... குழந்தைகள்... என்ன செய்யலாம்?

உமா விஜயகுமார் (உளவியல் நிபுணர்)

‘‘கொரோனா நேரத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை பற்றியெல்லாம் குழந்தைகளுக்குக் கதை வடிவில் சொல்வதுதான் இப்போதைய அவசிய தேவை. விடுமுறை என்றாலும் குழந்தைகள் குறித்த நேரத்தில் சாப்பிடுவதையும் தூங்குவதையும் கண்காணியுங்கள். வீட்டு வேலைகளில் அவர்களுக்கென ஒரு பகுதியை ஒதுக்கி, அதை அவர்கள் செய்து முடித்தால் `என்னைவிட நீ சூப்பரா செய்றீயே' எனப் பாராட்டுங்கள். அதுவே கூடுதல் வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ய அவர்களைத் தூண்டும்.

விடுமுறை... குழந்தைகள்... என்ன செய்யலாம்?

பெரிய குழந்தைகள் என்றால் கையெழுத்து அழகாகும் வகையில் எழுத்துப் பயிற்சி எடுக்கச் செய்யலாம். வேகமாக எழுதுவது எப்படி எனக் கற்றுத் தரலாம். குழந்தைகளுக்கான ஆங்கில|தமிழ் நூல்களை சுயமாக படித்து விளக்கச் செய்யுங்கள்.

விடுமுறை என்றாலே வீட்டிலிருக்கும் குட்டீஸுக்கு இடையிலான சண்டை தீர்க்க முடியாத ஒன்றாக இருக்கும், எந்தக் காரணம் கொண்டு ஒருவர் உயர்வு, மற்றொருவர் சேட்டைக்காரன் என்கிற பிம்பத்தை அவர்களுக்குள் விதைக்காதீர்கள். மாற்றாக, இருவரையும் இணைத்து வீட்டு வேலைகள் செய்யவைத்துக் குட்டி பரிசு கொடுக்கலாம்.''

விடுமுறை... குழந்தைகள்... என்ன செய்யலாம்?

மோகனலட்சுமி (தொழில்முனைவோர் பயிற்சியாளர்)

“உங்கள் குழந்தைகளுக்குக் கதை நன்றாகச் சொல்ல வரும் என்றால் தினம் ஒரு கதையை வீடியோ ஆக்கி அதை நண்பர்கள், பள்ளிக்கான வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்யலாம். குழந்தை ஏதேனும் ஐடியா சொன்னால், இங்கே அதை நிறைவேற்ற முடியாது என்று சொல்லாமல்... இருக்கும் சூழலில் அதை எப்படிச் செயல்படுத்த முடியும் என்று திட்டமிட்டு அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.”

விடுமுறை... குழந்தைகள்... என்ன செய்யலாம்?

விடுமுறையைச் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் கொண்டாடுங்கள்!