Published:Updated:

காளைக்குப் பதில் கோழி: திருச்செங்கோடு பகுதியில் களைகட்டிய பெண்கள் கலந்துகொண்ட நவீன ஜல்லிக்கட்டு!

கோழி பிடிக்கும் பெண்
News
கோழி பிடிக்கும் பெண்

திருச்செங்கோட்டில் பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்ட, காளைகளுக்குப் பதிலாக கோழியைப் பிடிக்கும் நவீன ஜல்லிக்கட்டுப் போட்டி அமர்க்களமாக நடைபெற்றது.

Published:Updated:

காளைக்குப் பதில் கோழி: திருச்செங்கோடு பகுதியில் களைகட்டிய பெண்கள் கலந்துகொண்ட நவீன ஜல்லிக்கட்டு!

திருச்செங்கோட்டில் பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்ட, காளைகளுக்குப் பதிலாக கோழியைப் பிடிக்கும் நவீன ஜல்லிக்கட்டுப் போட்டி அமர்க்களமாக நடைபெற்றது.

கோழி பிடிக்கும் பெண்
News
கோழி பிடிக்கும் பெண்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நந்தவனம் தெரு பகுதியில் ஆண்டுதோறும் நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஒரு திடலில் வட்டம் வரைந்து, அதன் நடுவே போட்டியாளரை நிற்க வைப்பார்கள். போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு, அவரது ஒரு காலில் கயிறு கட்டப்படும். கயிற்றின் மற்றொரு முனை, கோழி ஒன்றின் ஒரு காலில் கட்டப்படும். அதன்பிறகு, வட்டத்தை தாண்டாமல் போட்டியாளர் கோழியைப் பிடிக்க வேண்டும் என்பதே விதி. குறிப்பிட்ட நேர அளவிற்குள் கோழியைப் பிடிக்க வேண்டும் என்பதும், கோழியை பிடிக்கச் செல்லும்போது வட்டத்தை தாண்டி சென்று விட்டாலோ, குறிப்பிட்ட நேரத்திற்குள் கோழியைப் பிடிக்க முடியாமல் இருந்தாலோ அவர்கள் தோல்வி அடைந்ததாகக் கருதப்படுவார்கள்.

கோழி பிடிக்கும் பெண்
கோழி பிடிக்கும் பெண்

குறிப்பிட்ட கால அளவுக்குள் வட்டத்தை தாண்டாமல் கோழி பிடிப்பவர்கள் வெற்றியாளர்களாகக் கருதப்படுவார்கள். இப்படி சுவாரஸ்யமாகவும், புதுமையாகவும் உள்ள இந்தப் போட்டியை, நவீன ஜல்லிக்கட்டு போட்டி என்று அழைக்கின்றனர். அப்படி, திருச்செங்கோடு பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு, இந்த ஆண்டும் இந்த விநோத போட்டி நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கோழியைப் பிடித்தனர்.

கோழியைப் பிடித்த பெண்கள் சிலர், ``இந்தப் போட்டிக்கு, திருச்செங்கோடு பகுதியில பெரும் வரவேற்பு இருக்கு. வீரத்துக்கு ஜல்லிக்கட்டுப் போட்டினா விவேகத்துக்கு இந்த நவீன ஜல்லிக்கட்டுப் போட்டி.

கோழி பிடிக்கும் பெண்
கோழி பிடிக்கும் பெண்

இந்தப் போட்டியில பெண்களும் குழந்தைகளும் உற்சாகமா கலந்துக்குவோம். விளையாடும்போது எல்லாருமே சின்னப்புள்ளைங்களா ஆகிடுவோம். சந்தோஷமா விளையாடிட்டு, வேடிக்கை பார்த்துட்டு, சிரிச்சுட்டு வருவோம். ஜல்லிக்கட்டுப் போட்டி மாதிரி ரத்தக் காயங்கள், ஆபத்து எல்லாம் இந்தப் போட்டியில இல்லை’’ என்றனர் விளையாட்டு மகிழ்வுடன்.