Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏதேனும் டவுட் இருக்கா?- நீங்க கேட்கவேண்டியது இங்கதான் #DoubtOfcommonman

மாநில தேர்தல் ஆணையம்
News
மாநில தேர்தல் ஆணையம் ( Photo: Ashok Kumar / vikatan )

இது உள்ளாட்சித் தேர்தல் குறித்த சந்தேகங்கள், உள்ளாட்சி அமைப்பு குறித்த விளக்கங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக்கொள்வதற்கான இன்னொரு மேடை.

Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏதேனும் டவுட் இருக்கா?- நீங்க கேட்கவேண்டியது இங்கதான் #DoubtOfcommonman

இது உள்ளாட்சித் தேர்தல் குறித்த சந்தேகங்கள், உள்ளாட்சி அமைப்பு குறித்த விளக்கங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக்கொள்வதற்கான இன்னொரு மேடை.

மாநில தேர்தல் ஆணையம்
News
மாநில தேர்தல் ஆணையம் ( Photo: Ashok Kumar / vikatan )
DoubtOfCommonMan
DoubtOfCommonMan

மூன்றாண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, தங்கள் தலைவர்களை வரவேற்கத் தயாராகின்றன தமிழக உள்ளாட்சி அமைப்புகள். ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல், டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுமென தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வுசெய்வதற்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11-ம் தேதி நடக்கவுள்ளது.

பஞ்சாயத்து அமைப்புகள் மீண்டும் புத்துயிர் பெறவிருக்கின்றன. இனி, அடுத்து என்னாகும்? தமிழக உள்ளாட்சி அமைப்புகளால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? கடந்த 3 ஆண்டுகளில் உள்ளாட்சித் தலைவர்கள் இல்லாமல் தமிழகம் இழந்தது என்ன? இந்த உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடக்கவிருக்கிறது? இந்த உள்ளாட்சி அதிகாரம் இந்திய மக்களுக்குக் கிடைத்தது எப்படி? இந்த உள்ளாட்சி அமைப்புகளின் அதிகபட்ச அதிகாரம் என்ன? கடந்த காலங்களில் இவை சாதித்தவை என்ன? உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? இப்படி இந்தத் தேர்தல் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகள் குறித்தும் எண்ணற்ற கேள்விகள் உங்களுக்குள் எழுகின்றனவா? அவற்றிற்கு விடையளிக்கக் காத்திருக்கிறான் விகடன்.

நாங்கள் வழங்கிய கட்டுரைகளைப் படித்து, பாராட்டிய வாசகர்களையும் செய்திக் குழுவில் இணைக்கும் ஒரு முயற்சியாக சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதுதான் #DoubtOfcommonman. வாசகர்கள் எங்களிடம் கேட்கும் கட்டுரைகளை, அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப தரவேண்டும் என்பதற்காக உருவானதுதான் இந்த மேடை. இந்த முயற்சிக்கான ஆதரவுக்கு, இதுவரை நீங்கள் எங்களுக்கு அனுப்பிய பல்லாயிரக்கணக்கான கேள்விகளே சாட்சி.

இது அந்த முயற்சியின் இன்னொரு பரிமாணம். உள்ளாட்சித் தேர்தல் குறித்த சந்தேகங்கள், உள்ளாட்சி அமைப்பு குறித்த விளக்கங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக்கொள்வதற்கான இன்னொரு மேடை. இந்த சிறப்பு #DoubtOfcommonman-லும் உங்கள் பங்களிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.
DoubtOfCommonMan
DoubtOfCommonMan

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்தத் தேர்தல் குறித்து உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கீழே இருக்கும் படிவத்தில் பதிவுசெய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் கேள்விகளுக்கு, விகடன் நிருபர்கள் மூலம் விரிவான தகவல்கள் பெறப்பட்டு, அதுகுறித்த கட்டுரைகள் தயாரிக்கப்பட்டு பிரசுரிக்கப்படும்.