தாழ் அழுத்த மின் இணைப்பைப் பொறுத்தவரையில், இதுவரை மக்கள் விலைப்பட்டியலில் மாற்றம் செய்ய நேரடியாகச் சென்று விண்ணப்பித்து வந்த நிலையில், இனி இணையத்திலே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வழுத்த மின் இணைப்பில் வீடு தொழில் வணிகம் என ஒவ்வொன்றுக்கும் விலைப்பட்டியலின் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஒருவேளை மின் இணைப்பில் விலைப்பட்டியலை மாற்ற விரும்புவோர் நேரடியாகச் சென்றே விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நீண்ட செயல்முறையில் கால விரயம், அதிகமாவதால் இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில், ஜூன் 1-ம் தேதி முதல் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம்.
இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் விலைப்பட்டியலின் இணைப்பை மாற்றும் சேவையைத் தேர்வு செய்து, தேவையான ஆவணங்களையும் விவரங்களையும் பதிவிட வேண்டும்.
ஆவணங்கள் சரிபார்க்கப்படும் பட்சத்தில் 7 நாள்களுக்குள்ளாக விலைப்பட்டியலானது மாற்றியமைக்கப்படும். மக்கள் எளிமையான இந்த முறையைப் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.