Published:Updated:

நாடாளுமன்ற அவையில் கூச்சலிட்ட பா.ஜ.வினர்; ஆவேசம் காட்டிய டி.ஆர்.பாலு!

கிரண்பேடியின் சர்ச்சைக்கருத்துகள் குறித்து விவாதிக்க வேண்டும் என டி.ஆர்.பாலு பேசிக்கொண்டிருக்கும்போது, பா.ஜ.க உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அவர்களை நோக்கி ஆவேசமாக பேசினார் பாலு.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

`தமிழகத்தில் நிலவும் வறட்சிக்கு மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம்தான் காரணம்’என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு தி.மு.க கண்டனம் தெரிவித்து, பேரவையில் இந்த பிரச்னையை எழுப்பியது. பிறகு விளக்கமளித்த கிரண்பேடி, `மக்களின் கருத்தை தான் நான் பிரதிபலித்தேன்’ என்றார். இதையடுத்து அ.தி.மு.கவின் பா.வளர்மதி, கிரண்பேடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

இந்நிலையில், `` கிரண்பேடியின் சர்ச்சை கருத்துகள் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும்; இதற்கான தீர்மானத்தை வேண்டுமானால் கொண்டுவருகிறோம் என தி.மு.க நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர் பாலு அனுமதி கோரினார். அதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா இது குறித்து, அதற்கான சிறப்பு தீர்மானம் இல்லாமல் பேசமுடியாது என்று சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார்.

. தி.மு.க மற்றும் தோழமைகட்சிகள் பேச அனுமதி கோரி, முழங்கங்களை எழுப்பினர். அப்போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதற்கான சிறப்பு தீர்மானம் கொண்டுவந்தால் தான், உயர்பதவிகளிலிருப்பவர்கள் குறித்த சர்ச்சைகளை விவாதிக்க முடியும் என விளக்கமளித்தார்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

அவரைத்தொடர்ந்து ஓம்பிர்லா சிறப்பு தீர்மானம் கொண்டுவாருங்கள், பிறகு பேசலாம் என்று கூறினார். இதனிடைய டி.ஆர்.பாலு பேசுகையில், பா.ஜ.க உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அவர்களை நோக்கி ஆவேசம் காட்டினார் பாலு.