Published:Updated:

``ஒரு சிறந்த மனிதர், அற்புதமான வேலையைச் செய்கிறார்!" - மோடியைப் புகழ்ந்த டொனால்டு ட்ரம்ப்

மோடி - ட்ரம்ப்
News
மோடி - ட்ரம்ப்

``என்னைவிடச் சிறந்த நண்பர் இந்தியாவுக்கு ஒருபோதும் இருந்ததில்லை." - அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

Published:Updated:

``ஒரு சிறந்த மனிதர், அற்புதமான வேலையைச் செய்கிறார்!" - மோடியைப் புகழ்ந்த டொனால்டு ட்ரம்ப்

``என்னைவிடச் சிறந்த நண்பர் இந்தியாவுக்கு ஒருபோதும் இருந்ததில்லை." - அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

மோடி - ட்ரம்ப்
News
மோடி - ட்ரம்ப்

``என்னைவிடச் சிறந்த நண்பர் இந்தியாவுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. பிரதமர் நரேந்திர மோடி அற்புதமாக வேலை செய்கிறார்" என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் NDTV-க்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், ``எல்லோரும் நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள், நான் வாக்கெடுப்பில் முன்னணியில் உள்ளேன்... விரைவில் நான் ஒரு முடிவை எடுப்பேன்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா என இந்தியாவுடன் என்னைவிட நெருக்கமாக ஒருபோதும் யாரும் இருந்ததில்லை. ஆனால், இதை நீங்கள் பிரதமர் மோடியிடம்தான் கேட்க வேண்டும்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. நாங்கள் நண்பர்களாக இருந்தோம். மேலும், மோடி ஒரு சிறந்த மனிதர். அற்புதமான வேலையைச் செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். இது அவருக்குக் கிடைத்த எளிதான பணியல்ல. அதனால், நாங்கள் ஒருவரையொருவர் நீண்டகாலமாக அறிந்திருக்கிறோம்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

உங்கள் சிறந்த பிரதமர் மோடியுடன் இந்தியா நன்றாக இருக்கிறது. இந்தியாவுக்கு என்னைவிடச் சிறந்த நண்பர் இருந்ததில்லை என்று நான் நினைக்கிறேன். நான் உருவாக்கிய உறவுகளில் அதுவும் ஒன்று. இந்தியாவுக்கு என்னைவிடச் சிறந்த நண்பர் ஜனாதிபதியாக இருந்ததில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.