Published:Updated:

`ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராகும் டி.எஸ் திருமூர்த்தி!’ -யார் இந்த `சென்னைவாசி’?

திருமூர்த்தி
News
திருமூர்த்தி ( Facebook )

வெளியுறவுத்துறையில் பல கால அனுபவம் கொண்ட திருமூர்த்தி ஐ.நாவில் இந்தியாவின் முகமாக அடுத்த சில ஆண்டுகள் இருக்கப் போகிறார். பல்வேறு விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துச் சொல்ல இருக்கும் இவர், எழுத்தாளர் என்பது கூடுதல் தகவல்.

Published:Updated:

`ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராகும் டி.எஸ் திருமூர்த்தி!’ -யார் இந்த `சென்னைவாசி’?

வெளியுறவுத்துறையில் பல கால அனுபவம் கொண்ட திருமூர்த்தி ஐ.நாவில் இந்தியாவின் முகமாக அடுத்த சில ஆண்டுகள் இருக்கப் போகிறார். பல்வேறு விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துச் சொல்ல இருக்கும் இவர், எழுத்தாளர் என்பது கூடுதல் தகவல்.

திருமூர்த்தி
News
திருமூர்த்தி ( Facebook )

சையது அக்பரூதின்.. சர்வதேச அரசியலில் கவனம் செலுத்தும் பலருக்கும் இந்தப் பெயர் கட்டாயம் தெரிந்திருக்கும். இவர்தான் ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக 2016 -ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். கடந்த காலங்களில் சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஐ.நாவில் ஆணித்தரமாக எடுத்துக் கூறியவர். குறிப்பாக பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதங்களை உலக நாடுகளின் கவனத்துக்கும் ஐ.நாவின் கவனத்துக்கும் எடுத்துச் சென்றவர் சையது அக்பரூதின்.

சையது அக்பரூதின்
சையது அக்பரூதின்
Twitter

பாகிஸ்தானை மையமாகக்கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது-ன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா அறிவிக்க இந்தியா சார்பில் எடுக்கப்பட்ட கடும் முயற்சியில் அக்பரூதினின் பங்கை, அந்த விவாதங்களைப் பின்தொடர்ந்தவர்கள் எவராலும் மறக்கமுடியாது. காரணம், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட, இந்தியாவின் பணி அத்தனை எளிதாக இருக்கவில்லை. அதைத் திறம்படச் செய்துகாட்டிய சையது அக்பரூதின் விரைவில் ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில் அவரது அந்தப் பொறுப்புக்கு அடுத்த நபரை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அவர் ஒரு தமிழர்.

சென்னையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான டி.எஸ் திருமூர்த்திதான் சையது அக்பரூதினுக்குப் பிறகு ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது இந்திய வெளியுறவுத்துறையில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

ஐ.நா
ஐ.நா

யார் இந்த டி.எஸ் திருமூர்த்தி?

1962-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி சென்னையில் பிறந்த திருமூர்த்தி, இளங்கலையில் வணிகவியல் பட்டம் பெற்று, பின்னர் சட்டம் பயின்றார். சிவில் தேர்வுகள் மீது ஆர்வம் கொண்ட திருமூர்த்தி, அதுதொடர்பாகவும் பயிற்சி எடுத்து வந்தார். அதன்பின் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 1985-ம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறையில் பணியாற்றினார்.

இந்தியாவின் பிரபல டென்னீஸ் வீரராக இருந்த ராமநாதன் கிருஷ்னணின் மகள் கெளரியைத் திருமணம் செய்துகொண்டார் திருமூர்த்தி. கெளரியும் டென்னீஸ் வீராங்கனைதான். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் என இரு குழந்தைகள்.

டி.எஸ் திருமூர்த்தி
டி.எஸ் திருமூர்த்தி

1985 -ம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறையில் பணியாற்றிய திருமூர்த்தி, கெய்ரோ, ஜெனிவா, காசா, வாஷிங்டன், ஜகார்த்தா ஆகிய நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பாலஸ்தீனம், மலேசியா, ஜகார்தாவில் இ்ந்தியத் தூதராகப் பணியாற்றிய திருமூர்த்தி, அதற்கு முன்னதாக வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இணைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறையில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

வெளியுறவுத்துறையில் பல கால அனுபவம் கொண்ட திருமூர்த்தி ஐ.நாவில் இந்தியாவின் முகமாக அடுத்த சில ஆண்டுகள் இருக்கப்போகிறார். பல்வேறு விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துச் சொல்ல இருக்கும் இவர், எழுத்தாளர் என்பது கூடுதல் தகவல். கிஸ்ஸிங் தெ ஹெவென்: தி கைலாஷ் - மானாசரோவர் யாத்ரா (Kissing the Heavens: The Kailash - Manasarovar Yatra), கிளைவ் அவென்யூ (Clive Avenue), சென்னை வாசி (Chennaivaasi) என மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

திருமூர்த்தியின் நியமனத்துடன் சேர்த்து மேலும் சில நியமனங்களையும் மத்திய வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது. கத்தார் நாட்டுக்கான தூதராக தீபக் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான், ஆப்கன், ஈரான் நாடுகளுக்கான இணைச்செயலாளராக இருந்து வந்தார். பஹ்ரைன் நாட்டுக்கான தூதராக பியூஷ் ஸ்ரீவஸ்தவாவும், ஸ்லோவேனியா நாட்டின் தூதராக நம்ரதா எஸ்.குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.