சுகிதா - துணை ஆசிரியர், நியூஸ் 7:
'`பொதுவாகவே, பெண்களுக்கு அரசியல் தெரியாது, பொருளாதாரம் தெரியாது, கொள்கைகள் தெரியாது, வரலாறு தெரியாது எனப் பொதுப்புத்தியில் பதிந்துபோயிருக்கிறது. அதை விவாத நிகழ்ச்சிகளிலும் எங்களிடம் வெளிப்படுத்துவார்கள். அத்தகைய அனுபவங்களைத் தவிர்ப்பதற்காகவே ஆண் நெறியாளர்களைவிட, பெண் நெறியாளர்கள் நாங்கள் இரு மடங்கு தரவுகளோடு தயார் ஆக வேண்டிய திருக்கும்.
விவாதங்களில், நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால், ஒருசிலர் 'என்னம்மா, போம்மா, வாம்மா' எனப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். நமக்கு எதுவும் தெரியாது என்பதுபோல் நடந்துகொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களை இடைவேளை நேரத்தில் கூப்பிட்டுக் கண்டித்துவிடுவேன்.
அதேபோல, விவாதத்தில் கட்சித் தலைவர்களின் பெயர்களைச் சொன்னால், அந்தக் கட்சிகளைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர்களுக்குக் கடுமையாகக் கோபம் வரும். அப்படி எனக்கு ஒரு கசப்பான அனுபவம் நிகழ்ந்து, பிறகு அந்தக் கட்சியின் தலைவர் எனக்கு ஆதரவாக ஒரு அறிக்கை விட்ட பிறகுதான், அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் அமைதியானார்கள். அதுவரையில் என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்ச்சியாக விமர்சித்துக்கொண்டே இருந்தார்கள்'' என்றார் சுகிதா.

- "நாங்க எவ்வளவு பேரைப் பார்த்திருப்போம்..." மற்ற எல்லோரையும்விட இந்த டயலாக்கை உச்சரிக்கக் கூடுதல் தகுதியுடையவர்கள் நம் செய்தித் தொலைக்காட்சி நெறியாளர்கள்தான்... அது நான்கைந்து பேரை வைத்து நடத்தும் விவாத நிகழ்ச்சியானாலும் சரி, ஒரேயொருவருடன் நடக்கும் நேர்காணலாக இருந்தாலும் சரி, மிகச் சாமர்த்தியமாய் கேள்விக் கணைகளைத் தொடுத்து எதிரில் இருப்பவர்களை நிலைகுலையச் செய்வதில் வல்லவர்கள்...
ஆனால், அவர்களே மிகவும் நொந்துபோன அல்லது அவர்கள் பெருமையாக உணர்ந்த ஸ்பெஷல் தருணங்களை சுகிதா போலவே மேலும் சிலர் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்கள் இங்கே முழுமையாக > கேள்விக்கு என்ன பதில்? https://bit.ly/31hh3Vp
"படைப்புகளின் வட சென்னை வருவது மகிழ்ச்சி. ஆனால்..."
"ஒரு கிராமத்திற்குள் நுழையும்போது முதல் கேள்வியாக நான் யார் என்று விசாரிப்பார்கள். ஆனால், சென்னையிலுள்ள ஒரு தெருவினுள் ஒருநாளைக்கு 100 முறைகூட சென்று வரலாம். யாரும் கேட்கமாட்டார்கள். மாறாக, சென்னையின் இந்தத் திறந்த சுதந்திர அமைப்புமுறை என்பது உளவியல்ரீதியிலான மகிழ்ச்சியைத் தருகிறது...
...இப்போது வட சென்னையைக் களமாகக் கொண்டு படைப்புகள் வருவது மகிழ்ச்சியானது. ஆனால், அவை பெரும்பாலும் உண்மையற்றதாகவும், பாசாங்குத்தனமாகவும் வெளிவருகிறது. பலரும் தெருவோரம் இருக்கும் அழுக்குக் குடியிருப்புகள்தான் வடசென்னை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அடிப்படையில் வடசென்னை 10, 12 லேயர் வரை பல அமைப்பைப் பெற்றுள்ளது. நேற்றுவரை எழவு வீட்டில், தங்களுக்குள் கானா பாடிக்கொண்டிருந்தவர்கள், இன்று கோட்சூட் போட்டு மேடையில் அரசியல் புரிதலோடு பாடுகிறார்கள். வடசென்னையின் தனித்துவம் இந்த விடுதலை அரசியல் உணர்வுதான்" என்கிறார் அழுத்தமாக.

- சென்னை மனிதர்களின் சரணாலயம். பல நூற்றாண்டு வரலாறு கொண்ட சென்னை பலதரப்பட்ட மக்களின் பண்பாட்டுச் சுவடுகளைத் தாங்கி நிற்கிறது. ஆனாலும் அனுதினம் அடையாளம் மாறும். சென்னையின் முகம் அதன் பூர்வகுடிகள்தாம்! அவர்தம் வாழ்வியல் கூறுகளைத் தன் படைப்புகளில் பதிவு செய்பவர் எழுத்தாளர் கரன் கார்க்கி.
கறுப்பர் நகரம், மரப்பாலம், ஒற்றைப்பல் போன்ற நாவல்கள், திரைப்படப் பங்களிப்புகள் எனத் தீவிரமாகச் செயல்படுபவர். போர், சிதைவு, கலாசார அரசியல் எனத் தன் புனைவுகளில் கலந்து உருவேற்றக்கூடியவர்.
நோய்ப் பரவலின் முடக்க நிலையில் இன்று தமிழகத்தின் பேசுபொருளாகியுள்ளது சென்னை. ஒருபுறம் நோயின் அடையாளமாக மாறியிருக்கிறது என்றால் இன்னொருபுறம் வாழ்வு தேடிவந்தவர்கள் சென்னையை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். சென்னை எழுத்தாளர் என்ன நினைக்கிறார்? - முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "சென்னையின் உடல்மொழி தோள்பட்டையில் இருக்கிறது!" https://bit.ly/2ZaWOWK
சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV