Published:Updated:

மஹாளய அமாவாசை: சதுரகிரி கோயிலில் கூட்ட நெரிசல்... பக்தர்கள் இருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி!

சதுரகிரி
News
சதுரகிரி

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்யவந்த பக்தர்களில் இரண்டு பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானார்கள்.

Published:Updated:

மஹாளய அமாவாசை: சதுரகிரி கோயிலில் கூட்ட நெரிசல்... பக்தர்கள் இருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்யவந்த பக்தர்களில் இரண்டு பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானார்கள்.

சதுரகிரி
News
சதுரகிரி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயில். மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறும். பூஜைக்கு இரண்டு முதல் நான்கு நாள்கள்வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும். குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை உள்ளிட்ட பிரதான அமாவாசை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து மலையேறி சுந்தரமகாலிங்க சாமியை தரிசனம் செய்வார்கள்.

சதுரகிரி
சதுரகிரி
மலைப்பாதை
மலைப்பாதை

அந்த வகையில், புரட்டாசி மாத மஹாளய அமாவாசை விழாவையொட்டி கடந்த 23-ம் தேதி முதல் வருகிற அக்டோபர் 5-ம் தேதி வரை 13 நாள்களுக்கு சதுரகிரி கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டிருக்கிறார். அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டு கோயிலில் இரவு தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சதுரகிரி மலையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.

பக்தர்கள் கூட்டம்
பக்தர்கள் கூட்டம்

மஹாளய அமாவாசை தினத்தையொட்டி சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம் சாமி கோயிலில் மூலவருக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து மகிழ்ந்தனர். அதிகாலை முதலே சதுரகிரி மலைப் பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்தனர். இதைத் தடுக்க உடனடியாக கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சாமி கும்பிட வந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் மலைப்பாதையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவரும் மூச்சுத்திணறி பலியானார். இந்தச் சம்பவம் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது. பக்தர்களின் இறப்பு குறித்து கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவர்களிடம் கேட்டபோது, ``சதுரகிரி வரும் பக்தர்களுக்கு மலையேற்றத்தின்போது பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அதை உடனடியாக நிவர்த்தி செய்ய முறையான மருத்துவச் சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.