Published:Updated:

கிருஷ்ணகிரி: அரசு பஸ்-பைக் மோதி விபத்து; ராணுவ வீரர் உட்பட இருவர் பலி - பஸ் தீப்பிடித்ததால் பரபரப்பு

விபத்துக்குள்ளான பஸ்
News
விபத்துக்குள்ளான பஸ்

பைக், பஸ்ஸின் டீசல் டேங்கில் உரசியதில் பஸ் தீப்பிடித்தது. இதைக்கண்ட பயணிகள் கூச்சலிட துரிதமாகச் செயல்பட்ட டிரைவர், கண்டெக்டர் பஸ்சின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளை உடைத்து, பயணிகளை வெளியேற்றினர்.

Published:Updated:

கிருஷ்ணகிரி: அரசு பஸ்-பைக் மோதி விபத்து; ராணுவ வீரர் உட்பட இருவர் பலி - பஸ் தீப்பிடித்ததால் பரபரப்பு

பைக், பஸ்ஸின் டீசல் டேங்கில் உரசியதில் பஸ் தீப்பிடித்தது. இதைக்கண்ட பயணிகள் கூச்சலிட துரிதமாகச் செயல்பட்ட டிரைவர், கண்டெக்டர் பஸ்சின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளை உடைத்து, பயணிகளை வெளியேற்றினர்.

விபத்துக்குள்ளான பஸ்
News
விபத்துக்குள்ளான பஸ்

கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து அந்த மாநில அரசு பஸ் ஒன்று, இன்று மதியம் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டது. அந்த பஸ் ஓசூர் பஸ் நிலையம் வந்து, 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு, கிருஷ்ணகிரி நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் ஒசூர் அடுத்த போலுப்பள்ளி பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில், சிக்காரிமேடு என்ற இடத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தது.

அந்த நேரத்தில், அதே பகுதியிலுள்ள ஒட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுந்தரேசன் (38), அவர் நண்பர் கணேசன் (35) ஆகிய இருவரும் ஒரே பைக்கில் சிக்காரிமேடு அருகில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றனர்.

விபத்துக்குள்ளான பஸ்
விபத்துக்குள்ளான பஸ்

அப்போது, அரசு பஸ் இவர் சென்ற பைக் மீது மோதியதில், பைக் பஸ்ஸின் அடியில் சிக்கியது. இதில், பைக்கில் வந்த இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். பைக் பஸ்ஸின் டீசல் டேங்கில் உரசியதில் பஸ் தீப்பிடித்தது. இதைக்கண்ட பயணிகள் கூச்சலிட துரிதமாகச் செயல்பட்ட டிரைவர், கண்டெக்டர் பஸ்ஸின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளை உடைத்து, பயணிகளை வெளியேற்றினர்.

கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பஸ்ஸில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். தீயை அணைத்து முடிப்பதற்குள் பஸ் முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த விபத்தால், கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தீப்பிடித்து சேதமடைந்த பஸ்
தீப்பிடித்து சேதமடைந்த பஸ்

டிரைவர், கண்டெக்டர் துரிதமாகச் செயல்பட்டு பஸ் கண்ணாடியை உடைத்ததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் பலியான ராணுவ வீரர் சுந்தரேசன் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறார். வந்த இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருடன் இறந்தது, அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.