Published:Updated:

மதுரை: ``அமைச்சர் மூர்த்தி எந்த விழாவை நடத்தினாலும், அது சிறப்பாகவே இருக்கும்" - உதயநிதி ஸ்டாலின்

பி.மூர்த்தி - உதயநிதி ஸ்டாலின்
News
பி.மூர்த்தி - உதயநிதி ஸ்டாலின்

இந்த விழாவுக்காக பிரமாண்டமாக ஏற்பாடுகளை மூன்று மாவட்ட செயலாளர்களும் செய்திருந்தனர். அதில் அமைச்சர் பி.மூர்த்தியின் பங்களிப்பு அதிகம். இரவு வரை விழா நடக்கும் வகையில் திட்டமிட்டிருந்த நிலையில் சீக்கிரமாகவே விழா முடிந்துவிட்டது.

Published:Updated:

மதுரை: ``அமைச்சர் மூர்த்தி எந்த விழாவை நடத்தினாலும், அது சிறப்பாகவே இருக்கும்" - உதயநிதி ஸ்டாலின்

இந்த விழாவுக்காக பிரமாண்டமாக ஏற்பாடுகளை மூன்று மாவட்ட செயலாளர்களும் செய்திருந்தனர். அதில் அமைச்சர் பி.மூர்த்தியின் பங்களிப்பு அதிகம். இரவு வரை விழா நடக்கும் வகையில் திட்டமிட்டிருந்த நிலையில் சீக்கிரமாகவே விழா முடிந்துவிட்டது.

பி.மூர்த்தி - உதயநிதி ஸ்டாலின்
News
பி.மூர்த்தி - உதயநிதி ஸ்டாலின்

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பிரமாண்ட விழா மதுரையில் நடந்தது.

இந்த விழாவை மதுரை வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்டச்செயலாளர்கள் இணைந்து பாண்டி கோயில் மைதானத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். நீண்ட காலத்துக்குப்பின் மாவட்டச்செயலாளர்களான அமைச்சர் பி.மூர்த்தி, மணிமாறன், கோ.தளபதி ஆகியோர் ஒற்றுமையாகி இந்த விழாவை நடத்தினார்கள்.

விழாவில்
விழாவில்

13,000 பேர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு பிரமாண்ட மேடையிட்டும், நிகழ்ச்சி நடந்த இடத்தை சுற்றி வாழை, கரும்புகளை வைத்து அலங்கரித்திருந்தனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஊரிகளிலிருந்தும் வாகனங்கள் மூலம் மக்களை அழைத்து வந்திருந்தனர்.

மழைக்கு முன்
மழைக்கு முன்

மாலை 4 மணிக்கு விழா தொடங்கும் என்று அறிவித்திருந்த நிலையில், மதியமே மதுரை வந்துவிட்ட உதயநிதி, மாலை 6 மணிக்குத்தான் மேடைக்கு வந்தார். அதன் பின்பு விழா தொடங்கும்போது மழை தூறல் போடத் தொடங்கியது.

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, "எல்லாவகையிலும் எனக்கு ஊக்கமளிக்கும் தம்பி. தி.மு.கவின் சொத்து பாதுகாப்புக்குழுவில் பொறுப்பு ஏற்றுள்ளேன். தி.மு.கவின் நடமாடும் சொத்தான உதயநிதிக்கு பாதுகாப்பாக இருப்போம்" என்றார்.

மழை வந்த பின்
மழை வந்த பின்

மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறனைத் தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போது, "சின்னவர் என்று அழைக்கப்படும் எங்கள் உதயநிதி, இளைஞர்களின் தவிர்க்க முடியாத சக்தியாக சிம்மாசனமிட்டு உட்காந்திருக்கிறார் .

முதன் முதலில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில்தான் கலந்து கொண்டார். இன்று தமிழகமே அவர் பின்னால் நிற்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்லும் அவர்தான் வருங்காலத் தமிழகத்தை வழிநடத்தும் ஆற்றலும் திறமையும் பெற்றவர்.

பி.மூர்த்தி-உதயநிதி ஸ்டாலின்
பி.மூர்த்தி-உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க இளைஞரணி மாநில மாநாட்டை மதுரையில் நடத்தும் வாய்ப்பை எங்களுக்குத் தரவேண்டும்." என்றார்.

மழை பெரிதாக பெய்யும் நேரத்தில் பேச வந்த உதயநிதி ஸ்டாலின், ``மதுரை எப்போதுமே என் பொதுவாழ்வில் முக்கியமானதாக அமைந்துள்ளது. 2018-ல் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றபோது கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன். அதை பிரமாண்டமாக நடத்தியவர் பி.மூர்த்தி.

உதயநிதி பேசும்போது
உதயநிதி பேசும்போது

அதுபோல் இந்த விழாவும் பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் பி.மூர்த்தி எந்த விழாவை நடத்தினாலும் அது சிறப்பாகவே இருக்கும்.

நீங்கள் எல்லோரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினைன நம்பியுள்ளீர்கள். அவர் என்றும் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார். அனைத்து தரப்பு மக்களுக்குமான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் முதல்வர் குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்." என்று பேசிக்கொண்டிருக்கும்போதே மழை பெரிதாகி பெய்ய ஆரம்பித்ததால் பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

வீட்டுக்கு அழைத்து மரியாதை செய்த பி.டி.ஆர்
வீட்டுக்கு அழைத்து மரியாதை செய்த பி.டி.ஆர்

அதன்பின்பு விளையாட்டு உபகரணங்களை விளையாட்டு வீரர்களுக்கு சிறிது நேரம் வழங்கிவிட்டு சென்னைக்கு கிளம்பினார்.

இந்த விழாவுக்காக பிரமாண்டமாக ஏற்பாடுகளை மூன்று மாவட்ட செயலாளர்களும் செய்திருந்தனர். அதில் அமைச்சர் பி.மூர்த்தியின் பங்களிப்பு அதிகம். இரவு வரை விழா நடக்கும் வகையில் திட்டமிட்டிருந்த நிலையில் சீக்கிரமாகவே விழா முடிந்துவிட்டது.

விழாவில்
விழாவில்

நம்மிடம் பேசிய நிர்வாகிகள் சிலர், "மாலையே மதுரை வந்துவிட்ட உதயநிதியை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று பி.டி.ஆர் மரியாதை செய்து உபசரித்து தனித்துக் காட்டிக்கொண்டார். இது கோடிக்கணக்கில் செலவு செய்து பிரமாண்ட விழா நடத்திய அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்ட 3 மாவட்டச்செயலாளர்களையும் கொஞ்சம் டென்ஷன் ஆக்கி விட்டதாம். அடுத்து மழை வந்து அப்செட்டாக்கிவிட்டது" என்றனர்.