Published:Updated:

குடியரசு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் என்ன?! | இன்று ஒன்று நன்று - 26

குடியரசு தினம்
News
குடியரசு தினம்

பெரும்பாலனவர்களுக்கு ’குடியரசு நாடு’னு சொல்றதுக்கும் ’ஜனநாயக நாடு’னு சொல்றதுக்கும் வித்தியாசம் தெரியுறது இல்ல.

Published:Updated:

குடியரசு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் என்ன?! | இன்று ஒன்று நன்று - 26

பெரும்பாலனவர்களுக்கு ’குடியரசு நாடு’னு சொல்றதுக்கும் ’ஜனநாயக நாடு’னு சொல்றதுக்கும் வித்தியாசம் தெரியுறது இல்ல.

குடியரசு தினம்
News
குடியரசு தினம்
குடியரசு தினம்னாலே பள்ளிக்கூடத்துலயும், கல்லூரிகள்லையும் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டினு குடியரசு தினம் பத்தி ஆயிரமாயிரம் கதைகளை ஒவ்வொரு வருடமும் கடந்து வந்துருக்கோம். ஆனா, திரும்ப திரும்பக் கேட்ட கதைகளையும் சம்பவங்களையும்தான் ஒவ்வொரு வருடமும் திரும்பிப் பார்க்கிறோம். இந்திய நாடு ஓர் இறையாண்மை மிக்க குடியரசா மாறிய நிகழ்வுல, சொல்றதுக்கு பல்வேறு கதைகள் இருந்தாலும், சொல்லாம விடப்பட்ட தகவல்களும் கொட்டி கிடக்கு. அவை என்னன்னு தெரிஞ்சுகிட்டு, இந்த குடியரசு தினத்தை சுவாரஸ்யமா கொண்டாடுவோம்.

அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். அதாவது சுதந்திர தினத்துக்கு போவோம். இந்தியாவிற்கான சுதந்திர அறிக்கையினை வெளிட்டவர் ஆங்கிலேயே கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன்னு நமக்கு தெரியும். இந்தியாவில் நடந்த தொடர் போராட்டங்களால் ஆங்கிலேயர்கள் இங்கிருந்து வெளியேறலாம்னு முடிவெடுத்து முறைப்படி இந்தியாவிற்கு சுதந்திர அறிக்கை மூலமா தங்களோட வெளியேற்றத்தை அறிவிச்சாங்க. அந்த சுதந்திர அறிக்கையினை மவுண்ட் பேட்டன் வெளியிட்டாரு. அதன்படி இந்தியா, வரும் ஆகஸ்ட் 15, 1947-ம் ஆண்டிலிருந்து, ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டு தனி சுதந்திர நாடாக இருக்கலாம்னு அந்த அறிக்கையில் இருந்தது. ஆனா, இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்கான நாளாக முதன்முதலா தேர்ந்தெடுக்கப்பட்ட தேதி ஜூலை 18, 1947தான். இந்தியாவுக்கு ஒரு மாசம் முன்னாடியே கிடைச்சிருக்கவேண்டிய சுதந்திரம் தள்ளிப்போனதுக்கு, தெரிஞ்சோ தெரியாமலோ ஜப்பான் ஒரு காரணமா இருந்திருக்கு.

குடியரசு தினம்
குடியரசு தினம்

18 ஜூலைலயே இந்திய சுதந்திரச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், இரண்டாம் உலகப் போருக்கு அப்புறம், ஜப்பான் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த தேதியோட இது ஒத்துப்போனதால, அப்போதைய ஜெனரல் மவுண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15 ஆம் தேதியை இந்திய சுதந்திர தினமாகத் தேர்ந்தெடுத்தாரு. இப்படி சுதந்திர தினம் ஏன் ஆகஸ்ட் 15 கொண்டாடப்படுதுனு பல்வேறு காரணங்களும் தர்க்கங்களும் இருக்கு. ஆனா, ஜனவரி 26 அன்னைக்கு குடியரசு தினம் கொண்டாட காரணம் என்னன்னு கேட்டா, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள், அதான் குடியரசு தினமா கொண்டாடுறோம்னு சொல்லுவோம். ஆனா, ஏன் ஜனவரி 26ல இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதுனு கேட்டா, நம்மில் பலருக்கு தெரியாது. அது ஏன்ன்னு தெரிஞ்சுக்க, குடியரசுணா என்ன? குடியரசு நாடு எப்போ உருவாகுதுன்னு நாம தெரிஞ்சுக்கனும்.

பெரும்பாலனவர்களுக்கு ’குடியரசு நாடு’னு சொல்றதுக்கும் ’ஜனநாயக நாடு’னு சொல்றதுக்கும் வித்தியாசம் தெரியுறது இல்ல. ஒரு நாட்டோட மக்கள், தங்களை ஆள்பவர்களைத் தேர்வு செய்யும் உரிமை கொண்டுள்ள அமைப்பை நாம 'ஜனநாயகம்'னு சொல்லுவோம். அந்த உரிமையைக் கொடுத்துள்ள நாட்டை, ஜனநாயக நாடுனு சொல்லுவோம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பை 'குடியரசு'னு சொல்லுவோம். அந்த அரசமைப்பை பின்பற்றும் நாடுகளைக் குடியரசு நாடுனு சொல்லுவோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளைதான் நாம குடியரசு தினமா கடைப்பிடிச்சுட்டு வர்றோம். ஜனவரி 24, 1950ல 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்பதுலோட இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள்ல எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. அப்புறம் ஏன் ஜனவரி 26ஆம் தேதில குடியரசு தினத்தைக் கொண்டாடுறோம் தெரியுமா? அதுக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கு. 1929, ஜனவாி 26 அன்னைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பு, ஆங்கிலேயா்களின் ஆட்சிக்கு எதிரா ’இந்திய விடுதலை’யை முதன்முறையாக அறிவிச்சது. அதை அறிவிச்சவர் மகாத்மா காந்தி அவர்கள். விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்னமே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ம் தேதியையே, மக்களாட்சி மலர்ந்த நாளாக் கொண்டாட, சுதந்திர இந்தியாவோட முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை முடிவு செஞ்சது. அதன்படி 1950ம் ஆண்டு முதல் குடியரசு தினம் கொண்டாடப்படுது.

குடியரசு தினம்
குடியரசு தினம்

அதுக்கு முன்னாடி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துல இந்திய அரசுச் சட்டம், 1935 (Government of India Act , 1935) தான் இந்தத் தகுதியைப் பெற்றிருந்துச்சு. சுதந்திரம் வாங்குன பிறகும், இந்தச் சட்டத்தோட அடிப்படையிலேயேதான் இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட்டன. அரசு நிர்வாகத்துக்கும் அச்சட்டமே அடிப்படையாக இருந்தது. குடியரசுக்கும் ஜனநாயகத்துக்கும் குழப்பிக்குறதைப்போலவே, குடியரசு தினத்தையும் சுதந்திர தினத்தையும் குழப்பிக்குவோம். அரசியல்வாதிகளும் இதுக்கு விதிவிலக்கில்ல. அதுக்கு காரணம், இரண்டுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு தெரியாததுதான்.

சுதந்திர தினம்னு சொல்லும்போது, யார்கிட்ட இருந்தோ விடுதலை பெற்றிருப்பதை குறிக்குது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவுல ஆங்கிலேயர் நமக்கு கொடுத்ததுதான் சுதந்திரம். ஆனா, அப்போ நமக்கு அப்போ கிடைச்சது முழுமையான சுதந்திரம் அல்ல. ஏன்னா சுதந்திரம் பெற்றபோது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்துதான் குடுத்திருந்தது. அதன்படி பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல்தான் நாட்டின் தலைவரா இருந்தார். அப்போ இந்தியாவும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில, கவர்னர் ஜெனரலா மவுண்ட் பேட்டனே தொடர்ந்தாரு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26ல, இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1950 ஜனவரி 26ல நடைமுறைக்கு வந்ததுல இருந்த அந்த நிலை மாறி, இந்தியா முழுமையான குடியரசா மாறியது. அதைத்தான் நாம குடியரசு தினமா இப்போ கொண்டாடுறோம். இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் 1950ல அமல்படுத்தப்பட்டாலும், அவை 1949ஆம் ஆண்டு நவம்பா் மாசம் 26-ம் நாள் முதல் இந்திய அரசியலமைப்பு சபையால் அங்கீகாிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருதுங்குறது கூடுதல் தகவல்.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தோட இன்னொரு பெருமை என்னன்னா, இந்திய அரசியலைமைப்புதான் உலகிலேயே மிகப் பெரியது. இதுல 444 ஆர்ட்டிகிள்கள் இருக்கு. குடியரசுத் தினத்துலதான் தேசிய விருதுகளான பாரத் ரத்னா, கீர்த்தி சக்ரா, பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இப்படியான குடியரசு தினத்துலதான் இந்திய விமானப் படை உருவானது. குடியரசுத் தினக் கொண்டாட்டம் என்பது ஒரு நாள் முடிஞ்சு போறதுன்னு நாம நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, அது மூன்று நாள்கள், அதாவது ஜனவரி 29 வரைக் கொண்டாடப்படும்.

குடியரசு தினம் அறிவிக்கப்பட்ட நாள்லதான், இந்தியாவுக்கு பல்வேறு கூடுதல் பெருமைகளும் அங்கீகரிக்கப்பட்டன. இந்தியாவுக்கு தேசிய கீதம், தேசிய பாடல்னு இரண்டு இருக்கு. சுதந்திரம் கிடைச்ச மூணு வருடங்களுக்குப் பிறகுதான், அதாவது ஜனவரி 24, 1950லதான் இந்தியாவிற்கான தேசிய கீதமும் தேசிய பாடலும் அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ’ஜன கன மன’ என்று தொடங்குவது இந்திய தேசிய கீதமாகவும், ‘வந்தே மாதரம்’ என்பது இந்திய தேசிய பாடலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இரண்டையும் இயற்றியவர் ரவீந்திரநாத் தாகூர் நம்மில் பலர் நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, இந்திய தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடலை மட்டும்தான் ரவீந்திரநாத் தாகூர் இயற்றினார். பங்கிம் சந்திர சாட்டர்ஜி இசையமைத்த ’வந்தே மாதரம்’ என்கிற பாடலை, 1896ல முதன்முதலில் பாடியவர் ரவீந்திரநாத் தாகூர். எழுதியவர் யார் தெரியுமா? அந்த பாடலுக்கு இசையமைத்த அதே பங்கிம் சந்திர சாட்டர்ஜிதான்! 1980ல அவர் எழுதிய ’ஆனந்த்மத்’ என்ற நாவலின் ஒரு பகுதியாக எழுதப்பட்ட இந்தப் பாடல்தான் பின்னாளில் இந்திய தேசிய பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூடுதல் தகவல் என்னன்னா, ரவீந்திரநாத் தாகூர்தான் வங்காளத்தின் தேசிய கீதத்தையும் எழுதினார். 1905ல இரவீந்திரநாத் தாகூர் எழுதின ’அமர் சோனார் பங்களா‘-ன்ற பாடலோட முதல் பத்து வரிகள்தான் வங்காளத்தோட தேசியப் பாடலா, 1971ல விடுதலைப் போரப்போ ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குடியரசு
குடியரசு

இப்படி சுதந்திரம் கிடைத்தப்பிறகு சுயமரியாதை மிக்கவர்களா நம்மை மாற்றின இந்த குடியரசு தினத்துக்கு, சுதந்திர தினத்தைவிட கூடுதல் மதிப்பிருக்கு. உலக சரித்திரத்துலையே, 150 ஆண்டுக்காலம் தொடர்ந்து சுதந்திரத்துக்காக போராடிய நாடு வேற எதுவுமில்ல. அப்பேர்ப்பட்ட ஒரு போராட்டத்துலதான், உலக மக்கள்தொகையில ஐந்திலொரு பகுதியினராக உள்ள இந்தியர்கள் ஈடுபட்டார்கள் என்பதும் வரலாற்றில் தவிர்க்கமுடியாதது. எப்படி உலக வரலாற்றில் இந்திய தேசத்தோட விடுதலைப் போராட்டத்தைத் தவிர்க்கமுடியாதோ, அதே மாதிரிதான் இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றுல தமிழ்நாட்டின் பங்கையும் தவிர்க்க முடியாது. பாளையக்காரர்களோட எதிர்ப்பு, 1750ல் இருந்து 1770 வரையிலான காலக்கட்டத்தில் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், முத்து வடுகுநாதர் போன்றோரின் போராட்டங்கள், 1770 முதல் 1790 வரை வேலுநாச்சியார் மற்றும் மருதுபாண்டியர்களின் கிளர்ச்சி, 1790களுக்குப் பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் எழுச்சி, முத்துராமலிங்க சேதுபதி, தமிழ்நாட்டின் புரட்சிக் குழுக்கள், படை உதவிகள், தூந்தாஜி வாக்கின் ஆதரவு நடவடிக்கைகள், பழனிச் சதித்திட்டம், மருதுபாண்டியனின் நடவடிக்கைகள், கோயமுத்தூர்க் கோட்டை மோதல், 1806ல் தொடங்கிய வேலூர் புரட்சி, வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் என்று தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றைத் தவிர்த்து இந்திய தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை நம்மால சிந்திக்கவே முடியாது. சிந்திக்கவே முடியாதுங்குறபோது, எப்படித் தவிர்க்கமுடியும்? தவிர்க்கும் நடவடிக்கைகள் எப்படி வெற்றியடையும்?

அனைவருக்கும் ஒருங்கிணைந்த இந்திய தேசத்தின் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!