Published:Updated:

FIFA: வானவில் நிற உடை; தடுப்புக் காவல் - அமெரிக்கப் பத்திரிகையாளர் கத்தாரில் கொல்லப்பட்டாரா?!

அமெரிக்கப் பத்திரிகையாளர் கிராண்ட் வால்
News
அமெரிக்கப் பத்திரிகையாளர் கிராண்ட் வால் ( ட்விட்டர் )

அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே உயிரிழந்தாரா அல்லது மருத்துவமனையில் உயிரிழந்தாரா என்பது சரிவரத் தெரிவிக்கப்படவில்லை.

Published:Updated:

FIFA: வானவில் நிற உடை; தடுப்புக் காவல் - அமெரிக்கப் பத்திரிகையாளர் கத்தாரில் கொல்லப்பட்டாரா?!

அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே உயிரிழந்தாரா அல்லது மருத்துவமனையில் உயிரிழந்தாரா என்பது சரிவரத் தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்கப் பத்திரிகையாளர் கிராண்ட் வால்
News
அமெரிக்கப் பத்திரிகையாளர் கிராண்ட் வால் ( ட்விட்டர் )

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 18-ம் தேதி வரை கத்தார் நாட்டில் நடைபெறவிருக்கின்றன. இந்தப் போட்டிகளைப் பதிவுசெய்ய அமெரிக்காவின் ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளரான (48) கிராண்ட் வால் கத்தார் (US journalist Grant Wahl) சென்றிருக்கிறார். இந்த நிலையில் நேற்று (9-12-22) கத்தாரின் லுசைல் ஐக்கோனிக் விளையாட்டு அரங்கில் நடந்த அர்ஜென்டினா - நெதர்லாந்துக்கு இடையேயான கால் இறுதி சுற்றைப் பதிவுசெய்துகொண்டிருக்கையில், நிலைதடுமாறி சரிந்து விழுந்திருக்கிறார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதையடுத்து அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க பத்திரிகையாளர் கிராண்ட் வால்
அமெரிக்க பத்திரிகையாளர் கிராண்ட் வால்
ட்விட்டர்

இது குறித்து கிராண்ட் வால் சகோதரர் எரிக் வால் தன் சமூக வலைதளப் பக்கத்தில், "என் பெயர் எரிக் வால். நான் வாஷிங்டன்னில் வசித்துவருகிறேன். கிராண்ட் வால் என் சகோதரர். உலக்க கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கியபோது, அதைப் பதிவுசெய்ய கிராண்ட் வால் கத்தாரின் அல் ரயானில் உள்ள அகமத் பின் அலி அரங்குக்குச் சென்றார். அப்போது அவர் LGBTQ சமூகத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வானவில் நிறங்களை உடைய டீஷர்ட்டை அணிந்து சென்றார். அதற்காக அவர் முதலில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர் இது குறித்து கைப்பேசியில் பதிவிட முற்பட்டபோது, அவரிடமிருந்து அந்தக் கைப்பேசியை பிடுங்கிவிட்டனர். அவரைத் தடுப்புக் காவலிலும் வைத்தனர். பிறகு, அவரிடம் அந்த அரங்கின் பாதுகாவலரும் ,FIFA பிரதிநிதியும் மன்னிப்புக் கோரினர்.

என் சகோதரர் மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். ஆனால், அவருக்கு இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்ததாக என்னிடம் கூறினார். அவர் அந்த உடையை அணிந்து செல்ல நான்தான் காரணம். நான் ஓரின ஈர்ப்பாளர் . அரங்கில் அவர் நிலைதடுமாறி சரிந்து விழுந்ததும் அவருக்கு சிபிஆர் முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாரா அல்லது மருத்துவமனையில் உயிரிழந்தாரா என்பது சரிவரத் தெரிவிக்கப்படவில்லை. என் சகோதரர் இறந்துவிட்டார் என்பதை நான் நம்பவில்லை. அவர் கொல்லப்பட்டார் என்று நான் நம்புகிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

FIFA: வானவில் நிற உடை; தடுப்புக் காவல் - அமெரிக்கப் பத்திரிகையாளர் கத்தாரில் கொல்லப்பட்டாரா?!

அண்மையில், கிராண்ட் வால் தன் சமூக வலைதளங்களில், "கத்தாரிலுள்ள மருத்துவமனை முகாமுக்குச் சென்றிருந்தேன். என்னை சோதித்த மருத்துவர்கள், எனக்கு மூச்சுக்குழாயில் பிரச்னை (Bronchitis) இருக்கலாம் என்றனர். மூன்று வாரங்களாக சிறிது நேரத் தூக்கம், அதிக மன அழுத்தம், அதிகமான வேலை என்றிருந்தேன். இதனால் அசௌகரியத்தையும் உணர்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரின் மறைவுக்கு, அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு (US Soccer Federation) ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறது.